• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஆண்டுக்கு 1 லட்சம் பேர் மரணத்துக்கு காரணமான ரசாயனம் - ஒரு ஷாக் ரிப்போர்ட்!

ஆண்டுக்கு 1 லட்சம் பேர் மரணத்துக்கு காரணமான ரசாயனம் - ஒரு ஷாக் ரிப்போர்ட்!

phthalates

phthalates

எங்கள் ஆய்வின் மூலம் phthalates அதிகமாக இருப்பவர்களுக்கு இளவயது மரணங்கள் குறிப்பாக இதய நோய் காரணமாக ஏற்படுவதாக கண்டறிந்தோம்.

  • Share this:
குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருட்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் மேக்கப் பொருட்கள் தொடங்கி பிளாஸ்டிக் கண்டெய்னர்கள் வரையிலான பொருட்களில் இருக்கக்கூடிய ஒரு ரசாயனம், அமெரிக்காவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் மரணத்துக்கு காரணமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

பிளாஸ்டிக் கொள்கலன்கள் முதல் ஒப்பனை வரை எல்லாவற்றிலும் பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் குழுவான தாலேட்ஸின் (phthalates) தினசரி பயன்பாடு, வயதில் மூத்த அமெரிக்கர்களில் ஆண்டுதோறும் சுமார் 100,000 இறப்புகளுக்கு காரனமாக இருப்பதாக நியுயார்க் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பல ஆண்டுகளாக நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், ஆடைகள், ஷாம்பூ போன்றவற்றில் நிரம்பியிருக்கும் தாலேட்ஸ் என்ற அந்த ரசாயனம் மனிதர்களளின் நாளமில்லா சுரப்பிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாகும்.

இது போன்ற பொருட்களில் இருக்கக்கூடிய அந்த ரசாயனம் நம் உடலுக்குள் செல்வதால் நமக்கு இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் போன்றவற்றிற்கு காரணமாக இருப்பதாக ஜூர்னல் என்விரான்மெண்ட் பொலூஷன் என்ற இதழில் வெளியாகி இருக்கும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: வீர சாவர்கர் முஸ்லிம்களுக்கு எதிரியல்ல – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கம்!

இந்த ஆய்வானது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக்கல்லூரி சார்பில் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்காக 55 முதல் 64 வயதுடைய மூத்தவர்களிடம் சோதனை நாடத்தப்பட்டுள்ளது. அதிகமான ரசாயனம் சிறுநீரில் நிறைந்திருப்போருக்கு இதய நோய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த பாதிப்பினால் புற்றுநோய் இறப்புகளுக்கு வாய்ப்பு குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வினை தலைமையேற்று நடத்திய கட்டுரையாளர் லியானார்டோ ட்ரசண்டே தெரிவித்ததாவது, “எங்கள் ஆய்வின் மூலம் phthalates அதிகமாக இருப்பவர்களுக்கு இளவயது மரணங்கள் குறிப்பாக இதய நோய் காரணமாக ஏற்படுவதாக கண்டறிந்தோம்.

Also Read:   Mask Gun: அசத்தும் இந்திய ஆன்லைன் ஷூட்டர் கேம்.. புதிய சாதனை!

மரணங்களுக்கும், phthalatesக்குமான தொடர்பை நேரடியாக அறுதியிட்டுக் கூறமுடியவில்லை எனவும் இதற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: