Home /News /lifestyle /

உலக எய்ட்ஸ் தினம் 2021: எய்ட்ஸ் குறித்த கட்டுக்கதைகளும், உண்மை தகவல்களும்..!

உலக எய்ட்ஸ் தினம் 2021: எய்ட்ஸ் குறித்த கட்டுக்கதைகளும், உண்மை தகவல்களும்..!

உலக எய்ட்ஸ் தினம் 2021

உலக எய்ட்ஸ் தினம் 2021

ஒருவரை தொடுவதன் மூலமாகவோ அல்லது சளி மூலமாகவோ எய்ட்ஸ் பிறருக்கு பரவாது. மாறாக எய்ட்ஸ் நோய் கொண்ட ஒருவரின் இரத்தமானது நேரடியாக நம்மிடம் கலக்கும்போது மட்டுமே எய்ட்ஸ் நோய் பரவும்.

கொடிய நோய்களில் ஒன்றான எய்ட்ஸ் தொற்றை ஒழிக்க உலக நாடுகள், பல ஆண்டுகளாக போராடி வருகின்றன. ஆனால் இதுவரை இந்த நோயை ஒழிக்க முடியவில்லை. உயிர்கொல்லி நோயான எய்ட்ஸை ஒழிக்க ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து மக்களிடம் பல்வேறு பிரச்சாரங்கள் நடத்தப்படும். அந்த வகையில் எய்ட்ஸ் நோய் பற்றி மக்கள் பல ஆண்டுகளாக நம்பி வரும் சில கட்டுக்கதைகள் பற்றி தெரிந்து கொண்டு மருத்துவ ரீதியாக விழிப்புணர்வை பெறுவோம்.

கட்டுக்கதை 1: சளி, இரும்பல் மற்றும் பிறரை தொடுவதன் மூலம் எய்ட்ஸ் நோய் மற்றவர்களுக்கு பரவும்.

உண்மை: ஒருவரை தொடுவதன் மூலமாகவோ அல்லது சளி மூலமாகவோ எய்ட்ஸ் பிறருக்கு பரவாது. மாறாக எய்ட்ஸ் நோய் கொண்ட ஒருவரின் இரத்தமானது நேரடியாக நம்மிடம் கலக்கும்போது மட்டுமே எய்ட்ஸ் நோய் பரவும்.

கட்டுக்கதை 2: எய்ட்ஸ் தொற்று உறுதியானவர் ஒரு சில மாதங்களில் இறந்து விடுவார்.

உண்மை: தற்போதுள்ள அறிவியலின் உதவியுடனும், தொழில்நுட்பத்தின் வார்ச்சியினாலும் எய்ட்ஸ் நோய் தொற்றுள்ள ஒருவரின் வாழ்நாட்களை அதிகரிக்க முடிகிறது. எனவே எய்ட்ஸ் வந்தால் ஒரு சில மாதங்களில் உடனே இறந்து விடமாட்டார்கள்.

கட்டுக்கதை 3: எய்ட்ஸ் உள்ள பெண்கள் கருத்தரித்தால் அவரின் குழந்தைக்கும் எய்ட்ஸ் நோய் தொற்று வரும்.

உண்மை: எச்.ஐ.வி பாசிட்டிவ் உள்ள பெண் கருத்தரித்தால் அவரின் கருவில் உள்ள குழந்தைக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை, சிசேரியன் மற்றும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பிறக்கும் குழந்தைக்கு எய்ட்ஸ் தொற்று பரவும் அபாயத்தை 2%-க்கும் குறைவாகக் குறைக்கலாம்.



கட்டுக்கதை 4: எச்.ஐ.வி என்பது ஒரு வைரல் நோய். எனவே இதற்கு ஆன்ட்டி பேக்டிரியால் அல்லது ஆன்ட்டி ஃபங்கள் மருந்துகள் உதவாது.

உண்மை: எச்.ஐ.வி என்பது ஒருவரின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பொதுவாக பாதிக்கும். மேலும் இதனால் ஒருவருக்கு பாக்டீரியா அல்லது பூஞ்சையால் தொற்றுகள் ஏற்பட கூடும். எனவே ஒருவரின் CD 4 எண்ணிக்கையை பொறுத்து அவருக்கு ஆன்ட்டி பேக்டிரியால் அல்லது ஆன்ட்டி ஃபங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கட்டுக்கதை 5: எய்ட்ஸ் உள்ள இருவரும் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டால் பாதிப்பு எதுவும் வராது.

உண்மை: எய்ட்ஸ் தொற்றானது பல்வேறு வகைகளை கொண்டுள்ளது. எனவே ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபட்டால் நோயின் தீவிரம் அதிகரித்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

கட்டுக்கதை 6: எனக்கு எய்ட்ஸ் நோய்க்கான எந்த அறிகுறிகளும் இல்லை. எனவே எனக்கு எச்.ஐ.வி கிடையாது.

உண்மை: பொதுவாக ஒருவருக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ்வாக இருந்தால் அதற்கான அறிகுறிகள் சில ஆண்டுகள் கழித்தே தென்படும். எனவே ஒருவருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும் எச்.ஐ.வி டெஸ்ட் எடுத்துக்கொள்வது நல்லது.



கட்டுக்கதை 7: உடலுறவு வைத்து கொள்வதற்கு முன் எச்.ஐ.வி தடுக்க மருந்துகள் எடுத்து கொண்டால் எய்ட்ஸ் வராது.

உண்மை: உடலுறவுக்கு முன் மருந்துகளை எடுத்து கொண்டாலும் எய்ட்ஸ் வராது என்பதற்கான உத்தரம் எதுவும் இல்லை. இந்த மருந்துகள் எய்ட்ஸ் பாதிப்பது குறைக்குமே தவிர அதை முழுமையாக வராமல் தடுக்காது.

உலக எய்ட்ஸ் தினம் 2021 : ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறது - யுனிசெஃப்

கட்டுக்கதை 8: எய்ட்ஸ் தொற்று உள்ள ஒருவருக்கு உணவு, நீர், சமைக்கும் பாத்திரங்கள் போன்றவற்றை பகிர்வதன் மூலம் அவர்களுக்கும் எய்ட்ஸ் தொற்று பரவும்.

உண்மை: எச்.ஐ.வி உள்ள ஒருவரிடம் உங்கள் உணவு, நீர், பாத்திரங்கள் போன்றவற்றை பகிர்வதால் உங்களுக்கு எய்ட்ஸ் வராது. மேலும் அவர் சமைத்த உணவை நீங்கள் சாப்பிட்டாலும் உங்களுக்கு எய்ட்ஸ் பரவாது.



 

கட்டுக்கதை 9: நான் டெஸ்ட் எடுத்தபோது எனக்கு எச்.ஐ.வி நெகட்டிவ் வந்தது. எனவே அதன் பிறகு நான் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு வைத்து கொள்ளலாம்.

உண்மை: எச்.ஐ.வி தொற்றின் பாதிப்பு உடலில் சில காலங்களுக்கு பிறகு தெரியும். எனவே எச்.ஐ.வி டெஸ்ட் எடுப்பது மட்டுமன்றி GP24 assay போன்ற பல்வேறு டெஸ்ட்களையும் எடுத்தாக வேண்டும். மேலும் இந்த பரிசோதனைகளை 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை செய்தாக வேண்டும்.

கட்டுக்கதை 10: நான் எச்.ஐ.விக்கான சிகிச்சை எடுத்து கொள்வதால் எனக்கு இந்த தொற்று மேலும் பரவாது.

உண்மை: எச்.ஐ.வி நோய்க்கான சிகிச்சைகள் என்பது ஒருவரின் உடலில் அதிக அளவில் தொற்று பரவாமல் தடுக்கும் தவிர, இதை சிகிச்சையின் மூலம் முழுவதுமாக குணப்படுத்த முடியாது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் சிகிச்சைக்கும் பிறகும் அவர் எச்.ஐ.வி தொற்று கொண்டுள்ளார் என்றே அர்த்தம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: AIDS, HIV, WORLD AIDS DAY

அடுத்த செய்தி