உஷார்...! 9 மணி நேர வேலை பெண்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும் என ஆய்வில் தகவல்

இந்த ஆராய்ச்சியை 11,215 வேலைக்குச் செல்லும் ஆண்களிடமும், 12,188 வேலைக்குச் செல்லும் பெண்களிடமும் நடத்தியுள்ளனர்.

news18
Updated: February 27, 2019, 1:20 PM IST
உஷார்...! 9 மணி நேர வேலை பெண்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும் என ஆய்வில் தகவல்
மாதிரிப் படம்
news18
Updated: February 27, 2019, 1:20 PM IST
ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் அல்லது அதற்கும் மேல் வேலை செய்வதால் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு, அதிக அளவில் மன அழுத்தத்திற்கு உண்டாகும் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

வாரத்திற்கு 35-40 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால் அதற்கும் அதிகமாக 55 மணி நேரம் வேலை செய்வதால் 7.3 சதவீதம் மன அழுத்ததிற்கு உள்ளாகின்றனர்.

ஆனால் அதே 55 மணி நேரம் ஆண்கள் வேலை செய்தால் மன அழுத்தத்தின் அளவு குறைவாக இருப்பதாக லண்டன் கல்லூரி பல்கலைக்கழகம் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது.

இந்த ஆரய்ச்சியை ஜர்னல் ஆஃப் எபிடெமியோலஜி அண்ட் கம்யூனிட்டி ஹெல்த் (Journal of Epidemiology and Community Health) என்கிற தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியை 11,215 வேலைக்குச் செல்லும் ஆண்களிடமும், 12,188 வேலைக்குச் செல்லும் பெண்களிடமும் நடத்தியுள்ளனர்.

” இந்த ஆராய்ச்சி முற்றிலும் பெண்களைக் கண்காணித்து நடத்தப்பட்டதாகும். மன அழுத்தத்தைத் தாண்டி பல பிரச்னைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர். ஆனால் அதைச் சரியாக வரையறுக்க முடியாது.

ஒவ்வொறு பெண்ணுக்கும் வெவ்வேறான பிரச்னைகள் இருக்கின்றன. ஆண்களைக் காட்டிலும் அதிக நேரம் வேலை செய்யும் பெண்களுக்கு நேரமும் கூடுதலாகத் தேவைப்படுகிறது.

இதனால் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து சரியாக முடிக்க வேண்டும் என்கிற அழுத்தமும் ஒரு பக்கம் இருக்கிறது” என இந்த ஆராய்ச்சியின் தலைவர் கில் வெஸ்டோன் கூறியுள்ளார்.

அதேபோல் குறைந்த ஊதியத்திற்கு வார இறுதி நாட்களில் கூட வேலை செய்யும் பெண்களுக்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்படுகிறது. அதுவும் ஆண்கள் 3.4 சதவீதம் மட்டுமே மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும், பெண்கள் 4.6 சதவீதம் பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும் கூறியுள்ளது.

இறுதியாக வில் வெஸ்டோன் பேசுகையில் “ இந்த ஆராய்ச்சிக்குப் பிறகாவது பெண்களின் நிலை மாற வேண்டும் என நினைக்கிறோம். அவர்களின் பணிச் சுமையைக் குறைக்க வேண்டும். வேலை நேரத்தைத் தாண்டி வேலை வாங்காமல் இருக்க வேண்டும். இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால் எங்கள் குழு நிச்சயம் மகிழ்ச்சி அடையும் “ எனக் கூறியுள்ளார்.
First published: February 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...