• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பிரசவத்திற்குப் பிறகு அக்குளில் தாய்ப்பால் சுரக்கும் அதிசயம் - மருத்துவர்கள் அதிர்ச்சி!

பிரசவத்திற்குப் பிறகு அக்குளில் தாய்ப்பால் சுரக்கும் அதிசயம் - மருத்துவர்கள் அதிர்ச்சி!

பிரசவத்திற்குப் பிறகு அக்குளில் தாய்ப்பால் சுரக்கும் அதிசயம்

பிரசவத்திற்குப் பிறகு அக்குளில் தாய்ப்பால் சுரக்கும் அதிசயம்

உலகில் 6 சதவீதம் பெண்களுக்கு இதுபோன்ற அதிசயம் ஏற்படும் என தெரிவிக்கின்றனர். மார்பகத்துக்குரிய செல்கள் அக்குளிலும் வளரும். சிலருக்கு பால் காம்பும் வளரும். ஒரு சிலருக்கு எந்த அறிகுறியும் தென்படாது.

  • Share this:
ஒரு போர்த்துகீசிய பெண் ஒருவருக்கு பிரசவத்திற்குப் பிறகு அவரது அக்குள் பகுதியில் இருந்து தாய்ப்பால் சுரக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

போர்ச்சுகலில் 26 வயதான ஒரு பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. பிரசவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பிறகு வலது அக்குள் பகுதியில் வலி ஏற்பட்டதாக அவர் தனது மருத்துவரை பார்க்க சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது அக்குள் ஒரு வட்டமான பகுதி இருப்பதைக் கண்டனர், அதனை அழுத்தும் போது வெள்ளை நிற திரவம் வெளியேறியுள்ளது. அதனை ஆய்வு செய்து பார்க்கையில் அது தாய்ப்பால் என உறுதி செய்யப்பட்டது.

போர்ச்சுகலின் லிஸ்பனில் உள்ள டி சாண்டா மரியா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கு பாலிமாஸ்டியா இருப்பதைக் கண்டறிந்தனர். தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி உலகில் 6 சதவீதம் பெண்களுக்கு இதுபோன்ற அதிசயம் ஏற்படும் என தெரிவிக்கின்றனர். மார்பகத்துக்குரிய செல்கள் அக்குளிலும் வளரும். சிலருக்கு பால் காம்பும் வளரும். ஒரு சிலருக்கு எந்த அறிகுறியும் தென்படாது. கர்ப்பம் தரிக்கும்போது தான், அக்குளில் இருக்கும் மார்பக செல்களும், பால் சுரப்பியும் செயல்படத் தொடங்கும்.



குழந்தை பிறந்ததும் பால் சுரக்கும்.குழந்தை வளரத் தொடங்கியதும் தானாகவே அக்குள் மார்பகத்திலும் பால் சுரப்பது நின்று விடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கூடுதல் மார்பக திசுக்களில் சில நேரங்களில் முலைக்காம்பு அல்லது ஐசோலா (முலைக்காம்பைச் சுற்றியுள்ள நிறமி பகுதி) பகுதியிலும் இது ஏற்படலாம். பாலூட்டி சுரப்பிகளாக மாறும் செல்கள் அக்குள் முதல் இடுப்பு வரை உடலின் இருபுறமும்இருக்கும், கருவின் வளர்ச்சியின் போது இந்த நிலை ஏற்படுகிறது.

கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன் தாய்ப்பால் கொடுப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

பொதுவாக இந்த "பாலூட்டி மேடு" அல்லது "பால் கோடு" கரு வளரும்போது ஏற்படுகிறது. துணை மார்பக திசுக்களின் வளரும் மிகவும் பொதுவான இடம் அக்குள் தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கர்ப்பமாக இருக்கும் வரை அல்லது தாய்ப்பால் தொடங்கும் வரை துணை மார்பக திசு இருப்பதை மக்கள் உணரமாட்டார்கள், குழந்தைக்கு பால் கொடுக்கும் நேரத்தில் தான் இது தாய்க்கே தெரியவரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.



மேலும் பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் அந்த பெண் என் அக்குள் பகுதியில் பால் சுரக்கிறது, நீங்கள் இதனை நம்ப மாட்டீர்கள், ஆனால் இந்த வீடியோவை பாருங்கள் என குறிப்பிட்டு பால் சுரப்பதை வீடியோவில் காட்டுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: