ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மாதவிடாய் நின்ற பெண்கள் ஏன் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்..?

மாதவிடாய் நின்ற பெண்கள் ஏன் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்..?

ஆஸ்டியோபோரோசிஸ்

ஆஸ்டியோபோரோசிஸ்

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளை பலவீனமாக்கும் நோயாகும். இதை தமிழில் எலும்புப்புரை என்று அழைப்பார்கள். இந்த நோயில் எலும்புத் தாது அடர்த்தி (Bone Mineral Density) குறையும். எலும்பு நுண்ணிய கட்டமைப்பு தகர்க்கப்படும். இதனால் எளிதில் எலும்புகள் உடைந்துவிடும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  40 வயதை கடந்தபின் சினைப்பையில் உள்ள கருமுட்டைகள் முடியும்போது பெண்களுக்கு மாதவிடாய் முற்றிலுமாக நின்றுவிடும். இதுதான் மெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. இது மாதவிடாயிலிருந்து சுதந்திரத்தை தந்தாலும் அதற்கு பின் உண்டாகும் அறிகுறிகள் இன்னும் கடுமையானதாக இருக்கும்.

  ஹார்மோன் மாற்றங்கள் , மன அழுத்தம், அடிக்கடி உடல் சோர்வு, மனப்பதட்டம், தூக்கமின்மை, அசௌகரிய உணர்வு , உடலுறவில் ஈடுபாடின்மை என பல அறிகுறிகளை சந்திக்கக் கூடும். அதோடு இதய ஆரோக்கியம் , மற்றும் எலும்பு ஆரோக்கியமும் கூட வலுவிழக்கிறது.

  சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் ஃபவுண்டேஷன் கூற்றுப்படி 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக எலும்பு முறிவு உண்டாகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் பெண்களை அதிகமாக தாக்குவதால் எலும்பு பலவீனத்தால் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் போகிறது.

  ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன..?

  ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளை பலவீனமாக்கும் நோயாகும். இதை தமிழில் எலும்புப்புரை என்று அழைப்பார்கள். இந்த நோயில் எலும்புத் தாது அடர்த்தி (Bone Mineral Density) குறையும். எலும்பு நுண்ணிய கட்டமைப்பு தகர்க்கப்படும். இதனால் எளிதில் எலும்புகள் உடைந்துவிடும். எடை அதிகமான பொருட்களையும் உங்களால் தூக்க முடியாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் இருக்காது. தீவிரமடைந்த பின்னரே அறிகுறிகள் தெரிய வரும்.

  Also Read :  10 நிமிடம் சூரிய நமஸ்காரம் செய்தாலே இவ்வளவு கலோரிகளை குறைக்கலாமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

  எனவே மெனோபாஸுக்குப் பின் இந்த எலும்புப்புரை நோயால் நீங்கள் தவிர்க்க விரும்பினால் கீழ்காணும் இந்த விஷயங்களை பின்பற்றுவது அவசியம்.

  கால்சியம் நிறைந்த உணவுகள் : எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுவாக்க கால்சியம்தான் தீர்வு. எனவே கால்சியத்தை நிறைவாக கொண்டிருக்கும் முட்டைகோஸ், கீரை, புரக்கோலி , பச்சை இலை காய்கறிகள், பால், சாலை மீன் போன்ற உணவுகளை சாப்பிடலாம். இப்படி கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.

  தினமும் உடற்பயிற்சி : உடற்பயிற்சி செய்வதால் எலும்பு மற்றும் தசைகள் வலுவாகும். எனவே குறைந்தது வாரத்தில் 3-4 நாட்கள் உடற்பயிற்சி செய்தால் எலும்புப்புரை நோயை தவிர்க்கலாம். உடற்பயிற்சி செய்ய விரும்பவில்லை எனில் டென்னிஸ், ஸூம்பா, போன்ற விஷயங்களையாவது பின்பற்றலாம்.

  வைட்டமின் டி அவசியம் : கால்சியம் சத்தை எளிதாக உறிஞ்சு எடுக்க வைட்டமின் டி அவசியம். எனவே தினமும் 20 நிமிடங்களாவது வெயில் உடலில் படும்படி நிற்கலாம் அல்லது உடற்பயிற்சி செய்யலாம். அதோடு விட்டமின் டி நிறைந்த முட்டை மஞ்சள் கரு, சால்மன், கொழுப்பு நிறைந்த மீன் வகைகளை சாப்பிடலாம். மருத்துவரின் ஆலோசனையில் வைட்டமின் டி சப்ளிமெண்ட் உட்கொள்ளலாம்.

  நீங்கள் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளை கவனியுங்கள் : ஏதேனும் உடல் பாதிப்புக்காக தொடர் மாத்திரைகள், சிகிச்சைகள் எடுத்துக்கொள்கிறீர்கள் எனில் அதன் பக்கவிளைவாக எலும்பும் பாதிக்கப்படலாம். எனவே அதற்கு ஏற்ப ஆலோசனைகளை மருத்துவரிடம் பெறுவது நல்லது. எலும்பை வலுப்படுத்தும் மாத்திரை அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றுதல் அவசியம்.

  Also Read : பெண்களுக்கு இரண்டு பிறப்புறுப்புகள் இருக்குமா..? எப்படி கண்டறிவது..? மருத்துவரின் விளக்கம்

  ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் : கருப்பை உற்பத்தி செய்யும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மெனோபாஸுக்கு பின் குறையத் தொடங்கும். இந்த ஹார்மோன் எலும்பு ஆரோக்கியத்தை வலுவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மெனோபாஸுக்கு பின் தீவிர அறிகுறிகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு செயற்கையாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிகிச்சை பரிந்துரைக்கப்படும். இதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை தடுக்க முடியும். எனவே உங்களுக்கும் தேவைப்பட்டால் மருத்துவரிடம் பேசுங்கள்.

  தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை தவிருங்கள் : மது, புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை மெனோபாஸுக்கு பின் குறைத்தல் அல்லது தவிர்த்தல் நல்லது. இது ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை குறைக்கிறது, எலும்புகளையும் பாதிக்கிறது எனவே இதை தவிர்க்க இந்த பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Bone health, Menopause