Women's Health : பெண்களின் மன ஆரோக்கியம் அவர்களின் உணவு பழக்கத்துடன் அதிக தொடர்பைக் கொண்டுள்ளது : ஆய்வில் தகவல்!

மன ஆரோக்கியம்

ஆண்களின் ஆரோக்கியத்தை விட பெண்களின் மன ஆரோக்கியம் உணவுக் காரணிகளுடன் அதிக தொடர்பு கொண்டிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.

  • Share this:
நியூயார்க்கின் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சியின் படி, ஆண்களை காட்டிலும் பெண்களின் மன ஆரோக்கியம் அவர்களின் உணவுக் காரணிகளுடன் அதிக தொடர்பைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வு தொடர்பான கட்டுரை பெர்சனலைசடு மருத்துவ இதழில் 'டயட் தனிப்பயனாக்குதல் உடற்பயிற்சியை ஊக்குவித்தல் மற்றும் முதிர்ந்த பெரியவர்களில் மன நலனை மேம்மபடுத்துதல்: ஒரு மத்தியஸ்தராக உடற்பயிற்சியின் பங்கு' (Customization of Diet May Promote Exercise and Improve Mental Wellbeing in Mature Adults: The Role of Exercise as a Mediator) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

முன்னதாக பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய ஆய்வுகளின் உதவி பேராசிரியரான லினா பெக்டேச் முன்பு உணவு மற்றும் மனநிலை குறித்த ஆராய்ச்சியை வெளியிட்டிருந்தார். அதில் உயர்தர உணவு ஒருவரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் உணவைத் தனிப்பயனாக்குவது 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடையே மனநிலையை மேம்படுத்துகிறதா என்பதை சோதிக்க அவர் விரும்பினார்.



இதற்காக ஆராய்ச்சி உதவியாளர் காரா எம். பேட்ரிஸியுடன் இணைந்து, பெக்டேச் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களில் மன உளைச்சலுடன் தொடர்புடையவர்களை பல்வேறு உணவுக் குழுக்களாக பிரித்தார். அத்துடன் அவர்களின் உடற்பயிற்சி அதிர்வெண் மற்றும் மன உளைச்சல் தொடர்பாக வெவ்வேறு உணவு முறைகளையும் ஆய்வு செய்தார்.

அதில், ஆண்களின் ஆரோக்கியத்தை விட பெண்களின் மன ஆரோக்கியம் உணவுக் காரணிகளுடன் அதிக தொடர்பு கொண்டிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. மன உளைச்சல் மற்றும் உடற்பயிற்சி அதிர்வெண் வெவ்வேறு உணவு மற்றும் வாழ்க்கை முறைகளுடன் தொடர்புடையது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மனநலத்தை மேம்படுத்த உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளைத் தனிப்பயனாக்குவதற்கான கருத்தை இந்த ஆய்வுகள் ஆதரிக்கின்றன.

இதுகுறித்து பெக்டேச் கூறியதாவது, "ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல், ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றுதல், உடற்பயிற்சி மற்றும் மன நல்வாழ்வு ஆகியவற்றுக்கு இடையேயான பொதுவான உறவை நாங்கள் கண்டறிந்தோம்" என்று கூறினார்.



மேலும் அவர் கூறுகையில், "சுவாரஸ்யமாக, ஆரோக்கியமற்ற உணவு முறைகளைப் பொறுத்தவரை, ஆண்களை விட பெண்களில் மன உளைச்சலின் அளவு அதிகமாக இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது ஆண்களை விட பெண்கள் ஆரோக்கியமற்ற உணவுக்கு ஆளாகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. இந்த ஆய்வு மற்றும் பிறவற்றின் அடிப்படையில், முதிர்ச்சியடைந்த பெண்களில் மன உளைச்சலுக்கு முதல் காரணமாக அமைவது உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை தான். துரித உணவுகளை சாப்பிடுவது, காலை உணவைத் தவிர்ப்பது, காஃபின் மற்றும் உயர் கிளைசெமிக் (எச்.ஜி) உணவு ஆகிய அனைத்தும் வயது முதிர்ந்த பெண்களில் மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு தொடர்புடையது " என்று பெக்டேச் கூறினார்.

மேலும் பழங்கள் மற்றும் அடர் பச்சை இலை காய்கறிகள் (DGLV) மன நலனுடன் தொடர்புடையவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் இருந்து நாம் கற்றுக்கொண்ட கூடுதல் தகவல் என்னவென்றால், உடற்பயிற்சி மற்றும் நல்ல ஆரோக்கியமான உணவு, துரித உணவுகளை சாப்பிடுபவர்களோடு ஒப்பிடும்போது மன உளைச்சலை கணிசமாகக் குறைத்தது என்று பெக்டேச் கூறியுள்ளார்.

Pregnancy Care : கர்ப்பிணிப் பெண்கள் பூண்டு சாப்பிட்டால் இத்தனை பக்கவிளைவுகளா..? 

இந்த ஆராய்ச்சி சுகாதார நிபுணர்களுக்கு உடற்பயிற்சியை மேம்படுத்துவதற்கும் முதிர்ச்சியடைந்த பெரியவர்களில் மனநலத்தை மேம்படுத்துவதற்கும் உணவுத் திட்டங்களைத் கஸ்டமைஸ் செய்ய தேவையான கட்டமைப்பை வழங்குகிறது. மன உளைச்சலில் உணவின் பங்கை மதிப்பிடும்போது சமூகத்திற்கு இந்த ஆராய்ச்சி ஒரு புதிய முன்னோக்கையும் வழங்கக்கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இளைஞர்கள் மற்றும் பெண்களுடன் ஒரு இணையான ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். அதில் நிம்மதியான தூக்கத்திற்கு கூடுதலாக உணவு தரத்தையும், பருவகால மாற்ற மாறுபாடுகளையும் ஒரு நீண்ட கண்ணோட்டத்தில் கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published: