• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பாரிஜாத பூக்களில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா? தெரிந்துகொள்ளுங்கள்..!

பாரிஜாத பூக்களில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா? தெரிந்துகொள்ளுங்கள்..!

பாரிஜாத பூ

பாரிஜாத பூ

பாரிஜாத பூக்கள் மட்டுமின்றி, பாரிஜாத மரமும், இலியாளும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குவதாக விளக்கியுள்ளார். இந்த பூக்களில் ஆன்டி-ஆக்சிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஆகிய குணங்கள் உள்ளன.

  • Share this:
பாரிஜாத பூக்களை இரவு மல்லி பவள மல்லி என்றும் அழைப்பார்கள். சின்னஞ்சிறிய வெள்ளை நிற இதழ்களோடும் ஆரஞ்சு நிற காம்போடும் பார்ப்பதற்கு மிக மிக அழகாக இருக்கும் பாரிஜாத பூக்கள் பூஜைக்கு மட்டுமானதல்ல. இந்தப் பூக்களில் பல விதமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. மருத்துவர் டிக்ஸா பவ்சார் பாரிஜாத பூக்களினால் நமக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி விளக்கியுள்ளார். ‌‌இதன் தாவரவியல் பெயர் Nyctanthes arbor-tristis ஆகும்.

பாரிஜாத பூக்கள் மட்டுமின்றி, பாரிஜாத மரமும், இலியாளும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குவதாக விளக்கியுள்ளார். இந்த பூக்களில் ஆன்டி-ஆக்சிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஆகிய குணங்கள் உள்ளன. இவை மட்டுமின்றி, பூக்கள் பல்வேறு குணமாக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது என்று தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மருத்துவர் பகிர்ந்துள்ளார்.

ஆன்டி-ஆக்சிடன்ட் பண்பு, உடலில் உள்ள செல்களுக்கு ஆக்சிடேஷன் பாதிப்பு எற்படுதவதை தடுத்து, உங்களை இளமையாக வைத்திருக்கிறது. அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) உடலின் பாகங்களில் மற்றும் உறுப்புகளில் ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் அழற்சிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது. ஆன்டி-பாக்டீரியா, பாக்டீரியா நுண்கிருமியால் உண்டாகும் தொற்று பாதிப்பை நீக்கி உதவுகிறது.

பாரிஜாத பூ மற்றும் மரத்தினால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.



சியாடிகா வலி :

சியாட்டிகா என்பது இடுப்பின் பக்கவாட்டு பகுதியிலிருந்து, கணுக்கால்வரை நீளும் உள்ள நரம்பில் ஏற்படும் அழற்சி மற்றும் வீக்கம் ஆகியவற்றால் உண்டாகும் தீவிரமான வலியாகும். இந்த வலியை நீக்குவதற்கு பாரிஜாத பூக்கள் உதவுகின்றது. 3 முதல் 4 பாரிஜாத மர இலைகளை பறித்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சியாடிகா வலி குறையும்.

ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு வலி :

பாரிஜாத மரத்தின் பட்டை இலைகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை 5 கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டு 200 கிராம் தண்ணீரில் சேர்த்து ஒரு டிகாஷன் மாதிரி தயாரித்துக் கொள்ளுங்கள். இதனை வாரம் மூன்று குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.

வறட்டு இருமலுக்கான தீர்வு :

பாரிஜாத மரத்தின் இலைகளை அம்மியில் நன்றாக அரைத்து அதன் சாறை எடுத்து, தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமலுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும்.



சளி, இருமல் மற்றும் சைனஸ் தொந்தரவு :

பாரிஜாத பூக்களின் தேநீர் குடிப்பது, உங்களுக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய சளி, இருமல் மற்றும் சைனஸ் தொந்தரவிலிருந்து விரைவாக தீர்வு கிடைக்கும். நான்கு முதல் ஐந்து பாரிஜாத பூக்கள், இரண்டு முதல் மூன்று பாரிஜாத மரத்தின் இலைகள் மற்றும் 2 முதல் 3 துளசி இலைகளை சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி தேநீராக குடிக்கவும் இனிப்பு தேவை என்றால் தேன் சேர்த்து குடிக்கலாம்.

உருளைக்கிழங்கில் இத்தனை நன்மைகளா? ஆய்வில் வெளியான தகவல்

படபடப்பு மற்றும் பதற்றம் :

உடல் ரீதியான பாதிப்புகளுக்கு மட்டுமின்றி பாரிஜாத பூக்கள் மன ரீதியான பாதிப்புகளுக்கும் மருந்தாக, நிவாரணமாக உள்ளது. அரோமாதெரபி எனப்படும் நறுமண மூலிகை எண்ணெய் சிகிச்சையில் பாரிஜாத பூக்களின் எண்ணெய், மன அழுத்தம் மற்றும் மன பதற்றத்துக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. பவளமல்லியின் வாசம், உங்கள் மூளையில் செரோட்டோனின் சுரக்க உதவும். இது உங்கள் பதற்றத்தை குறைத்து, அமைதிப்படுத்தும்.

மேலே குறிப்பிட்டுள்ளது மட்டுமின்றி, வயிற்றுப்பூச்சிகள், சொறி மற்றும் படைத்தாமரை, காய்ச்சல் ஆகியவற்றுக்கும் நிவாரணமாக பவளமல்லி நிவாரணமாக இருக்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: