Home /News /lifestyle /

குளிர்கால சூழலை சமாளிக்க கர்ப்பிணிகள் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை..!

குளிர்கால சூழலை சமாளிக்க கர்ப்பிணிகள் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை..!

காட்சி படம்

காட்சி படம்

குளிர்காலத்தில் நாம் அதிகம் தண்ணீர் குடிக்க விரும்புவதில்லை. ஆனால், குளிர்காலத்தில் கூட நீரிழப்பு ஏற்படலாம்

குளிர்காலம் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த பருவங்களில் ஒன்றாகும். ஏனெனில் இந்த பருவத்தில் வானிலை நன்றாகவும் இனிமையாகவும் இருப்பது மட்டுமின்றி, நீங்கள் பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். இருப்பினும் கருத்தரிக்க நினைக்கும் தாய்மார்கள் இந்த காலகட்டத்தில் பல்வேறு ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால், குளிர்காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

எனவே கர்ப்பிணிகள் இந்த காலகட்டத்தில் பொருத்தமான ஆடைகளை அணிவது, உடல் வெப்பநிலையை பராமரிப்பது, உடல் நீரின் அளவை கவனித்துக்கொள்வது மற்றும் சுறுசுறுப்பாக இருப்பது, கர்ப்பகால அனுபவத்தை அற்புதமான ஒன்றாக மாற்றும்.

குளிர்காலத்தில் உங்களின் தினசரி நாளை சுறுசுறுப்பாக தொடங்குங்கள்:

குளிர்காலம் காரணமாக, நீங்கள் உங்கள் தினசரி நாளை தாமதமாகத் தொடங்கலாம். ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது அது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். நீங்கள் தாமதமாக எழுந்தால், உங்கள் வொர்க்அவுட்டையோ அல்லது காலை உணவையோ தவிர்க்க வேண்டிய வாய்ப்புகள் வரும். இது கர்ப்பிணிகளுக்கு உகந்ததாக இருக்காது.

ஆரோக்கியமான காலை உணவு மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி முறைக்கு இடமளிக்கும் வகையில் உங்கள் தினசரி நாளை தொடங்குவது நல்லது. அதேபோல கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடிய மற்றொரு தவறு என்னவென்றால், குளிர்காலத்தில் தாகம் எடுக்காது என்பதால் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது. ஒரு நாளைக்கு பல கிளாஸ் தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லை என்றால், எலும்பிச்சை ஜூஸ், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்.

மேலும் குளிர்காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் தங்களை காத்துக்கொள்ள, கார்கர் தாய்மை மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவரரும் ஆலோசகருமான டாக்டர் பாருல் சாத்தேவின் சில எளிய உதவிக்குறிப்புகளை நம்மோடு பகிர்ந்துள்ளார். அதனை பின்வருமாறு காணலாம்.



1. போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்:

குளிர்காலத்தில் நாம் அதிகம் தண்ணீர் குடிக்க விரும்புவதில்லை. ஆனால், குளிர்காலத்தில் கூட நீரிழப்பு ஏற்படலாம். இருப்பினும் நீங்கள் சூப்கள், எலுமிச்சை ஜூஸ், இளநீர் ஆகியவற்றை பருகலாம். தாகம் எடுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதிகப்படியான காபி, டீ, கோலா, பழச்சாறுகள் மற்றும் பிற இனிப்பு பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

2. சீரான உணவை உண்ணுங்கள்:

ஃபிரெஷ் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு, எண்ணெய் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளை உண்ணும் ஆசையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண்ணெய் உணவுகளை உண்பது அமிலத்தன்மையை அதிகரித்து நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும்.

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறீர்களா..? இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்

3. ஃப்ளூ தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும்:

இந்த காலகட்டத்தில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை எடுத்துக்கொள்வது அவசியம். இதுதவிர, சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும், கை சுத்திகரிப்பாளரைப் பயன்படுத்தவும், தேவைப்பட்டால், நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், மருத்துவர் பரிந்துரைத்த நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்து, சமூக விலகலை பராமரிக்கவும்.



4. உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்:

வானிலை குளிர்ச்சியாக இருப்பதால் வீட்டிற்குள் இருந்தபடியே உடற்பயிற்சி செய்வது அவசியம். உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க நடைபயிற்சி, ஏரோபிக்ஸ் மற்றும் யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். எப்போதும், உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவே கூடாது. ஆனால், தீவிரமான உடற்பயிற்சிகள் செய்வதை தடுக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகுதான் எந்தஒரு உடற்பயிற்சியையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

5. தோல் பிரச்சனைகளை நிர்வகித்தல்:

குளிர்காலத்தில் தோல் பிரச்சனைகள் வருவது பொதுவானவை. இந்த விஷயத்தில் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும். வறண்ட தோல், அரிப்பு, எரிச்சல் ஆகியவை உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy, Winter

அடுத்த செய்தி