• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மாத்திரையை எப்படி சாப்பிட்டால் அதனுடைய பலனை பெற முடியும் ?

மாத்திரையை எப்படி சாப்பிட்டால் அதனுடைய பலனை பெற முடியும் ?

காட்சி படம்

காட்சி படம்

மாத்திரையை எப்படி சாப்பிட்டால் விரைவாக அதனுடைய பலனை பெறமுடியும் என ஆய்வில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    நோய் வருவதை யாரும் விரும்பவில்லை. ஒருவேளை காய்ச்சல் அல்லது சளியால் பாதிக்கப்பட்டால் விரைவாக அதிலிருந்து மீண்டு வந்து அன்றாட வேலைகளை கவனிக்க வேண்டும் என அனைவரும் எண்ணுகிறோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை சாப்பிடவும் தயாராக இருக்கிறோம். ஆனால், மாத்திரையை குளிர்ந்த நீரில் சாப்பிடலாமா? அல்லது வெதுவெதுப்பான சூடான நீரில் சாப்பிடலாமா? என பலருக்கும் சந்தேகம் இருந்து வருகிறது. அந்த சந்தேகத்துக்கு பதில் அண்மையில் வெளியாகியுள்ள மருத்துவக் கட்டுரை ஒன்றில் கிடைத்துள்ளது. மாத்திரையை எப்படி சாப்பிட்டால் விரைவாக அதனுடைய பலனை பெறமுடியும் என ஆய்வில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாத்திரையை எவ்வாறு எடுத்துக்கொள்வது? : ஜர்னல் பார்மாசூட்டிகல் (Journal Pharmaceutical) இது தொடர்பாக ஆய்வு நடத்தியது. அதில், சளி மற்றும் காய்ச்சலுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் விரைவாக பலனைக் கொடுக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், வெதுவெதுப்பான நீரில் மாத்திரையை கரைத்து பானமாக சாப்பிட வேண்டும் என கூறியுள்ளது. இதனால், மாத்திரைகள் விரைவாக உடலுக்குள் உறிஞ்சப்பட்டு குறைந்த நேரத்தில் நிவாரணம் பெற முடியும் என பார்மாசூட்டிக்கல் இதழ் கூறுகிறது.

    ஆய்வு முடிவு  : காய்ச்சல் மற்றும் சளிக்காக எடுத்துக்கொள்ளும் பாராசிட்டமால் எவ்வாறு உறிஞ்சப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். 25 ஆண்களிடமிருந்து இது தொடர்பான தகவல்களை சேகரித்தனர். முதலில் மாத்திரை வடிவில் விழுங்கிய அவர்கள் பின்னர், சூடான நீரில் கரைத்து குடித்தனர். சிண்டிகிராபிக் இமேஜிங் மற்றும் ரத்தபரிசோதனை மூலம் ஆய்வு செய்ததில் மாத்திரையை விழுங்குவதை விட, சூடான நீரில் விழுங்கும்போது விரைவாக செயல்படுவது கண்டறியப்பட்டது. அதாவது, பானமாக மாத்திரையைக் குடிக்கும்போது விரைவாக சிறுகுடலை அடைந்து ரத்தத்தில் மாத்திரைகள் கலப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து, சூடான நீரில் மாத்திரையை கரைத்து குடித்தால் விரைவாக நிவாரணம் பெற முடியும் என்பதை உறுதி செய்தனர். ஏறத்தாழ ஒரு மணி நேரம் முன்கூட்டியே நிவாரணம் பெற முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    also read : பேரீச்சம் பழத்தை சாப்பிட சரியான நேரம் எது ? எப்படி சாப்பிட வேண்டும் ?

    சூடான நீரில் மருந்து வேகமாக செயல்படுவது ஏன்? : சூடான நீரில் கரைத்து சாப்பிடும் மாத்திரைகள் வேகமாக செயல்படுவது ஏன்? என ஆய்வாளர்களிடம் கேட்டபோது, சூடான நீர் இரப்பையை விரைவாக காலியாக்குவதாக தெரிவித்துள்ளனர். இதனால், மாத்திரைகள் சிறுகுடல்களுக்கு வேகமாக நகர்ந்து ரத்தத்தில் கலப்பதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், பாதிக்கப்பட்ட நபரும் சளி காய்சலில் இருந்து வேகமாக நிவாரணம் பெறுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், சூடான நீர் மாத்திரைகளை வேகமாக உடைத்து கரைப்பதாகவும் அவர்கள் விளக்கியுள்ளனர்.

    நீங்கள் மாத்திரையை எப்படி சாப்பிடலாம்? : சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், பாரசிட்டமால் மாத்திரையை வெதுவெதுப்பான நீரில் கரைத்து சாப்பிடலாம். சூடான நீர் மாத்திரைகளின் கலவையை மாற்றாது எனக் கூறியுள்ள ஆய்வாளர்கள், காஃபி, ஜூஸ் உள்ளிட்டவைகளுடன் கலந்து சாப்பிட்டால் பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்துள்ளனர். தண்ணீர் இல்லாமல் மாத்திரைகளை அப்படியே விழுங்குவது மூச்சுத்திணறல், உணவுக்குழாய் எரிச்சல் மற்றும் அழற்சியை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். சில நேரங்களில் ரத்தப்போக்கு ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: