Home /News /lifestyle /

30 வயதை கடந்த பெண்களே... உங்களுக்கு இனிமேல் வரப்போகும் உடல் நலப் பிரச்சனைகளை தெரிந்துகொள்ளுங்கள்...

30 வயதை கடந்த பெண்களே... உங்களுக்கு இனிமேல் வரப்போகும் உடல் நலப் பிரச்சனைகளை தெரிந்துகொள்ளுங்கள்...

பெண்கள் நலன்

பெண்கள் நலன்

30 வயதை தாண்டிய பெண்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகள் அணிவகுத்து வரத் தொடங்குகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வயது என்பது வெறும் எண் என்ற பழமொழியை நீங்கள் பரவலாகக் கேட்டிருப்பீர்கள். ஆனால், வயது அதிகரிக்கும்போது, அது சார்ந்த விளைவுகளையும் நாம் எதிர்கொண்டாக வேண்டும் என்பதே யதார்த்த நிலையாக இருக்கிறது. ஒருவரின் வயது அதிகரிக்கும்போது, பல்வேறு விதமான உடல்நலப் பிரச்சினைகள் வருகின்றன என்று ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, வயது சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதில் பெண்கள் முன்னணியில் இருக்கின்றனர். பொதுவாக, ஆண்களிடம் சம்பளத்தையும், பெண்களிடம் வயதையும் கேட்கக் கூடாது என்பார்கள். அதாவது, வயது அதிகம் என்பதே தெரியாத அளவுக்கு பெண்கள் இளமையோடு காட்சியளிப்பார்கள் என்ற அர்த்தத்தில் இதை சொல்லியிருந்தாலும், யதார்த்தத்தில் வயது சார்ந்த பிரச்சினைகள் பெண்கள் எதிர்கொண்டு தான் வருகின்றனர்.

குறிப்பாக, 30 வயதை தாண்டிய பெண்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகள் அணிவகுத்து வரத் தொடங்குகின்றன. சமூக கட்டமைப்பின்படி ஒரு ஆண் வேலைக்கு சென்று, வீடு திரும்பிய பிறகு குடும்ப பராமரிப்பு வேலைகள் எதையும் பெரும்பாலும் செய்வதில்லை. ஆனால், ஒரு பெண் வேலைக்கு சென்று என்னதான் சோர்வாக வீடு திரும்பினாலும், வீட்டு பராமரிப்பு வேலைகளையும் அவரே செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.



குறிப்பாக, 30 வயதுக்கு மேற்பட்ட இளம் தாயாராக இருக்கும் ஒரு பெண், தன் குழந்தைகள் குறித்து மிகுந்த அக்கறை காட்டுகின்ற அதே சமயத்தில் தன்னை கவனித்துக் கொள்ள மறந்து விடுகிறார். அனேக பிரச்சினைகள் வந்து சேர்ந்த பிறகே அதன் வலியை உணரத் தொடங்குகின்றனர்.

ஆனால், வயது சார்ந்து என்னென்ன பிரச்சினைகள் வரக் கூடும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் பல்வேறு பிரச்சினைகளை தடுக்க முடியும்.

இரண்டு மார்பகங்களும் வெவ்வேறு அளவில் இருப்பது குறைபாடா..? காரணத்தை விளக்கும் மருத்துவர்

பொதுவான உடல் நலப் பிரச்சினைகள்

  • 30 வயதில் உடல் எடையை கட்டுப்படுத்த முடியாமல் நீங்கள் அவதி அடைந்து வருகிறீர்கள் என்றால், அது எச்சரிக்கை மிகுந்த அறிகுறியாகும் என்று ஆயுர்வேத நிபுணர் கோஹ்லி தெரிவிக்கிறார்.

  • வழக்கத்திற்கு மாறாக தலைமுடி மிகுதியாக உதிருகிறது என்றால் உங்கள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு நிலவுகிறது என்று அர்த்தம்.

  • பல பெண்கள் தங்களது 30-ஐ ஒட்டிய வயதுகளில் கர்ப்பம் அடையும்போது உடலுக்கு தேவையான ஆற்றல், ஊட்டச்சத்து போன்றவை கிடைக்காமல் மிகவும் அவதி அடைகின்றனர்.

  • உங்களின் மாதவிலக்கு காலம் தள்ளிப் போவது அல்லது அளவுக்கு அதிகமாக உதிரப்போக்கு ஏற்படுவது ஆகியவை குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

  • உங்கள் சருமத்தில் கரும்புள்ளிகள் அல்லது கட்டிகள் உருவாகத் தொடங்கும்.

  • இயல்பாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது என்றால் சுவாசக் கோளாறு பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொண்டு வருகிறீர்கள் என்று அர்த்தம்.


 
Published by:Sivaranjani E
First published:

Tags: Health tips, Women after 30

அடுத்த செய்தி