Home /News /lifestyle /

உலக எய்ட்ஸ் தினம் 2020: கொடிய எச்ஐவி நோய் குறித்த விழிப்புணர்வை பகிர்வோம்!

உலக எய்ட்ஸ் தினம் 2020: கொடிய எச்ஐவி நோய் குறித்த விழிப்புணர்வை பகிர்வோம்!

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம்

இந்த நோய் முற்றிலும் குணப்படுத்த முடியாதது. ஆனால் நோயின் தாக்கத்தை தடுக்க ஒருவர் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி நோயுடன் வாழும் மக்களுக்கும், எய்ட்ஸ் காரணமாக உயிர் இழந்தவர்களுக்கும் ஆதரவைக் கட்டுவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக எய்ட்ஸ் தினம் முதன்முதலில் 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாமஸ் நெட்டர் மற்றும் ஜேம்ஸ் பான் ஆகியோரால் கொண்டுவரப்பட்டது.

எய்ட்ஸ் உலகளாவிய திட்டத்தின் பொது தகவல் அதிகாரிகளாக இவர்கள் இருந்தனர். எய்ட்ஸ் தினம் குறித்த தங்களது யோசனையை எய்ட்ஸ் குளோபல் புரோகிராம் இயக்குனருடன் இவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

பிறகு இந்த யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு 1988 டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டது. மேலும் உலக சுகாதாரத்திற்கான முதல் சர்வதேச நாள் இதுவாகும். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி அனுசரிக்கப்பட்டது வருகிறது. இந்த நிலையில், “உலகளாவிய ஒற்றுமை, பகிரப்பட்ட பொறுப்பு ” என்ற கருப்பொருள் அடிப்படையில் இந்தாண்டுக்கான உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் 2020 உலக எய்ட்ஸ் தினத்தன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஆரோக்கியம் ஒரு மனித உரிமை.

உலகளாவிய சுகாதார பாதுகாப்பை அடைய ஆரோக்கியம் முதலீட்டு முன்னுரிமையாக இருக்க வேண்டும். இந்த உலக எய்ட்ஸ் தினத்தன்று, கொரோனா வைரஸை கடந்து எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, உலகம் ஒற்றுமையுடன் நின்று பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். எய்ட்ஸ் என்பது மனித நோயெதிர்ப்பு குறைபாடுள்ள வைரஸ் (எச்.ஐ.வி) காரணமாக ஏற்படும் ஒரு நாள்பட்ட நோயாகும்.



இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு சேதமடைந்து, உடலின் நோய் எதிர்ப்பு சண்டை திறனையும் குறைக்கிறது. எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நோயாளி மற்ற நோய்களை எதிர்க்கும் திறனையும் இழக்கிறார். சிடி 4 செல் எண்ணிக்கை 200க்கும் குறைவாக இருக்கும் போது இந்த நிலை ஏற்படுகிறது. இது ஆரோக்கியமான நபர்களில் சுமார் 500 முதல் 1500 வரை காணப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள நாடுகளில் எச்.ஐ.வி பாதிப்பு பாதிக்கப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு நபர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:

1. இரத்தம், விந்து, ப்ரீ-செமினல் திரவம், யோனி மற்றும் மலக்குடல் திரவங்கள், மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்ப்பால் போன்ற உடல் திரவங்கள் மூலம் இது உடலில் பரவலாம்.

2. பாதிக்கப்பட்ட நபருடன் பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக்கொள்வது மற்றொரு நபருக்கு கொடிய நோயையும் ஏற்படுத்தலாம்.

3. ஊசிகள், ரேஸர் கத்திகள், கத்திகள் போன்றவற்றை பாதிக்கப்பட்ட நபருடன் பகிர்ந்து கொள்வதும் நோயின் பாதிப்பிற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.



நோயின் சில அறிகுறிகள் உள்ளன. இவை பின்வருமாறு:

1. காய்ச்சல்
2. தொண்டை புண்
3. தோல் வெடிப்பு
4. குமட்டல்
5. உடல் வலிகள்
6. தலைவலி
7. வயிற்று தொற்று போன்றவை

இந்த நோய் முற்றிலும் குணப்படுத்த முடியாதது. ஆனால் நோயின் தாக்கத்தை தடுக்க ஒருவர் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன. எச்.ஐ.வி எய்ட்ஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில், உடலுறவின் போது பாதுகாப்பைப் பயன்படுத்துதல், ஊசிகள், கத்திகள் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்ப்பது மற்றும் நல்ல உடல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: AIDS, WORLD AIDS DAY

அடுத்த செய்தி