ஆண்களை காட்டிலும் பெண்களிடையே பக்கவாதம் , மாரடைப்பு பிரச்னை அதிகரித்து வருகிறது : ஆய்வு

இதய பாதிப்பு

இது வேலை அழுத்தம், தூக்கக் கோளாறுகள், சோர்வு போன்றவற்றால் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளது.

  • Share this:
ஐரோப்பிய ஸ்ட்ரோக் அமைப்பு (ESO) மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வில் ஆண்களை விட பெண்களிடையே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளது. இது வேலை அழுத்தம், தூக்கக் கோளாறுகள், சோர்வு போன்றவற்றால் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளது.

நீரிழிவு, தமனி உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை இதய நோய்க்கான பொதுவான காரணிகளாக இருந்தாலும், சமீபத்தில், இதுவரை இல்லாத ஆபத்து காரணிகளான வேலை அழுத்தம் மற்றும் தூக்கப் பிரச்சனைகளும் இதய ஆபத்தை கணிசமாக அதிகரிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரையிலான மருத்துவ வரலாறுப்படி பெண்களை விட ஆண்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள இந்த செய்தி அந்த கூற்றை மாற்றியுள்ளது.

இந்த அதிகரிப்பு முழுநேரம் வேலை செய்யும் பெண்களிடையே அதிகமாக காணப்படுகிறது. ஆண்களை விட பெண்களிடையே புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் குறைவு என்றாலும் அவர்களுடைய நீண்ட பணி அழுத்தமே பக்கவாதம், மாரடைப்பிற்கு காரணமாக இருக்கின்றன. இந்த மன அழுத்தம் குடும்பம், அலுவலகம், தனிப்பட்ட காரணங்கள் என பல விஷயங்களை கொண்டுள்ளது.



 

ஆராய்ச்சியாளர்கள் 2007, 2012, மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இருந்து சுவிஸ் சுகாதார கணக்கெடுப்பில் 22,000 ஆண்கள் மற்றும் பெண்களின் தரவை ஒப்பிட்டு, இதய நோய்க்கான இதுவரை இல்லாத காரணிகளைப் புகாரளிக்கும் பெண்களின் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு இதய நோயின் ஆபத்து அறிகுறிகள் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். 2007 ல் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 38 சதவிகிதமாக இருந்தது. ஆனால் 2017 ல் 44 சதவிகிதமாக அதிகரித்திருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

தேசிய ஊட்டச்சத்து வாரம் 2021 : பெண்கள் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!

ஒட்டுமொத்தமாக, இருபாலரிலும், வேலையில் மன அழுத்தத்தைப் பதிவு செய்யும் எண்ணிக்கை 2012 இல் 59 சதவீதத்திலிருந்து 2017 இல் 66 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் சோர்வாகவும் களைப்பாகவும் இருப்பதன் அறிகுறி புகார்கள் மட்டும் 23 சதவிகிதத்திலிருந்து 29 சதவிகிதமாக அதிகரித்ததையும் கவனித்துள்ளனர் (பெண்களில் 33 சதவிகிதம் மற்றும் ஆண்களில் 26 சதவீதம்).

அதே காலகட்டத்தில், தூக்கமின்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 24 சதவிகிதத்திலிருந்து 29 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. கடுமையான தூக்கக் கோளாறுகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களில் 8 சதவிகிதத்திலிருந்து கூடுதலாக 5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.



இருப்பினும், இதய நோயை அதிகரிக்க காலாகாலமாக சொல்லப்பட்டு வரும் பொதுவான ஆபத்து காரணிகளும் ஒரே நிலையானதாக இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். அதாவது 27 சதவீதம் பேர் உயர் இரத்த அழுத்தத்தாலும், 18 சதவீதம் கொலஸ்ட்ரால் மற்றும் 5 சதவீதம் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். உடல் பருமன் 11 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. பெண்களிடையே புகைபிடித்தல் ஒரு நாளைக்கு சுமார் 10.5 முதல் 9.5 சிகரெட்டுகளாக குறைந்த போதிலும், ஆண்களிடம் இந்த பழக்கம் அதிகமாகவே இருந்தது. இருப்பினும் வேலை அழுத்தம், குடும்ப பொருப்புகள் காரணமாக அவர்களிடம் இதய நோய், பக்கவாதம், மாரடைப்பு அறிகுறிகள் அதிகமாகவே தென்பட்டன.

 

 
Published by:Sivaranjani E
First published: