• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • கொரோனாவை எதிர்த்து போராடும் சக்தி ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்: ஏன் தெரியுமா..? 

கொரோனாவை எதிர்த்து போராடும் சக்தி ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்: ஏன் தெரியுமா..? 

மாதிரி படம்

மாதிரி படம்

பெண்களின் எதிர்ப்பு சக்தி ஆண்களை விட சிறந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 • Share this:
  கொரோனா வைரசால் பாதிக்கப்படும் பெண் நோயாளிகள் ஆண்களை காட்டிலும் குறைவான நோய் சிக்கல்களை மட்டுமே எதிர்கொள்கின்றனர். அதேபோல, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகம். ஏனெனில், ஆண்களை விட பெண்களுக்கு கொரோனா வைரசை எதிர்த்து போராடும் சக்தி அதிகம் என்று கூறப்படுகிறது.

  அதற்கு காரணம் அவர்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்கள் (Hormones) மற்றும் குரோமோசோம்கள் (Chromosomes) தான். இது பெண்களில் வலுவான நோயெதிர்ப்பு சக்திக்கு பங்களிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே அவர்கள் நோய் தொற்றின் அபாயத்தை குறைவாக பெறுகின்றனர்.
  இது குறித்து கனடாவின் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் கவின் ஆடிட் கூறியதாவது, " எங்கள் ஆய்வின் சிறப்பம்சம் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரசில் உள்ள பாலியல் வேறுபாடுகள் ACE2 (Angiotensin-converting enzyme 2) உடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதுதான்" என்று கூறினார்.

  ACE2 என்பது SARS-CoV-2 வரைஸ் உடலுக்குள் நுழைய அனுமதிக்கும் ஏற்பியாக செயல்படும் நொதியாகும். ஆனால் அவை இருதய, நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய்களிலிருந்து பாதுகாப்பதிலும் இது முக்கியமானது. மேலும், அவற்றின் குரோமோசோம்களின் காரணமாக, பெண்களுக்கு ACE2 மரபணுவின் இரண்டு பிரதிகள் உள்ளன. இது வைரஸுடன் தொடர்புடைய சிக்கல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. ஆனால் ஆண்களுக்கு ஒரே ஒரு நகல் மட்டுமே உள்ளது, ”என்று கூறியுள்ளார்.  அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசியாலஜி-ஹார்ட் அண்ட் சர்குலேட்டரி பிசியாலஜி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், ACE2 ஒரு X குரோமோசோம்-இணைக்கப்பட்ட மரபணு என்று ஆராய்ச்சி குழு விளக்கியுள்ளது. பெண்களின் உடலில் இதன் நகலைத் (Duplication) தவிர்ப்பதற்கு, ஒரு X-குரோமோசோம் செயலிழக்கச் செய்யப்படுகிறது. ஆனால் அதன் இருப்பிடம் காரணமாக ACE2 செயலிழக்காமல் தப்பிக்கிறது. அதாவது ACE2 ஐ உருவாக்க பெண்களுக்கு இரு மடங்கு செயலில் மரபணு வழிமுறைகள் உள்ளன. இந்த X-குரோமோசோம் செயலிழப்பில் இருந்து தப்பிப்பதன் காரணமாக பெண்களில் இரு மடங்கு வலிமையான மற்றொரு மரபணு உருவாக்கப்படுகின்றன.

  கொரோனா பரவலில் இருந்து தப்பிக்க சர்ஜிக்கல் மாஸ்க் அணிவது சிறந்ததா?  காட்டன் மாஸ்க் சிறந்ததா?

  அவை டோல் லைக் ரெசெப்டார் செவன் (Toll-like receptor seven) என அழைக்கப்படுகிறது. இது உள்ளார்ந்த நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய பகுதியாகும். இந்த நிலையில் இது குறித்து ஆடிட் கூறியதாவது, " பெண்களில் டோல் லைக் ரெசெப்டார் செவன் மரபணுவின் வலுவான இருப்பு, ஏன் பெண்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் ஆண்களை விட வலுவாக இருக்கின்றன என்பதையும், ஜலதோஷம் உட்பட வைரஸ் தொற்றுநோயை அவர்களால் சிறப்பாக பொறுத்துக்கொள்ள முடியும் என்பதையும் விளக்குகிறது" என்று கூறினார்.  இதையடுத்து ஆய்வில், உலகெங்கிலும் உள்ள ஆண்கள் மிகவும் கடுமையான நோய்களையும் அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளையும் எதிர்கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆண்களை விட பெண்கள் SARS-CoV-2 எனப்படும் கொரோனா வைரஸின் கடுமையான வெளிப்பாட்டை எதிர்கொள்வார்கள் என்று கூறியுள்ளனர்.

  எடுத்துக்காட்டாக, சுகாதாரப் பணியாளர்களில் 70% பேர் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் வைரஸ் பாதிப்பு விளைவுகளில் இந்த சதவீதங்கள் பிரதிபலிக்கவில்லை. பாலின பிரச்சினைகள் காரணமாக, பெண்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். ஆனால் நோய் காரணமாக அவர்களின் உடல்நிலை முடிவுகள் மோசமானதாக மாறியதில்லை என்பதை அறிந்து கொள்ள இந்த ஆய்வு உதவுகிறது. உண்மையில் பெண்களின் எதிர்ப்பு சக்தி ஆண்களை விட சிறந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

   

   

   

   

   

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sivaranjani E
  First published: