Home /News /lifestyle /

டைனிங்கை விட சம்மணங்கால் போட்டு சாப்பிடுவதுதான் நல்லது : விளக்கும் ஊட்டச்சத்து நிபுணர்...

டைனிங்கை விட சம்மணங்கால் போட்டு சாப்பிடுவதுதான் நல்லது : விளக்கும் ஊட்டச்சத்து நிபுணர்...

டைனிங்கை விட சம்மணங்கால் போட்டு சாப்பிடுவதுதான் நல்லது

டைனிங்கை விட சம்மணங்கால் போட்டு சாப்பிடுவதுதான் நல்லது

”தரையில் அமர்ந்து சம்மணங்கால் போட்டு அமரும்போது உடல் தசைகள் இலகுவாகும். இதனால் மூளையும் அமைதி நிலையை அடையும். இந்த சமயத்தில் நாம் சாப்பிடும் உணவின் மீதான கவனமும் அதிகரிக்கும். இது நம் உடலுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
டைனிங் கலாச்சாரம் இன்று சாதாரணமான மற்றும் இயல்பான விஷயமாக மாறிவிட்டது. இது சாப்பிடுவதற்கு எளிய முறையாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்றால் சந்தேகமே... சாப்பிடும் உணவில் ஆரோக்கியம் பார்த்தால் போதும் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதிலும் ஆரோக்கியம் அவசியமா என்றால் நிச்சயம் அவசியம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டிம்பிள் ஜங்க்டா.

இவர் இஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ குறிப்பில் ”கீழே அமர்ந்து சாப்பிடும் முறை நம் உணவு செரிமானத்தை மேம்படுத்த உதவும்” என்கிறார். இதை சுகா (sukha) ஆசன முறை என்கிறார்.

அதாவது ”தரையில் அமர்ந்து சம்மணங்கால் போட்டு அமரும்போது உடல் தசைகள் இலகுவாகும். இதனால் மூளையும் அமைதி நிலையை அடையும். இந்த சமயத்தில் நாம் சாப்பிடும் உணவின் மீதான கவனமும் அதிகரிக்கும். இது நம் உடலுக்கு பெரும் உதவியாக இருக்கும்” என்கிறார்.

அதாவது நாம் தரையில் சம்மணங்கால் போட்டு அமரும்போது செரிமானம் சீராகும். உணவின் ஊட்டச்சத்தை உடலுக்கு சீராக கொண்டு சேர்ப்பதிலும் சிரமம் இருக்காது என்கிறார்.

மேலும் அவர் ”நாம் உணவில் கவனம் செலுத்தும்போது மூளையானது ஒரே நேரத்தில் கண், காது, மூக்கு, வாய் , கை என ஐந்து உணர்வு உறுப்புகளிடமிருந்தும் சிக்னலை பெறும். பின் இந்த சிக்னலை வைத்து வயிறுக்கு நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்கிற செய்தியை அனுப்பும். பின் உடனே வயிறானது நீங்கள் சாப்பிடப்போகும் உணவுக்கான செரிமான அமிலத்தை முன்கூட்டியே சுரக்க ஆரம்பிக்கும். இதனால் நீங்கள் சாப்பிட்ட பின் செரிமானம் எளிதாக நடைபெறும்”.




இப்படி நீங்கள் அமர்ந்து சாப்பிடும்போது வயிற்றுக்குக் கீழ் உள்ள பாகங்கள் ஓய்வு நிலையில் இருக்கும். இந்த சமயத்தில் அந்த உறுப்புகளுக்கு தேவையான இரத்தத்தை அனுப்ப இதயத்திற்கு கூடுதலாக அழுத்தம் கொடுக்கும் வேலை இருக்காது. இதனால் இதயத்தின் செயல்பாடும் எளிதாக இருக்கும். எனவே வயிறு வரை மட்டுமே இரத்த ஓட்டத்தை பாய்ச்சுவதால் இரத்த ஓட்டம் வேகமாகவும் , சீராகவும் நடக்கும்.

இப்படி இரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது செரிமானமும் சீராக இருக்கும். நமக்கு முழுமையாக சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும். இப்படி கீழே அமர்ந்து சாப்பிடும்போது சிலருக்கு இருக்கும் எமோஷ்னல் ஈட்டிங் குறைபாடும் சரி செய்யப்படலாம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.

சமந்தா இவ்வளவு ஃபிட்டாக இருக்க என்ன காரணம் தெரியுமா..? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க...

அதேபோல் உணவின் மீது கவனம் செலுத்தி சாப்பிடும்போது நாம் நம் தேவைக்கு ஏற்ப மட்டுமே சாப்பிடுவோம். இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையும் இருக்காது. சிலர் செரிமானமின்மை, வயிறு மந்தம் போன்ற பிரச்சனைகளாலும் அவதிப்படுவார்கள். அவர்களுக்கும் இப்படி கீழே அமர்ந்து சம்மணங்கால் போட்டு சாப்பிடும் முறை உதவியாக இருக்கும் என்கிறார்.

இறுதியாக உங்களால் பொது இடங்களில் தரையில் அமர்ந்து சாப்பிட முடியாத சூழல் இருந்தால் குறைந்தபட்சம் வீட்டிலாவது கீழே அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டிம்பிள்.

 

 

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Digestion Problem, Food

அடுத்த செய்தி