வீட்டில் அலுவலகப் பணியால் தூக்கத்தை இழந்த இந்தியர்கள்..! ஆய்வு சொல்லும் ரிப்போர்ட்

சராசரி நாட்களில் அதாவது ஊரடங்கிற்கு முன் 46% பேர் 11 மணிக்கு முன்னரே தூங்கிவிடும் பழக்கம் கொண்டோர் எண்ணிக்கை தற்போது 39% க்கும் குறைவாக இருப்பதாகக் கூறியுள்ளது.

வீட்டில் அலுவலகப் பணியால் தூக்கத்தை இழந்த இந்தியர்கள்..! ஆய்வு சொல்லும் ரிப்போர்ட்
வீட்டில் அலுவலகப் பணி
  • Share this:
ஊரடங்கால் தனியார் நிறுவனங்கள் பல ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றக் கூறியுள்ளது. இதனால் பலரும் அலுவலக நேரத்தைக் கடந்து வேலை செய்வதாகவும், அதிக வேலையை கொடுப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் இந்த ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பெங்களூருவைச் சேர்ந்த வேக்ஃபிட் கோ நடத்திய ஆய்வில் வீட்டில் அலுவலக வேலையால் 67% இந்தியர்கள் தங்கள் தூக்கத்தை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் பலரும் 11 மணிக்கு மேல் தூங்குவது வாடிக்கையாகி விட்டதாகவும் அதில் 81% பேர் ஊரடங்கு முடிந்துவிட்டால் இந்த நிலைமை சரியாகிவிடும் என
நம்பிக்கைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
வீட்டிலிருந்து பணிபுரியும் 1,500 பேரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. சராசரி நாட்களில் அதாவது ஊரடங்கிற்கு முன் 46% பேர் 11 மணிக்கு முன்னரே தூங்கிவிடும் பழக்கம்
கொண்டோர் எண்ணிக்கை தற்போது 39% க்கும் குறைவாக இருப்பதாகக் கூறியுள்ளது.அதேபோல் 12 மணிக்குள் தூங்கும் பழக்கம் கொண்டோர் 25% இருந்ததாகவும். தற்போது அதே எண்ணிக்கைக் கொண்டோரில் 35% பேர் ஊரடங்கு காலத்தில் 12 மணிக்கு மேல் தூங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் 12 மணிக்கு மேல் அல்லது இரவு நேரம் கடந்து தூங்குவோரின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.


பார்க்க :
First published: April 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading