ஹப்லாய்டு..டைப்லாய்டு.. தெரிந்துகொள்வோம்: தினசரி முட்டை சாப்பிட்டால் ஆபத்து வருமா?

முட்டைகள் சிறந்த ஊட்டம் தரும் உணவு என்பது உண்மையே. ஆனால், தினமும் இந்த ஹாப்லாய்டு முட்டைகளை உட்கொள்ளும்போது அதுவே கேடு தரும் உணவாய் மாறிவிடும்.

ஹப்லாய்டு..டைப்லாய்டு.. தெரிந்துகொள்வோம்: தினசரி முட்டை சாப்பிட்டால் ஆபத்து வருமா?
கோப்புப்படம்.
  • Share this:
கோழி முட்டை அசைவப் பிரியர்களின் நாவிற்கு குறைந்த விலையில் உயிரோட்டம் தரும் உணவாய் இருக்கிறது. இது பல்வேறு வகையான வழிகளில் சமைக்கப்பட்டு தினசரி உணவில் இதற்கென ஓர் இடம் ஒதுக்கப்படுகிறது. ஊட்டசத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் உணவு வகைகளில் மிக முக்கியமான ஒன்றாகவும் கோழி முட்டை உள்ளது.

மேலும், தினசரி உடற்பயிற்சி செய்வோர், உடல் நலனை மேம்படுத்த விரும்புவோரின் அன்றாட உணவில் முட்டைக்கு முதலிடம் தான். ஆனால், இந்த முட்டைகள் நம் உடலில் பல இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிதை மாற்றங்கள் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கு முக்கியக் காரணமாக மாறிவிட்டது.

ஈஸ்ட்ரோஜன் (Estrogen) என்கிற ஹார்மோன் ஆண், பெண் என இருபாலரிடமும் சுரக்கிறது. சிறுநீரகத்தில் இருக்கூடிய அட்ரினல் சுரப்பி, பெண்களின் கருப்பை, ஆண்களின் விதைப்பை போன்ற இடங்களில் உற்பத்தி ஆகின்றது. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் பருவ வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மார்பக வளர்ச்சி, கருமுட்டை உற்பத்தி, இடுப்புப் பகுதியைப் பெரிதாக்குதல், எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வேறு சில சுரப்பிகளின் செயல்பாடுகள் என உடலில் பல அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவுகிறது.


இந்த ஈஸ்ட்ரோஜன் என்பது ஈஸ்ட்ராடையால் (estradiol), ஈஸ்ட்ரோன் (estrone), ஈஸ்ட்ரால் (estrol) ஆகியவற்றின் கூட்டு ஹார்மோன் ஆகும். இதில் உள்ள ஈஸ்ட்ராடையால் தற்போது உற்பத்தியாகும் கோழி முட்டையில் அதிகமாகக் காணப்படுகிறது.

முட்டைகளை ஹப்லாய்டு (Haploid), டைப்லாய்டு (Diploid) என இரு வகைகளில் உற்பத்தி செய்யலாம். இயற்கை அல்லது செயற்கை முறையிலோ கருமுட்டையுடன் விந்தணு இணைந்து உயிர்த்தன்மை உடைய முட்டைகள் உருவாக்குதல் டைப்லாய்டு முறை. இம்முறையில் முட்டைகள் ஆண்டொன்றுக்கு சராசரியாக 100 முதல் 150 வரை இருக்கும்.

Also read: இரவு உணவுக்கு 'பரங்கிக்காய் அடை' : நொடியில் ரெடியாகும் ரெசிபிஹாப்லாய்டு முறையில், கோழிகளுக்கு 'ஈஸ்ட்ராடையால்' மாத்திரை அல்லது ஊசி மூலமாகச் செலுத்தப்படும். இம்முறையில் கோழி ஆண்டொன்றுக்கு 200 முதல் 250 வரை முட்டைகளை இடும். அந்த முட்டையில் உயிர்த்தன்மை இல்லாததால் குஞ்சுகள் உருவாகாது.

பலரின் ஊட்டச்சத்துத் தேவையைப் பூர்த்தி செய்ய 'வெள்ளி புரட்சி' மூலம் முட்டைகளின் உற்பத்தியைப் பெருக்க இந்த ஹாப்லாய்டு முறை கைக்கொடுத்தது. என்றாலும், சந்ததிகள் இல்லாமல் போகச் செய்யும் அளவிற்கு ஆபத்தானவை இந்த ஹாப்லாய்டு முட்டைகள்!

இளம் வயதிலேயேப் பூப்படையும் பெண் குழந்தைகள், அளவிற்கு மீறிய உடல் வளர்ச்சி, கருப்பையில் கட்டிகள், அதிக மார்பக வளர்ச்சி எனப் பல உடல் நலச் சிக்கல்கள் கொண்டச் சமூகமாக மாறிவிட்டோம். அது மட்டுமல்லாமல் உடலில் அதிக அளவிலான ஈஸ்ட்ரோஜன், மார்பகப் புற்றுநோய் வருவதற்கானக் காரணமாக அமைகிறது. கருத்தடை மாத்திரைகளில் இருக்கின்ற ஈஸ்ட்ரோஜன் முட்டைகளிலும் இருக்கிறது. இதனால் கருப்பைக் கோளாறு ஏற்பட்டு குழந்தையின்மை அதிகரித்து விட்டது.

ஆண்களின் விந்தணு உற்பத்தியை ஈஸ்ட்ராடையால் பாதிக்கின்றது. மேலும், ஆண்களின் மார்பக வளர்ச்சியையும் இது அதிகரிக்கும். இந்தியாவில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையின் மூலம் ஆண்கள் அதிகம் சரிசெய்து கொள்வது மார்பகங்கள் எனத்  தெரியவந்துள்ளது. உடற்பயிற்சி செய்யும் ஆண்களின் புரதச்சத்தின் மூலப்பொருள் முட்டைகள் என நம்ப வைக்கப்பட்டுள்ளது.

முட்டைகள் சிறந்த ஊட்டம் தரும் உணவு என்பது உண்மையே. ஆனால், தினமும் இந்த ஹாப்லாய்டு முட்டைகளை உட்கொள்ளும்போது அதுவே கேடு தரும் உணவாய் மாறிவிடும். வாரம் ஒன்று அல்லது இருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை. இயற்கை முறையில் உற்பத்தியாகும் கோழி முட்டைகளை அதற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். அதிலும் சில சாயமேற்றப்பட்ட ஹாப்லாய்டு முட்டைகள் கலப்படம் உள்ளது. கவனத்துடன் இருக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.

- வீரச்செல்வி மதியழகன்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading