Work from Home ரொம்ப சவாலா இருக்கா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணி பாருங்க..

Work from Home ரொம்ப சவாலா இருக்கா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணி பாருங்க..

மாதிரி படம்

கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்து அவர்கள் வேலை செய்வதால் கண்கள் பாதிப்பு, தலைவலி, தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

  • Share this:
கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐ.டி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பெரும்பாலானோர் இன்றளவும் வீட்டில் இருந்தபடி தங்களின் வேலைகளை செய்து வருகிறார்கள். கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்து அவர்கள் வேலை செய்வதால் கண்கள் பாதிப்பு, தலைவலி, தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

நேரத்தை கணக்கிடுதல் :



செல்போன் அல்லது கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்துவிட்டால் நேரம் செல்வதுகூட தெரியாது. அந்தளவுக்கு கம்ப்யூட்டருக்குள் மூழ்கிவிடுவோம். தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து இருந்தால், கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் இருந்து வெளிப்படும் ஒளியானது, நம் கண்களையும், உடலையும் பாதிக்கும். இதனால், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு தொடர்ந்து ஸ்கிரீனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். வேலை அல்லது கம்ப்யூட்டர் கேம் என எதுவானாலும், நீண்ட நேரம் விளையாடுவதை தவிர்த்து, அதிலிருந்து வெளியேறிவிடுங்கள். கம்ப்யூட்டருக்கு அடிமையாகாமல், எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என தீர்மானித்து, அந்த நேரத்துக்குப் பிறகு கம்ப்யூட்டரில் இருந்து எழுந்துவிடுங்கள்

முன்னுரிமை கொடுத்தல்



ஒரு சிலர் கம்யூட்டர் முன்பு அமர்ந்து வேலையை தொடங்கிவிட்டால், முழு ஈடுபாட்டுடன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். நாள் முழுவதும் அப்படி வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் வேலையில் கவனம் செலுத்தும் அதேநேரத்தில் உங்கள் உடல் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். அதனால், நீண்ட நேரம் வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்காமல், இடையிடையே நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோருடன் சிறிது நேரம் செலவழித்து உரையாடுங்கள். இதனால், உங்களின் மனம் புத்துணர்ச்சிபெறும். மீண்டும் வேலையை தொடங்கும்போது, புத்துணர்ச்சியுடன் பணியாற்றுவீர்கள். கம்ப்யூட்டர் ஸ்கிரீன் பாதிப்பில் இருந்தும் விலகியிருப்பீர்கள். ஏற்கனவே நீங்கள் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்வதால், வீடியோ கால்களை தவிர்த்து ஆடியோ கால்கள் மூலம் நண்பர்களுடன் உரையாடுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

Notification App :



உங்கள் செல்போனில் நோடிபிகேசனை ஆப் செய்துவிடுங்கள். அடிக்கடி வரும் மெசேஜ்கள் மற்றும் மெஜேச் ரிங் டோன் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும். தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்தி வரும் உங்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்திவிடும். ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, நோடிபிகேசன்களை பார்வையிடுங்கள். பணி நேரத்துக்குப் பிறகு, கம்ப்யூட்டர் பார்ப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

பிரேக் எடுத்தல் :



கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்வதால் உங்கள் கண்களில் வறட்சி ஏற்பட்டு, பாதிப்புக்கு வழிவகுக்கும். அதனால், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது கம்ப்யூட்டர் ஸ்கிரீன் பார்ப்பதை தவிர்த்து கண்களுக்கு ரெஸ்ட் கொடுங்கள். வேலைக்கு ஓய்வு கொடுப்பதற்கும், கண்களுக்கு ஓய்வு கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதற்காக யூ டியூப் உள்ளிட்ட வீடியோ தளங்களில் நேரத்தை செலவிடாதீர்கள். கண்களை சிமிட்டாமல் கம்ப்யூட்டர் அல்லது செல்போன்களை பார்ப்பது உங்களின் உடல் உபாதைகளுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்

திரைகளை மாற்ற வேண்டாம் :



கம்ப்யூட்டரில் ஒரே ஒரு ஸ்கிரீனில் மட்டும் வேலை செய்வது பலருக்கு கடினமாக தோன்றுவதால், ஸ்கிரீன் கலர்களை அடிக்கடி மாற்றுபவர்கள் உண்டு. ஆனால், பல ஸ்கிரீன்களை அடிக்கடி மாற்றும்போது, செல்கள் மூளையின் நரம்புகளை அதிகமாக தூண்டுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இதனால், மனச்சோர்வு ஏற்பட்டு வேலையில் தொடர் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உங்களுக்கு தேவையான தகவல்களை ஆன்லைனில் சேகரித்து, ஒரே ஸ்கிரீனில் கொண்டு வந்து சேமித்து வைத்துக்கொள்ளும்போது, கவனம் சிதறாமல் பணியை தொடரலாம். மேலும், கண்களுக்கும் பாதிப்பு ஏற்படாது.
Published by:Sankaravadivoo G
First published: