• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • உலக அல்சைமர் தினம் 2021 : அல்சைமர் நோய் என்றால் என்ன..? காரணம் மற்றும் அறிகுறிகள்

உலக அல்சைமர் தினம் 2021 : அல்சைமர் நோய் என்றால் என்ன..? காரணம் மற்றும் அறிகுறிகள்

 அல்சைமர்

அல்சைமர்

அல்சைமர் எனப்படும் அறிவாற்றல் இழப்பு அல்லது ஞாபக மறதி நோய் மிகவும் பொதுவான ஒரு நோய் நிலையாக இருக்கிறது. சாதாரண மறதி நோய் தானே அல்சைமர் என்று இதை கடந்து சென்று விட முடியாது.

 • Share this:
  ஆண்டுதோறும் செப்டம்பர் 21ம் தேதி உலக அல்சைமர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உலக அல்சைமர் தினம் 2021 அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் அல்சைமர் நோயை பற்றியும் அதனோடு தொடர்புடைய பொதுவான முதுமை மறதியான டிமென்ஷியா நிலை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவும் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில் வசிக்கும் மக்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் 60 வயதை கடந்த முதியவர்கள் இருக்கின்றனர். இவர்களது எண்ணிக்கையில் காணப்படும் அதிகரிப்பு காரணமாக இவர்களுக்கு வர கூடிய நோய் ஆபத்தும் அதிகரித்து காணப்படுகிறது.

  இதில் அல்சைமர் எனப்படும் அறிவாற்றல் இழப்பு அல்லது ஞாபக மறதி நோய் மிகவும் பொதுவான ஒரு நோய் நிலையாக இருக்கிறது. சாதாரண மறதி நோய் தானே அல்சைமர் என்று இதை கடந்து சென்று விட முடியாது. ஏனென்றால் வயதானவர்களின் மூளை செல்களை சிறிது சிறிதாக சிதைக்கும் தன்மை கொண்டது. அல்சைமர் நோயால் முதியவர்கள் படிப்படியாக தங்களது நினைவாற்றலை இழந்து, ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களையும், சுற்றத்தாரை பற்றிய நினைவுகளையும் கூட இழக்க வைத்து விடும் அளவுக்கு மோசமானது இந்த அல்சைமர் நோய்.

  எனவே ஆண்டுதோறும் செப்டம்பர் 21 இந்நோயின் பொதுவான அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உலகளவில் அல்சைமர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மூளை செல்களை மோசமாக தாக்கியழிக்கும் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல நாடுகளில் இன்றைய தினம் "உலக அல்சைமர் தினம் 2021"கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் குறிப்பிட்ட சில நாடுகளில் இந்நோய் பற்றிய விழிப்புணர்வை பரப்ப சில வாரங்கள் வரை அனுசரிக்கப்படுகிறது.  பெயர் வந்தது எப்படி?

  1901-ஆம் ஜெர்மனியை சேர்ந்த மனநல மருத்துவர் அலோயிஸ் அல்சைமர், ஒரு 50 வயதான ஜெர்மன் பெண்ணுக்கு இந்நோயின் முதல் நிகழ்வை கண்டறிந்தார். எனவே இந்த கோளாறுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. கடந்த 1984-ல் Alzheimer Disease International உருவாக்கப்பட்டாலும், 1994-ல் தான் செப்டம்பர் 21 உலக அல்சைமர் தினமாக அறிவிக்கப்பட்டது.

  உங்களின் இந்த 6 மோசமான பழக்கங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்கின்றன : இன்றே கைவிடுங்கள்...

  அறிகுறிகள்:

  துவக்க கால அல்சைமர் நோய் அறிகுறி என்பது குறுகிய கால நினைவாற்றல் இழப்பாக தான் இருக்கிறது. அல்சைமர் நோயின் அறிகுறிகளை பொறுத்து தீவிரம் மாறும்.

  * எதையும் நினைவில் வைத்து கொள்ள முடியாமல் அடிக்கடி மறப்பது

  * நன்கு பழகியவர்களை கூட மறந்து விடுவது

  * அதிக குழப்பம்

  * அன்றாட இயல்பு வாழ்க்கை செயல்களை செய்வதில் சிரமம்

  * எடை இழப்பு

  * ஒரே விஷயத்தை பற்றியே அடிக்கடி பேசுவது உள்ளிட்ட பல அறிகுறிகள் உள்ளன.  காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள்:

  அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஏனென்றால் இது சில நேரங்களில் முதியவர்ளை மட்டுமின்றி 40 - 45 வயது உள்ளவர்களுக்கு கூட யற்படுவதை பார்க்க முடிகிறது. பெரும்பாலான மக்களுக்கு, அல்சைமர் நோய் மரபணு, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவை உள்ளிட்டவை காலப்போக்கில் மூளையை பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

  சில நேரங்களில் பல உடல் செயல்பாடுகளை இழக்க வழிவகுக்கும் அல்சைமர் நோய், மரபணு, குடும்ப வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவை, வயது முதிர்ச்சி, பாலினம், தலையில் ஏற்படும் பலத்த காயங்கள், அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், சீரான தூக்கமின்மை பழக்கம், அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் எடுத்து கொள்வது உள்ளிட்டவை ஆபத்து காரணிகளாக குறிப்பிடப்படுகின்றன.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sivaranjani E
  First published: