இந்தியா முழுவதும் சுமார் 70 மில்லியன் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் உலகில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் பேர் வாழும் நாடாகவும் இந்தியா மாறி வருகிறது. இது ஒரு ஆபத்தான விஷயம் என்றாலும், ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
அந்தவகையில் தற்போது குளிர்காலம் தொடங்கியிருப்பதால் சர்க்கரை நோய் பாதித்தவர்கள் உணவு முறைகளில் சில மாற்றங்களை செய்து, இந்த காலகட்டத்திற்கான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
சர்க்கரை நோய் என்றால் என்ன? (What is diabetes)
நம் உடம்பில் உள்ள கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் நாம் சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம். சரியான நேரத்தில் கண்டுபிடித்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தினால் நமக்கு பெரிய ஆபத்து ஏதும் ஏற்படாது. ஆனால், கண்டுகொள்ளப்படாமல் இருந்தால் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் பாதித்து மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, இதயம், சிறுநீரகம் பாதிப்படையும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் உருவத்தில் திருப்தி இல்லாத டீனேஜர்ஸ் பெரியவர்களான பிறகு மனசோர்வை அனுபவிக்கலாம்: ஆய்வில் தகவல்!
சர்க்கரை நோயாளிகள் குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் :
காலை உணவு (breakfast) :
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர்காலத்தில் அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து மிக்க உணவுகளை காலை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய சக்கரவள்ளி கிழங்கு, இனிப்பில்லா டீ மற்றும் காஃபி, வேக வைத்த முட்டை, ஆரஞ்சு பழங்கள், கொய்யா உள்ளிட்டவைகளை எடுத்துக்கொள்ளலாம்
மதிய உணவு (lunch) :
மதியநேரத்தில் அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வகை உணவுகள் திருப்தியாக சாப்பிட்டது போன்ற உணர்வை சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுக்கும். மேலும், திடீரென ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வதையும் தடுக்கும். அந்தவகையில், பச்சைக் காய்கறிகளை உணவாக எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, பசலைக்கீரை, கடுகு இலைகள், பல தானிய சப்பாத்தி, வேகவைக்கப்படாத பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடலாம். கேரட், முள்ளங்கிகளையும் பச்சையாக சாப்பிடலாம்.
நொறுக்குத் தீனி (snacks) :
சர்க்கரை நோயாளிகள் நாள் முழுவதும் மிக குறைவான அளவில் மட்டுமே உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஈடாக, கொஞ்சநேர இடைவெளிகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடலாம். குறைந்த கலோரிகளை உடைய பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆப்பிள், கொய்யா, வறுத்த பயிர், மற்றும் பச்சைக் காய்கறிகளான கேரட், முள்ளங்கி ஆகியவற்றை கொஞ்ச நேர இடைவெளிகளில் சாப்பிடலாம்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் ஆபத்தா..? அப்போ குறைக்க என்ன சாப்பிடலாம்..? இதோ வழிகள்..
இரவு உணவு (dinner) :
குளிர்காலங்களில் உணவுகள் வாய்க்கு ருசியாக இருக்க வேண்டும் என காரம் அதிகம் சேர்த்துக்கொள்வார்கள். சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் சிக்கன் சூப், பழக்கூட்டு, பச்சைக் காய்கறிகள் என அதிகளவில் கிடைக்கும். தங்களின் உடல்நிலைக்கு ஏற்ப இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, பலதானிய சப்பாத்திகள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகச்சிறந்த உணவாகும்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய உணவுகள்
இனிப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். எப்பொழுதும் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. low sugar இருப்பவர்கள் எப்போதும் இனிப்பு மிட்டாய்களை கையில் வைத்திருக்க வேண்டும். குளிர்காலத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீக்கிரமாக குறைய வாய்ப்புள்ளதால், கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. ஒருவேளை உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதை உணர்ந்தால் உடனடியாக, சாக்லெட் அல்லது நட்ஸ்களை வாயில் போட்டுக்கொள்ளுங்கள். அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறையவிடாமல் தடுக்கும்.