ஆப்பிளை தோலோடுதான் சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா ?

ஆப்பிலை தோலோடு உண்பதால் 8.4 மில்லிகிராம் வைட்டமின் C சத்து கிடைக்கும்.

Web Desk | news18
Updated: June 26, 2019, 9:29 PM IST
ஆப்பிளை தோலோடுதான் சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா ?
ஆப்பில்
Web Desk | news18
Updated: June 26, 2019, 9:29 PM IST
ஆப்பிளை இன்று ஸ்னாக்ஸ் போல் சாப்பிடும் பழக்கம் பலரிடமும் அதிகரித்துவிட்டது. குறிப்பாக பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கும் ஆப்பிளை ஸ்னாக்ஸாகக் கொடுத்துவிடுகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆப்பிளை சாப்பிடும்போது தோலை நீக்கிவிட்டு உண்கிறார்கள். அவ்வாறு உண்பதால் முழுமையாகச் சேர்கிறதா என்று தெரியுமா ?

ஆப்பிளின் தோலோடு சாப்பிடும்போது 4.4 கிராம் நார்சத்து கிடைக்கிறது. தோலை நீக்கிவிட்டு உண்டால் வெறும் 2.1 கிராம் நார்சத்துதான் கிடைக்கும். இதனால் 3 கிராம் நார்சத்தை இழக்கிறீர்கள்.

ஆப்பிளை தோலோடு உண்பதால் 8.4 மில்லிகிராம் வைட்டமின் C சத்து கிடைக்கும். தோலை நீக்கினால் 6.4 மில்லிகிராம் வைட்டமின் C சத்தை இழப்பீர்கள்.


ஆப்பிள் தோலில் க்யூயர்சிடின் ( quercetin ) என்னும் கலவை உள்ளது. தோலோடு தினமும் உண்டு வந்தால் நுரையீரல் பிரச்னை இருக்காது.க்யூயர்சிடின் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். அல்சீமர் நோய் கொண்டோர் தினமும் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கும் தோலோடு உண்ண கொடுக்கலாம்.

Loading...

டிரைடர்பெனாய்ட்ஸ் ( triterpenoids ) என்னும் கலவை ஆப்பிள் தோலில் இருப்பது புற்றுநோய் செல்களை அழிக்க உதவும். கல்லீரல் புற்றுநோய் , மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் என அதிகமாகத் தாக்கக் கூடிய புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும்.ஆப்பிள் தோலில் இயற்கையாக உருவாகக் கூடிய மெழுகில் உர்சோலிக் அமிலம் ( ursolic acid ) உள்ளது. அது உடலின் கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் பருமனை கட்டுப்படுத்தும்.

ஆப்பிள் தோலில் ஃப்ளேவனாய்ட்ஸ் என்னும் நச்சு நீக்கி இருக்கிறது. அது கண்கள் மற்றும் தலை முடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் E மற்றும் எலும்பு உறுதிக்கு உதவும் வைட்டமின் K ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
பெக்டிக் என்னும் வேதிப்பொருள் ஆப்பிள் தோலில் இருப்பதால் உடலில் நச்சு நீக்கும் செயலை சிறப்பாகச் செய்கிறது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...