பெண்கள் பருவம் அடைந்த நாள் முதல், மாதந்தோறும் 3 முதல் 5 நாட்களுக்கு வரும் மாதவிலக்கு என்பது 45 வயதுக்கு மேல் 50 வயதிற்குள்ளாக நின்று விடுவதே மெனோபாஸ் ஆகும். ஒரு பெண் அல்லது ஆண் பருவம் அடைவதற்கு முன்பாக அவர்களது மூளையில் சுரக்கும் ஹைப்பர் இண்டஸ்டைன்ஸ் என்னும் சுரப்பு என்பது மெனோபாஸ் காலத்திற்குப் பிறகு மிக அதிகமாக இருக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
இது ஹைப்பர் இண்டஸ்டைன்ஸ் என்பது வெள்ளை நிறத்தில் இருக்கும். நமக்கு வயது அதிகரிக்கும்போது அல்லது உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும்போது நம் மூளையில் இது தோன்றும். இந்த வெள்ளை நிற பயோமேக்கர்கள் தான் ஸ்டிரோக் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. அதேபோல ஞாபகமறதி நோயான அல்சைமர் நோய் பாதிப்பு ஏற்படவும் காரணமாக இருக்கிறது.
எந்த அளவு இருப்பது ஆபத்தானது?
நமது மூளையின் வயது அதிகரிக்கும்போது வெள்ளை நிற ஹைப்பர் இண்டஸ்டைன்ஸ் என்பதும் அதற்கேற்ப அதிகரித்துக் கொண்டே போகும். மூளையில் இது இருந்துவிட்டாலே ஸ்டிரோக் அல்லது டிமென்ஷியா போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு விடும் என்று அர்த்தம் கிடையாது. ஆனால், இது மிக அதிகமாக இருக்கும் சமயத்தில் நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மூளை நரம்பியல் நோய்கள் குறித்த ஜெர்மனி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் எம்.பி.பிரெட்லர் கூறுகையில், “மெனோபாஸ் காலத்தில் இந்த வெள்ளைநிற ஃபேஸ்மேக்கர் எந்த அளவுக்கு பெண்களிடம் அதிகரிக்கிறது என்பது குறித்துதான் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இந்த ஹைப்பர் இண்டஸ்டைன்ஸ் அளவில் வேறுபாடு இருப்பதை நாங்கள் ஆய்வு மூலமாக கண்டறிந்துள்ளோம். இதற்கு முக்கிய காரணமாக மெனோபாஸ் இருக்கிறது. மெனோபாஸ் காலம் தொடங்கிய பிறகு பெண்களுக்கு இது அதிகமாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
மாதவிடாயை தூண்டும் உணவுகள்... சீரற்ற மாதவிடாய்க்கு இதை டிரை பண்ணுங்க...
எவ்வளவு பேரிடம் ஆய்வு
ஹைப்பர் இண்டஸ்டைன்ஸ் சுரப்பு குறித்து மொத்தம் 3,410 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களின் சராசரி வயது 54 ஆகும். இதில் 58 சதவீதம் பேர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மெனோபாஸ் எட்டியவர்கள். இது தவிர அனைத்து பங்கேற்பாளர்களில் 35 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தம் அல்லது கட்டுப்படுத்த முடியாத ரத்த அழுத்தம் கொண்டவர்கள் ஆவர்.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன
ஆய்வில் பங்கேற்ற அனைவருக்கும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு பங்கேற்பாளரிடமும் அவர்களது மூளையில் உள்ள வெள்ளை நிற ஹைப்பர் இண்டஸ்டைன்ஸ் அளவு எவ்வளவு என்பது குறித்து கணக்கீடு செய்யபட்டது.
வயது, இதய நோய் பாதிப்பு வாய்ப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பல்வேறு காரணங்களை தாண்டியிலும், பெண்களில் பலருக்கு ஹைப்பர் இண்டஸ்டைன் சுரப்பு அதிகமாக இருப்பதற்கு மெனோபாஸ் தான் காரணம் என்று ஆய்வில் தெரியவந்தது.
உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுவதாலும் இந்த வெள்ளை சுரப்பு அதிகமாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Brain Health, Menopause