முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Pubic Hair Removal: பெண்கள் பிறப்புறுப்பில் வளரும் முடியை ஏன் நீக்கக்கூடாது..?

Pubic Hair Removal: பெண்கள் பிறப்புறுப்பில் வளரும் முடியை ஏன் நீக்கக்கூடாது..?

பெண்கள் பிறப்புறுப்பில் வளரும் முடியை ஏன் நீக்கக்கூடாது..?

பெண்கள் பிறப்புறுப்பில் வளரும் முடியை ஏன் நீக்கக்கூடாது..?

உடலின் அந்தரங்க பகுதிகளில் வளரும் முடி தொற்று ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. நுண்கிருமிகளால் உண்டாகக்கூடிய தொற்று பாதிப்பை தடுத்து, உடலுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிறப்புறுப்பில் இருக்கும் முடியை நீக்கலாமா நீக்க கூடாதா என்பது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் தான். குறிப்பிட்ட மருத்துவ காரணங்கள் இருக்கின்றன அல்லது சுகாதார காரணங்கள் இருக்கின்றன என்று எதையுமே குறிப்பிட்டு பெண்கள் அந்தரங்க பகுதியில் இருக்கும் முடியை நீக்கக் கூடாது அல்லது நீக்க வேண்டும் என்று கூற முடியாது. இது மிகவும் தனிப்பட்ட ஒரு முடிவாகும்.

ஒரு சிலர் முழுவதுமாக அகற்றிவிட முடிவு செய்வார்கள்; ஒரு சிலர் சுகாதாரம் கருதி, சௌகரியம் கருதி டிரிம் மட்டும் செய்வார்கள்; ஒரு சிலர் இயற்கையாகவே அப்படித்தான் இருக்கிறது எனவே அதை எதற்கு நீக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் அந்தரங்கப் பகுதியின் முடியை நீக்க மாட்டார்கள். இதற்காக லேசர் சிகிச்சைகள் கூட வந்துள்ள நிலையில், பிறப்புறுப்பில் உள்ள முடியை ஏன் நீக்கக்கூடாது என்பதற்கான மிக முக்கியமான சில காரணங்கள் உள்ளன. அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது

உடலின் அந்தரங்க பகுதிகளில் வளரும் முடி தொற்று ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. நுண்கிருமிகளால் உண்டாகக்கூடிய தொற்று பாதிப்பை தடுத்து, உடலுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. பெண்களுக்கு வஜைனாவில் பாக்டீரியா தொற்று, சிறுநீர்த்தொற்று, ஈஸ்ட் இன்பெக்ஷன் உள்ளிட்டவற்றை தடுக்கும் அரணாக இருக்கிறது.

தோல் உராய்வில் இருந்து பாதுகாப்பு

ஒவ்வொரு நபருக்கும் உடலின் வெவ்வேறு பாகங்களில் சருமத்தின் தன்மை மாறுபடும். பிறப்புறுப்பில் காணப்படும் சருமம் மிகவும் மென்மையானதாகவும் சென்சிடிவ்வாகவும் இருக்கும். நீங்கள் தரமான, மென்மையான உள்ளாடையை அணியவில்லை என்றால் கூட சிவந்து போகுதல், தடிப்புகள், அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாகும். அது மட்டுமில்லாமல் தோல் உராய்வு, எரிச்சலையும் ஏற்படுத்தும். எனவே பிறப்புறுப்பில் இருக்கும் முடி இவற்றைத் தடுத்து, இயற்கையான லூப்ரிகண்ட் ஆக செயல்பட்டு, பிறப்புறுப்பைச் சுற்றி உள்ள பகுதிகளில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.

வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதுதான் பெண்களுக்கு PCOS -ஐ அதிகரிக்கிறதா..?

பிறப்புறுப்பில் முடி இருப்பது சுகாதாரமற்றது அல்ல

உடலில் இருக்கும் மற்ற பகுதிகளை போலவே வஜைனாவிலும் வியர்வை வரும், அசுத்தமாகும், அதுமட்டுமில்லாமல் துர்நாற்றம் காணப்படும். ஆனால் எப்படி முகம் கழுகிறோமோ, அதேபோல பிறப்புறுப்பையும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். பிறப்புறுப்பில் முடி இருப்பதால்தான் துர்நாற்றம் வீசுகிறது என்பது அர்த்தம் கிடையாது.

வஜைனாவின் டெம்பரேச்சரை சரியான அளவில் வைத்திருக்கும்

ஏற்கனவே கூறியது போல பிறப்புறுப்பில் வளர்ந்திருக்கும் முடி சரியான அளவு ஈரப்பதத்தை தக்கவைத்து வைக்க உதவுகிறது. எனவே தட்பவெப்ப நிலை அதிக வெப்பமாக இருந்தாலும் சரி, குளிர்ச்சியாக இருந்தாலும் சரி, உங்களுடைய அந்தரங்க உறுப்பு சரியான டெம்ப்ரேச்சரில் இருப்பதை உறுதி செய்கிறது.

குழந்தை பிறந்த பெண்கள் அலுவலகத்தில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள்!

அரிப்பும் எரிச்சலும் ஏற்படாது

பிறப்புறுப்பில் இருக்கும் முடியை முழுவதுமாக நீக்கினால் மென்மையாக, சௌகரியமாக, வசதியாகவும் உணர்வீர்கள். ஆனால் சில நாட்களில் மீண்டும் முடி வளர துவங்கும் பொழுது அடுத்த சில நாட்களுக்கு தீவிரமான அரிப்பும் எரிச்சலும் ஏற்படும். எனவே இதைத் தவிர்க்க வேண்டுமானால் பிறப்புறுப்பில் இருக்கும் முடியை நீக்காமலேயே இருக்கலாம்.

First published:

Tags: Intimate Hygiene, Pubic Hair, Vegina