Home /News /lifestyle /

பெண்கள் தூக்கமின்மைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டால் எலும்புகள் பலவீனமாகுமா..?

பெண்கள் தூக்கமின்மைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டால் எலும்புகள் பலவீனமாகுமா..?

பெண்கள் தூக்கமின்மை பிரச்னையால் தினமும் குறைந்த நேரமே தூங்கி எழுந்தால் அவர்களுக்கு எலும்பு பலவீனமடைந்து எலும்புப் புரை (osteoporosis) பிரச்னை வரும் என ஆய்வு கூறுகிறது.

அப்படி எலும்புப் புரை உருவாகினால் எலும்புகள் உடைவதற்கான ஆபத்து அதிகம் என்கிறது ஆய்வு.

இந்த ஆய்வை அமெரிக்காவைச் சேர்ந்த பஃப்பல்லோ பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. Journal of Bone and Mineral Research இதழ் இதை வெளியிட்டுள்ளது. இதற்காக கிட்டத்தட்ட 11,084 மாதவிடாய் நிற்றல் தருவாயில் உள்ள பெண்களை பரிசோதனை செய்துள்ளது.

நீங்கள் உணவை மென்று சாப்பிடுவீர்களா..? வேகமாக சாப்பிடுவீர்களா..? உங்களுக்குத்தான் இந்த செய்தி

அவர்கள் அனைவருமே இரவு குறைந்தது 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரமே தூங்குவதாகக் கூறியுள்ளனர். பின் அவர்களின் மொத்த உடல், இடுப்பு, கழுத்து மற்றும் முதுகுத் தண்டு ஆகிய இடங்களை பரிசோதித்ததில் 63% எலும்புகள் தேய்மானமடைந்தும், புரை உருவாகியும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.



அதேசமயம் 9 மணி நேரம் தூங்கும் பெண்களை ஆராய்ந்ததில் அவர்களின் எலும்புகள் அரோக்கியமாக இருந்துள்ளன.

கன்னத்தில் ஆங்காங்கே கருமையான திட்டுக்கள் உள்ளனவா..? இந்த வீட்டுக் குறிப்பை செய்து பாருங்கள்..!

இது குறித்து அந்த ஆய்வின் தலைவர் ஓச்ஸ் பால்கோம் பேசுகையில் “ பெண்கள் தங்களின் தூக்க நேரத்தை பொன்னான நேரமாக முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே உடலாலும் மனதாலும் சரி செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube









லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





பார்க்க :

 

 
Published by:Sivaranjani E
First published:

அடுத்த செய்தி