Home /News /lifestyle /

ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் வைட்டமின் பி12 குறைபாடு : எச்சரிக்கும் மருத்துவர்கள்

ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் வைட்டமின் பி12 குறைபாடு : எச்சரிக்கும் மருத்துவர்கள்

வைட்டமின் பி12 குறைபாடு

வைட்டமின் பி12 குறைபாடு

வைட்டமின் பி12 மற்ற வைட்டமின்களை போலவே மிகவும் முக்கியமானது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. ஆல் ஹெல்த் அறிக்கையின்படி, வைட்டமின் பி12 அறிவியல் ரீதியாக கோபாலமின் என்று அழைக்கப்படுகிறது.

நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ, தினசரி உணவில் கவனம் செலுத்துவது அவசியம். முக்கியமாக துரித உணவுகளை தவிர்த்து இயற்கை முறையில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில், வைட்டமின்கள் குறைபாடு உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பல காரணங்களுக்காக உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவைப்படும் அவசியமான வைட்டமின்கள் சி, ஈ, கே மற்றும் பலவற்றைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் வைட்டமின் பி12 மற்ற வைட்டமின்களை போலவே மிகவும் முக்கியமானது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. ஆல் ஹெல்த் அறிக்கையின்படி, வைட்டமின் பி12 அறிவியல் ரீதியாக கோபாலமின் என்று அழைக்கப்படுகிறது. இது கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. மனித உடலில் முக்கிய செயல்பாடுகளைச் செய்ய வைப்பதில் வைட்டமின் பி 12 முக்கிய கருவியாக உள்ளது.

பொதுவாக வயதான காலத்தில் ஒருவரின் நினைவாற்றல் பலவீனமடைகிறது. இது இயற்கையானது தான். ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்கப்படாவிட்டால் நிலைமை மோசமாகி அது டிமென்ஷியாவாக உருவாகலாம். ஞாபக மறதி மற்றும் டிமென்ஷியாவுக்கு முக்கிய காரணம் உடலில் வைட்டமின் பி12 இல்லாததுதான். யு.எஸ். நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் அறிக்கையின்படி, உடலில் வைட்டமின் பி12 இல்லாததால், குறைந்தபட்ச அறிவாற்றல் குறைபாடு மற்றும் டிமென்ஷியா நிலை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.



வைட்டமின் பி12 குறைபாடு நமது டிஎன்ஏ தொகுப்பை பாதிக்கலாம். மேலும் இந்த குறைபாட்டினால் இரத்த சிவப்பணுக்கள் உருவாகும் வேகம் குறைகிறது. இது மெகாலோபிளாஸ்டிக் அனீமியா என்ற கொடிய நோயை உருவாக்கும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.

வைட்டமின் பி 12 இன் குறைபாடு முக்கியமாக நுண்ணூட்டச்சத்து அல்லது நோயெதிர்ப்பு நிலையின் மோசமான உறிஞ்சுதல் காரணமாக ஏற்படுகிறது. எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், இந்த குறைபாடு இருந்தால் செரிமான அமைப்பில் வைட்டமின்கள் மோசமாக உறிஞ்சப்படுவதால் ஏற்படுகிறது. இது வைட்டமின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.

இந்த 5 விஷயங்களில் கவனம் செலுத்தினாலே ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்...

முக்கியமாக வைட்டமின் பி12 குறைபாடு சைவ உணவு அல்லது சைவ வீகன் உணவினை பின்பற்றுபவர்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. இந்த வைட்டமின் சத்து முக்கியமாக இறைச்சி, மீன், முட்டை, கடல் உணவுகள் மற்றும் பால் பொருட்கள் போன்ற விலங்கு தோற்றம் கொண்ட உணவுகளில் காணப்படுகிறது.



மேலும், இந்த குறைபாட்டினால் ஏற்படும் அறிகுறிகளை நாம் கண்காணிப்பதும் அவசியம். அவை பின்வருமாறு...

* நினைவாற்றல் இழப்பு, பேசுவதில் சிரமம்.

* பலவீனம், தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் ஆகியவற்றின் நிலையான உணர்வு.

* தோல் நிறம் திடீரென மஞ்சளாக மாறுவது.

* குறைக்கப்பட்ட அனிச்சை செயல்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Vitamin B12

அடுத்த செய்தி