ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் ஆணுறுப்பு நீளம் குறைந்துவிடுமா..? என்ன காரணம்..? சரி செய்ய டிப்ஸ்..!

குளிர்காலத்தில் ஆணுறுப்பு நீளம் குறைந்துவிடுமா..? என்ன காரணம்..? சரி செய்ய டிப்ஸ்..!

ஆணுறுப்பு நீளம்

ஆணுறுப்பு நீளம்

குளிர்காலத்தில் ஆண்குறி 50 சதவீதம் நீளத்தில் சுருங்கி அகலத்தில் 20 முதல் 30 சதவீதம் வரை சுருங்கும் .

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குளிர்காலத்தில் சளி , இருமல், தொண்டை வலி என பாடாய் படுத்தும் பருவகால தொற்றுக்கு மத்தியில் ஆண்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை வருவது சற்று வேதனைக்குறிய விஷயம்தான். அதாவது குளிர்காலத்தில் ஆண்குறி நீளம் மற்றும் அகலம் சுருங்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

மென்ஸ் ஹெல்த் இணையதளத்தில் கூறியபடி, குளிர்காலத்தில் ஆண்குறி 50 சதவீதம் நீளத்தில் சுருங்கி அகலத்தில் 20 முதல் 30 சதவீதம் வரை சுருங்கும் . காரணம் பொதுவாகவே ஆண்குறி 60 டிகிரிக்கு கீழான வெப்பநிலையில் இருக்கும்போது சுருங்கும் தன்மை கொண்டது என்பதால் இது இயல்பானதுதான்.

இதுகுறித்து செக்ஸுவல் ஹெல்த் மருத்துவர் டேரியஸ் பதுச் பேசுகையில் “ உங்கள் உடல் அதிக குளிரை தாங்கும்போது இரத்த குழாய்கள் சுருங்கும். இந்த சமயத்தில் உடல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் பாய்வது மெதுவாகும். இதனால் ஆண்குறிக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காத போது இப்படி சுருங்குகிறது” என்று கூறுகிறார்.

இவ்வாறு சுருங்குவது ஒருவிதத்தில் நல்லதுதான் என்று சொல்லப்படுகிறது. அதாவது நமது உடலானது எந்த தகவமைப்பையும் தாங்கிக்கொள்ள ஏதுவாக படைக்கப்பட்டது. அந்த வகையில் குளிர்காலத்தில் உடல் சூடான வெப்பநிலையையும், ஆற்றலையும் தக்க வைத்துக்கொள்கிறது. பின் உடல் இயங்குவதற்கு தேவையான இரத்த ஓட்டத்தை பாய்ச்ச அந்த வெப்பநிலையை பயன்படுத்திக்கொள்கிறது. இதனால் சீரான இரத்த ஓட்டத்தை தக்கவைக்கிறது.

முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் கிடைக்க வேண்டுமெனில் கை விரல்கள், கால் விரல்கள் மற்றும் ஆணுறுப்புக்கு இரத்த ஓட்டம் அனுப்புவதை தாமதப்படுத்துவதே சரியான செயலாக கருதுகிறது.

Also Read : மனைவிக்கு செக்ஸில் ஆர்வமில்லையா? சிக்கல் இதுவாக இருக்கலாம்..!

இதற்கு மற்றொரு வேடிக்கையான கருத்தும் சொல்லப்படுகிறது. அதாவது குளிர்காலத்தில் கதகதப்பான உடல் சூட்டில் உங்களுக்கு உடலுறவில் எண்ணம் அதிகரித்துவிட்டால் நீங்கள் அதற்கே மொத்த ஆற்றல் மற்றும் வெப்பநிலையையும் இழக்கக் கூடும். எனவேதான் உடலானது ஆணுறுப்புக்கு இரத்த ஓட்டத்தை தாமதப்படுத்தி சுருக்கி வைக்கிறது என்று கூறப்படுகிறது.

இது எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் அவ்வாறு ஆணுறுப்பு சுருங்குவதில் சில நடைமுறை சிக்கல்களும் உள்ளன. அதாவது அது ஆண்களுக்கு அசௌகரியத்தை உண்டாக்குமாம். காரணம் ஆணுறுப்புக்கு இரத்த ஓட்டம் குறைவதால் அது ரப்பர் போல் மாறிவிடும். இதனால் உள்ளாடை மற்றும் பேண்ட் அணியும்போது அது அசைந்து அசௌகரியத்தை உண்டாக்குமாம். அது தொல்லையாக இருந்தாலும் சிலருக்கு உராய்வை ஏற்படுத்தி வலியையும் உண்டாக்கும் என்கிறார் மருத்துவர் பதுச்.

இதை சமாளிக்க ஸ்போர்ட்ஸ் பாக்சர் உள்ளாடைகள் அணிவது அதன் உராய்வை தவிர்க்க உதவும் என்கிறார்.

இப்படி குளிர்காலத்தில் ஆணுறுப்பு சுருங்குவதால் புதுமண தம்பதிகளுக்கு பிரச்சனையாக இருக்கலாம். இதற்கு சிறந்த வழியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

அதேபோல் இப்படி ஆண்குறி சுருங்குதல் என்பது தற்காலிகமே தவிர நிரந்தரமானதல்ல. நீங்கள் கதகதப்பான வெப்பநிலைக்கு மாறினால் உங்கள் ஆண்குறியும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். காரணம் அந்த சமயத்தில் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதால் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் வேகமாக பாயும். குறிப்பாக ஆண்குறிக்கும் இரத்த ஓட்டம் கிடைக்கும் என்பதால் ஆண்குறி சுருங்குவது நிகழாது.

First published:

Tags: Erectile Dysfunction, Penis Size, Sexual Wellness, Winter