ஊரடங்கு காலகட்டம் ஆண்களைக் காட்டிலும் பெண்களையே அதிகம் பாதித்துள்ளதாகவும், இதனால் அதிகம் மன அழுத்தத்தில் இருப்பது பெண்களே என டைம்ஸ் ஆஃப் இந்தியா ட்விட்டரில் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. எவ்வாறு என்றும் அலசி அதைப் பகிர்ந்துள்ளது.
அதாவது வீட்டில் இருப்பதால் குடும்பத்தினருக்கு மூன்று வேளையும் சமைத்தல், பாத்திரம் தேய்த்தல், துணி, வீட்டு சுத்தம், கடைக்குச் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது என அனைத்தையும் அவர்கள் செய்ய வேண்டியுள்ளது. என்னதான் பகிர்ந்துகொண்டாலும் இதனால் அதிகம் உடல் உழைப்பு பெண்களுக்கானதாகவே உள்ளது என்று கூறியுள்ளது. மேலும் வீட்டில் அலுவலக வேலை, குழந்தை என்றால் நிலைமை இன்னும் மோசம் என்று கூறுகிறது. இதுநாள் வரை வேலையாட்களை வைத்து வீட்டு வேலைகள், சமையல் என செய்து கொண்டிருந்த பெண்களுக்கும் இந்த காலகட்டம் பெரும் சவாலே.
இதுகுறித்து மனநல மருத்துவர் ரச்சனா என்பவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் “சாதாரண நாட்களிலேயே வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டை சமாளிப்பது உடலளவில் அழுத்தத்தை தரும். இந்நிலையில் இந்த சூழல் இன்னும் சிரமம்தான். என்னுடைய பார்வையாளர்களிலேயே பலர் மன அழுத்தத்தில் இருப்பதாக தொலைபேசியில் அழைக்கின்றனர். அவர்கள் வைக்கும் முதல் குற்றச்சாட்டே ஓய்வில்லாமல் வேலை என்பதுதான். சமையல், வீட்டுச் சுத்தம் என அதிலேயே நேரம் கழிவதாகக் கூறுகின்றனர்.
இந்த சமயத்தில் இதற்கு இருக்கும் ஒரே தீர்வு வேலைகளை பகிர்ந்துகொள்வதுதான். உங்களின் சூழ்நிலையை மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது. எப்படியெல்லாம் உங்கள் சுமையை குறைக்கலாம் என திட்டமிடுங்கள். உங்கள் குடும்பத்தினரிடம் நிலைமையை புரிய வையுங்கள். உதவி கேட்பது இயலாமையல்ல. இதுவும் உங்கள் உடல் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதை மறவாதீர்கள்” என்றுக் கூறியுள்ளார்.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.