பெரும்பாலும், ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் தங்களின் மனம் கவர்ந்த ஒருவரை சந்திக்கும் போது காற்றில் பார்ப்பது போல உணர்வார்கள். மேலும், அவர்களுடன் பேசும் போது காட்டாயம் தங்களின் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்த நினைப்பார்கள்.
ஆனால், இங்கு ஒரு பெண்ணுக்கு நிலைமையே வேறு. இங்கிலாந்தில் ஒரு துரதிர்ஷ்டவசமான பெண், தன் எதிர் பாலினத்தைச் சேர்ந்த எந்த ஒரு கவர்ச்சியான நபருடன் கண் தொடர்பு வைத்துக் கொள்ளும்போதும், அவர் மயங்கி விழுந்து விடுகிறார். அவர் ஒரு அரிய வகை மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம்.
இதன் விளைவாக, அவர் ஆண்களுடன் கண் தொடர்பு வைத்துக் கொள்வதைத் தவிர்த்து வருகிறாராம். ஏனென்றால் அவர் எப்போது யாரை பார்த்து கவர்த்திழுக்கப்படுகிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒருவரின் பார்வையால் கவரப்படும் போது அந்த பெண் அதே இடத்தில் சரிந்து கீழே விழுந்து விடுவாராம். கிர்ஸ்டி பிரவுன் என்ற அந்த இங்கிலாந்து பெண் கேடப்ளெக்ஸியால் (cataplexy) என்ற ஒரு அறிய வகை மூளை கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சிரிப்பு மற்றும் பயம் போன்ற வலுவான உணர்ச்சி போன்ற குறிப்பிட்ட தூண்டுதல்கள் அவரில் ஏற்படும் போது இந்த கோளாறு திடீர் தசை முடக்குதலைத் தூண்டுகிறது.
அதிக இரைச்சல் ஆண்மைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு..!
செஷயரின் நார்த்விச் நகரைச் சேர்ந்த 32 வயதான இந்த கிர்ஸ்டிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தனது மூளைக் கோளாறு தொடர்பாக பேசிய அந்த பெண், "இது மிகவும் சங்கடமாக இருக்கிறது. நான் ஒரு முறை ஷாப்பிங் செய்து கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதை கண்டேன். அவ்வளவுதான் என் கால்கள் பலவீனமாகிவிட்டன. ஆதரவுக்காக என் உறவினர் மீது சாய்ந்துகொண்டேன்" என்று டெய்லி மெயில் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.
வழக்கமாக, இந்த நிலை நர்கோலெப்ஸி (narcolepsy) எனப்படும் மற்றொரு கோளாறுடன் தொடர்புடையது. இந்த அசாதாரண தூக்கக் கோளாறு ஒரு நபரை எப்போது வேண்டுமானாலும் தூங்க வைக்கும். அவர் நிற்கும் போது அல்லது பேசும் போது அல்லது வாகனம் ஓட்டும் சமயம் என எப்போது வேண்டுமானாலும் மயங்கி விழலாம். மேலும் இந்த தாக்கங்கள் சுமார் இரண்டு நிமிடங்கள் நீடிக்கும். இதுவும் ஒரு வகையான தூக்கக் கோளாறு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் தான் எப்போதும் சோர்வாக உணர்வதாகவும் கிர்ஸ்டி கூறியுள்ளார்.
இந்த கோளாறு அவரை மேலும் சோர்வடையச் செய்வதாகவும். தான் ஒருபோதும் நன்கு ஓய்வெடுக்கும் வகையில் ஆழ்ந்து தூங்கியதில்லை என்றும் அதனால் எப்போதும் புத்துணர்வுடன் இருக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பொது வெளியில் செல்லும்போது தன்னை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்கவும், ஒவ்வொரு முறையும் தனது முழங்கால்கள் பலவீனமடையும் போது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் அவர் தலைகுனிந்து தான் நடப்பாராம்.
இது குறித்து பேசிய அவர், "நான் யாரையாவது கவர்ச்சிகரமானதாகக் கண்டால், என் கால்கள் பலவீனமடைகின்றன. மேலும், அதனால் நான் மயங்கி விழாமல் இருக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன். எனவே என் சொந்த பாதுகாப்பிற்காக என் கண்கள் எப்போதும் கீழ் நோக்கி இருக்கும்படி வைத்துக்கொள்வேன்," என்று அவர் மேலும் கூறினார்.
கேடப்ளெக்ஸி கோளாறு காரணமாக கிர்ஸ்டி ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து முறையேனும் மயங்கி விழுந்து விடுகிறாராம். இருப்பினும், மிகவும் மோசமான நாட்களில், அவர் சுமார் 50 முறை மயங்கி விழுந்து விடுவாராம். ஒரு ஈர்ப்பினால் மட்டும் அவர் மயங்கி விழுவதில்லை. பயம் போன்ற பிற உணர்ச்சிகளும் அவரைத் தூண்டும் போது கிர்ஸ்டி மயக்க நிலைக்கு செல்வார். அதேபோல அவருக்கு உயரம் என்றாலும் பயம். எனவே உயரமான இடத்தில் நின்றாலோ அல்லது செங்குத்தான படிக்கட்டுக்கு மேலே நிற்கும் போதும் அவருக்கு அதே விளைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.