ஜிம் செல்வதை விட வீட்டில் உடற்பயிற்சி செய்தால் விரைவாக எடை குறையும் - ஆய்வில் தகவல்

உடற்பயிற்சி கூடம் செல்லாததால் நேரம், பணம் மிச்சமாவதைக் காட்டிலும் உங்கள் இலக்கை பின்பற்றுவதற்கான உந்துதல் கிடைக்கும்

ஜிம் செல்வதை விட வீட்டில் உடற்பயிற்சி செய்தால் விரைவாக எடை குறையும் - ஆய்வில் தகவல்
உடற்பயிற்சி
  • News18
  • Last Updated: June 25, 2019, 5:49 PM IST
  • Share this:
உங்களுக்கு ஜிம் செல்ல நேரம் இல்லை என்றாலும் இனி கவலையே வேண்டாம். தற்போது வெளியாகியுள்ள ஆய்வில் உடற்பயிற்சிக் கூடங்கள் செல்வதைக் காட்டிலும் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை விரைவில் குறையும் எனக் கூறியுள்ளது.

ஜர்னல் ஆஃப் ஃபிஸியாலஜியில் வெளியிட்டுள்ள ஆய்வில் உடற்பயிற்சிக் கூடம் செல்லாததால் நேரம், பணம் மிச்சமாவதைக் காட்டிலும் உங்கள் இலக்கை பின்பற்றுவதற்கான உந்துதல் கிடைக்கும் எனக் கூறியுள்ளது.
இந்த ஆய்வில் உடல் பருமன் கொண்ட 32 பேர் வீட்டிலேயே 12 வாரங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டதில் அவர்களின் உடல் எடை விரைவில் குறைந்தது மட்டுமன்றி, ஒவ்வொரு நாளும் சுருசுருப்புடன் செயல்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் உடற்பயிற்சிக் கூடங்களைக் காட்டிலும் வீட்டில் சௌகரியமாக உணர்வதே அதற்குக் காரணம் என்கிறது.

அதுவும் ஹிட் உடற்பயிற்சிகள் என்று சொல்லக் கூடிய சைக்ளிங், ட்ரெட் மில் போன்றவற்றில் உடற்பயிற்சி செய்வதைக் காட்டிலும், வீட்டில் எந்தவிதக் கருவிகளுமின்றி தனக்குச் சௌகரியமான முறைகளைப் பின்பற்றி தீவிரமாகச் செய்தாலே உடல் எடைக் குறையும் என்று அந்த ஆய்வில் கூறப்படுகிறது.


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்