நோயெதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்குமா?

கோவிட் தடுப்பூசி

நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ள நோயாளிகள் கோவிட் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் ஆன்டிபாடி அளவுகள் அதிகரிக்குமா ?

  • Share this:
கொரோனா பெருந்தொற்று பேராபத்தில் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை பின்பற்றினாலும், வலுவான நோயெதிர்ப்பு சக்தி ஒருவருக்கு அவசியம் வேண்டும் என்று துவக்கத்தில் இருந்தே அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஒரு நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் கொரோனா வைரஸுக்கு எதிரான ஒரு நல்ல பதிலை அளிக்க முடியாத போது, பல சந்தர்ப்பங்களில் அவருக்கு கோவிட்-19 தொற்றால் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இத்தகைய நபர்கள் நோயெதிர்ப்பு குறைபாடு உடையவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். தற்போது தடுப்பூசிகள் கொரோனாவிற்கு எதிராக பாதுகாப்பு தருகின்றன என்றாலும், நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட்டு கொண்ட பின்னரும் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகவே இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக தடுப்பூசி போடப்பட்ட பிறகும் ஆன்டிபாடிகளை உருவாக்கும் திறனை பெறாத மக்கள் என்றால் அவர்கள் பெரும்பாலும் தங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை இயல்பாக செயல்பட விடாமல் அடக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் என்பது ஒரு அமெரிக்க ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Also Read : கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு ஹார்மோன் பிரச்சனை ஏற்படுகிறதா ?

இவர்களில் பலர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு, தங்களது மாற்று உறுப்பில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க இவ்வகை மருந்துகளை எடுத்து கொள்கின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டு கொண்ட பிறகும் கூட, தேவையான ஆன்டிபாடிகள் உருவாகவில்லை என்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வு ஒன்றில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக காணப்பட்ட சிறுநீரக மாற்று நோயாளிகள், கோவிட் -19 தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு அவர்களுக்கு ஓரளவிற்கு ஆன்டிபாடிகள் அதிகரித்ததும், ஆனால் அவர்கள் முழுமையாக செயல்படும் நோயெதிர்ப்பு அமைப்பை ஒப்பிடும் போது, பலவீனமான ஆன்டிபாடி பதில்களை கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

ஃபைசர் / பயோஎன்டெக் மற்றும் ஆக்ஸ்போர்டு /அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசிகள் வெவ்வேறு ஆபத்துள்ள மக்களிடையே எப்படி செயலாற்றுகின்றன என்பது தொடர்பாக இங்கிலாந்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் நீரிழிவு, நாள்பட்ட இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட கல்லீரல் நோய் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ள நோயாளிகள் இதில் அடக்கம். இதில் பெருமபாலானோர் வலுவான ஆன்டிபாடி ரெஸ்பான்ஸ்களை பெற்றிருந்தாலும், இவர்களுடன் ஒப்பிடும் போது நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசிக்கு பிறகும் ஆன்டிபாடி அளவுகள் குறைவாகவே இருந்தன.

இவர்களின் ஆன்டிபாடி அளவு குறைவாக இருந்தாலும், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள குழு நோயிலிருந்து நன்கு பாதுகாக்கப்பட்டதாக தோன்றுவதாக ஆய்வாளர்கள் கூறினர். எனினும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசியின் முழு பலன் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது என்பதை இந்த ஆய்வு எடுத்து காட்டியது. நோயெதிர்ப்பு சக்தியை நேரடியாக பாதிக்கும் மருத்துவ நிலைமைகளை கொண்டவர்கள் மற்றும் நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை பயன்படுத்துபவர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு கோவிட் -19 தடுப்பூசியின் முழு நன்மைகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது.

Also Read : உறுப்பு மாற்று நோயாளிகளுக்கு பாதுகாப்பு தரும் மாடர்னா தடுப்பூசி - ஆய்வில் தகவல்

இவர்களை தவிர மரபணு மாற்றங்கள் காரணமாக பிறப்பிலிருந்தே நோயெதிர்ப்பு குறைவாக இருப்பவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன், நீரிழிவு மற்றும் எச்.ஐ.வி தொற்று இருப்பவர்களுக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும். அதே போல ஒரு மருந்து COVID-19 தடுப்பூசியின் நன்மையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது அந்த மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதைப் பொறுத்து மாறுபடும் என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்திறனைக் குறைக்கும் மருத்துவ நிலைமைகள் அல்லது மருந்துகளை எடுத்துக் கொள்வோர், கொரோனா தடுப்பூசி வழங்கும் பாதுகாப்பு சராசரிக்கும் குறைவாக இருக்கக்கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: