Home /News /lifestyle /

ஆண்களை மட்டுமல்ல.. பெண்களையும் அதிகமாக தாக்கத் தொடங்கும் மாரடைப்பு… அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

ஆண்களை மட்டுமல்ல.. பெண்களையும் அதிகமாக தாக்கத் தொடங்கும் மாரடைப்பு… அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

கரோனரி அல்லது இஸ்கிமிக் இதய நோய் குடும்பங்களுக்குள்ளேயே மரபணு காரணமாக சுற்றி சுற்றி வருகிறது. எனவே உங்களுக்கு இதய நோயால் பாதிக்கப்பட்ட முதல் நிலை உறவினர் இருந்தால், உங்களுக்கும் அதிக ஆபத்து உள்ளது. இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் இதோ...

கரோனரி அல்லது இஸ்கிமிக் இதய நோய் குடும்பங்களுக்குள்ளேயே மரபணு காரணமாக சுற்றி சுற்றி வருகிறது. எனவே உங்களுக்கு இதய நோயால் பாதிக்கப்பட்ட முதல் நிலை உறவினர் இருந்தால், உங்களுக்கும் அதிக ஆபத்து உள்ளது. இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் இதோ...

இளம்பெண்களை விட முதிய பெண்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. ஏனென்றால் இளம் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இதய நோய்களை தடுக்கும் இயற்கையான பாதுகாவலராக செயல்படுகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
பொதுவாகவே ஆண்கள் தான் மாரடைப்பு நோயால் தீவிரமாக பாதிக்கப்படுகிறார்கள். சில நேரம் மாரடைப்பு உயிர்கொல்லியாகவும் மாறிவிடுகிறது. பெண்களை மாரடைப்பால் அல்லது தீவிரமான இதய நோயால் பாதிக்கப்படுவது இல்லை என்று பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால், இதய நோய்கள் பெண்களையும் விட்டுவைப்பதில்லை.

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் பொழுது காணப்படும் அறிகுறிகள் ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது காணப்படும் அறிகுறிகளை விட வித்தியாசமாக இருக்கும். பல நேரங்களில் பெண்களால் இது தான் மாரடைப்புக்கான அறிகுறிகள் என்பதை எளிதாகக் கண்டறிய முடியாது. குறிப்பிட்ட நோய்க்கான அறிகுறிகளை சரியாகத் தெரிந்து கொள்ள முடியாத பொது, அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனையை அல்லது சிகிச்சையைப் பெறுவதும் கடனமாகவே காணப்படுகிறது.

நெஞ்சு வலி இல்லாமல் போவதே, பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பை உணர முடியாமல் போவதற்கான முதல் காரணமாகக் கூறப்படுகிறது. பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை எப்படி தெரிந்து கொள்வது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்

நெஞ்செரிச்சல் அல்லது செரிமானக் கோளாறினால் உண்டாகும் அமிலத்தன்மை ஆகியவற்றைப் போலவே பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் காணப்படும். எனவே இது மாரடைப்பு தான் என்பதை பெண்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது. மேலும் நெஞ்சு வலியும் அசௌகரியமும் மிக குறைவான எண்ணிக்கையிலான பெண்களுக்கு உண்டாகும்.



மூச்சு விடுவதில் சிரமம், மயக்கம் அடைவது, சோர்வாக இருப்பது, தலை சுற்றுவது, மேல் முதுகில் அழுத்தத்தை உணர்வது ஆகிய அறிகுறிகள் பெண்களுக்கு உண்டாகும் மாரடைப்பின் அறிகுறிகளாக காணப்படுகிறது. ஆனால் இந்த அறிகுறிகள் மாரடைப்புக்கான அறிகுறிகள் என்று மட்டுமே வரையறுக்க முடியாது. இவை பொதுவாக பல்வேறு உடல்நல கோளாறுகள் அறிகுறிகள் என்பதால், மாரடைப்பு தான் என்பதை உணர மிகவும் கடினமாக இருக்கின்றது.

காலையில் சீக்கிரம் எழுந்தால் நீங்கள் இத்தனை விஷயங்களை செய்யலாமா..?

ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாரடைப்பு அறிகுறிகளில் ஏற்படும் வித்தியாசம் :

ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளில் வேறுபாடு இருப்பதற்கு முக்கிய காரணம் உள்ளது. மாரடைப்பு இதயத்தில் எவ்வகையான பாதிப்பை உண்டாக்குகிறது என்பதன் அடிப்படையில் அறிகுறிகள் தோன்றும். ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அவர்களுடைய பிரதானமான கொரோனரி ஆர்ட்டரி ப்ளாக் ஆகிறது. அதேபோல பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது இதயத்தின் சிறிய ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு வெவ்வேறு விதமான பகுதிகள் பாதிக்கப்படுவதால் இதய நோய்கள் அல்லது எதிர்பாராத ஹார்ட் அட்டாக் ஏற்படும் போது இருவருக்கும் அறிகுறிகள் வெவ்வேறு விதமாக தோன்றுகிறது.



பெண்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் யாருக்கு அதிகம்?

பொதுவாகவே இதயநோய்கள் உண்டாவதற்கான காரணிகளாக சில நோய்களும், வாழ்க்கை முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இருபாலருக்கும் பொருந்தும். பெண்களைப் பொருத்தவரை உடல் பருமன், ஏற்கனவே இருக்கும் இதய நோய்கள் அல்லது இதய கோளாறுகள், நீரிழிவு நோய், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் அதிகளவு கருத்தடை மாத்திரை பயன்பாடு, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகிய காரணங்களால் பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் உண்டாகிறது.

தினசரி யார் யாருக்கு எவ்வளவு இரும்புச்சத்து தேவை..? குறைந்தால் என்னென்ன பக்கவிளைவுகளை சந்திப்பீர்கள்..?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு ஆண்களை விட 50 சதவிகிதம் ஹார்ட் அட்டாக் வரும் அபாயம் உள்ளது என்று சமீபத்திய ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

இளம்பெண்களை விட முதிய பெண்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. ஏனென்றால் இளம் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இதய நோய்களை தடுக்கும் இயற்கையான பாதுகாவலராக செயல்படுகிறது. மெனோபாஸ் ஏற்படும் போது, பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைந்துவிடும். எனவே, இதய நோய் ஏற்படும் சாத்தியம் உள்ளது. பெண்களுக்கு இரவில் ஏற்படக்கூடிய வியர்வை, மெனோபாஸ் அறிகுறி மட்டுமல்ல. அது மாரடைப்பின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.



 

மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பது எப்படி :

மேலே கூறியுள்ளது போல மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் அபாயங்கள் இருக்கும் பெண்கள் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி இதயநோய்கள் பாதிக்காத அளவுக்கு மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று நடந்துகொள்ளவேண்டும். இவற்றில் முக்கியமானது சரியான உடல் எடை மற்றும் தினமும் குறைந்தது குறைந்தபட்சம் 20 முதல் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்வது, மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Heart attack, Women Health

அடுத்த செய்தி