ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்த வயதை தாண்டிவிட்டால் மார்பகப் பரிசோதனை செய்வது கட்டாயம் : ஏன் தெரியுமா..?

இந்த வயதை தாண்டிவிட்டால் மார்பகப் பரிசோதனை செய்வது கட்டாயம் : ஏன் தெரியுமா..?

மார்பகப் புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய்

வயது வித்தியாசம் இன்றி அனைத்து பெண்களும் மார்பக புற்றுநோய்க்காண பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக 40-70 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவர்கள் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள செய்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்களின் யாரெல்லாம் தனக்கு மார்பக புற்றுநோய் வரலாம் என்று பயப்படுகிறார்ளோ அல்லது மார்பக புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு மார்பகப் புற்று நோய் இருக்கிறதா என்பதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும். இது நோய் தீவிரமடைவதை தவிர்ப்பதோடு ஆரம்பகால சிகிச்சையிலேயே அதை சரி செய்யவும் வழி செய்கிறது.

எந்த மாதிரியான பரிசோதனைகள் செய்யலாம் :

  • வருடத்திற்கு ஒருமுறை மம்மோகிராஃபி எனப்படும் எக்ஸ்ரே-வை பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ளலாம்.
  • அல்ட்ரா சவுண்ட் மற்றும் மார்பக புற்றுநோய் வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பவர்களுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது.

யாரெல்லாம் பரிசோதனை செய்து கொள்ளலாம் :

வயது வித்தியாசம் இன்றி அனைத்து பெண்களும் மார்பக புற்றுநோய்க்காண பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக 40-70 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவர்கள் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள செய்துகொள்ள வேண்டும். மற்ற வயது பெண்கள் விருப்பத்தின் அடிப்படையில் பரிசோதனைசெய்து கொள்ளலாம்.

எந்த வயதில் செய்து கொள்ள வேண்டும் :

இந்த பரிசோதனை செய்து கொள்வதற்கான வயது வரம்புகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அவர்களுக்கு ஏற்பட்ட முதல் மாதவிடாய், மரபணு, முதல் குழந்தை பிறந்த காலம் அவர்களின் வயது மற்றும் முன்னோர்களுக்கு ஏற்பட்ட நோய்கள் ஆகியவற்றின் அடிப்படையில் புற்றுநோய் தாக்கும் அபாயம் நபருக்கு நபர் மாறுபடுகிறது. எனவே இவற்றை கணக்கில் கொண்டே மருத்துவர் மார்பகம் புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்வார்.

25 லிருந்து 30 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை எம்ஆர்எஸ் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அவர்களின் குடும்பத்தில் யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருந்திருந்தால் அந்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பத்து வயதில் இருந்தே அதற்கான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Also Read :  பெண்களே உஷார்... பிறப்புறுப்பு சுகாதாரத்தில் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்..!

சுய பரிசோதனையில் செய்யும் தவறுகள் :

சில பெண்கள் தங்களுக்கு தாங்களே மார்பகப் புற்றுநோய்க்கான சுயபரிசோதனை செய்து கொள்வர் அவ்வாறு செய்யும்போது சில தவறுகளை செய்வார்கள்.

முதல் தவறு இரண்டு மார்பகங்களையும் முழுமையாக சோதித்துப் பார்க்க வேண்டும் ஒவ்வொரு மார்பகத்திற்கும் ஐந்து நிமிடங்கள் வரை எடுத்துக்கொண்டு சோதித்துப் பார்க்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் இப்படி செய்வது கிடையாது.

தவறான நாட்களை தேர்ந்தெடுப்பது: உதாரணத்திற்கு மாதவிடாய் காலங்களின் போது மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்த காலங்களில் ஹார்மோன்களின் மாறுபாட்டால் உடலில் புற்று நோய்க்கான அறிகுறிகள் சரியாக தென்படாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

பேடுகளுக்கு பதிலாக கைவிரல்களை பயன்படுத்துவது :  சிலர் பேடுகளுக்கு பதிலாக கைவிரல்களை பயன்படுத்துகின்றனர்.

Also Read : கால்களில் தெரியும் கீரல் மற்றும் தழும்புகளால் ஷார்ட் டிரெஸ் அணியும்போது சங்கடமாக உள்ளதா..? ஹோம் ரெமடீஸ் இதோ...

தவறான முறையில் சுய பரிசோதனை செய்வது: சிலர் முற்றிலும் தவறான முறையில் சுயபரிசோதனை செய்து கொள்கின்றனர். அதனை தவிர்க்க ஏதேனும் வழிகாட்டும் வீடியோக்கள் அல்லது படங்களை பார்த்து செய்து கொள்ளலாம்.

சரியான அழுத்தம் கொடுக்காமல் பரிசோதிப்பது: மார்பகங்களை பரிசோதனை செய்யும் போது அவற்றில் சரியான அழுத்தம் கொடுத்து பரிசோதிக்க வேண்டும்

Published by:Sivaranjani E
First published:

Tags: Breast cancer