முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆண்களை விட பெண்களுக்கு அதிக உறக்கம் தேவை : ஏன் தெரியுமா..?

ஆண்களை விட பெண்களுக்கு அதிக உறக்கம் தேவை : ஏன் தெரியுமா..?

தூக்கம்

தூக்கம்

இன்சோம்னியா எனப்படும் உறக்கமின்மை பிரச்சனையானது ஆண்களை விட பெண்களை அதிக அளவு பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஆரோக்கியமான உறக்கம் என்பது அவசியமான ஒன்று. தினசரி இரவில் போதுமான அளவு உறங்கினால் தான் அடுத்த நாள் வேலைகளை செய்வதற்கு உடல் தன்னை புதுப்பித்துக் கொள்ள முடியும். மேலும் போதுமான அளவு உறங்கினால் மட்டுமே உடல் மற்றும் மனம் இரண்டுமே ஆரோக்கியமானதாக இருக்கும். சில சமயங்களில் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் உறங்குவதில் பிரச்சனை ஏற்படும் போது அவை உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்க கூடும்.

வளர்ந்த ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 7 – 9 மணி நேரம் வரையிலான உறக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் வயது, பாலினம், வாழ்க்கைமுறை போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து இந்த நேரம் மாறுபடலாம். பெண்களைப் பொறுத்தவரையில் மாதவிலக்கு காலம், பருவமடைதல், கர்ப்பம் தரித்தல் போன்ற பல்வேறு காரணிகளை பொருத்து அவர்கள் உறங்கும் நேரத்தில் மாற்றங்கள் இருக்கலாம்.

இதில் முக்கியமாக ஆண் பெண் என இரு பாலினத்தவருக்குமே அவரவர் உறங்கும் நேரத்தில் மாற்றங்கள் இருக்கின்றன. முக்கியமாக இன்சோம்னியா எனப்படும் உறக்கமின்மை பிரச்சனையானது ஆண்களை விட பெண்களை அதிக அளவு பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத்தவிர ரெஸ்ட்லஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் மற்றும் அப்ஸ்ட்ராக்டிவ் ஸ்லீப் அப்னியா போன்ற நோய்களும் பெண்களை அதிக அளவு பாதிக்கிறது.

பருவமடைந்த பின் தான் ஆண் மற்றும் பெண்களுக்கு உறங்கும் கால அட்டவணையில் அதிக அளவு மாறுதல்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிடைத்துள்ள தரவுகளின் படி கர்ப்பமாக இருக்கும் பெண்களில் 30 சதவீதம் பேர் இரவில் சரிவர தூங்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்கள். இதுவே பிரசவத்திற்கு பின் 45 சதவீத பெண்கள் சரிவர தூங்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்கள். இதைத் தவிர மெனோபாஸ் காலத்தை கடந்த பெண்களில் 40 சதவீதம் பேர் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். மெனோபாஸ் காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்களின் 45 சதவீதம் பேரும், பருவமடைந்த பெண்களில் 41% பேரும் உறக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read : எச்சரிக்கை..! அதிகமாக கொட்டாவி விட்டால் உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கலாம்..

இதுவே ஆண்களைப் பொறுத்தவரை உறங்கும் போது ஏற்படும் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், மேலும் கிளெயின்-லெவின் சிண்ட்ரோம் ஆகிய நோய்களால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இரவில் சரியாக தூங்காமல் இருக்கும் பெண்களில் பலரும், அதனை ஈடு செய்ய பகல் நேரங்களில் அதிக அளவு தூங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனால் உடல் சோர்வு, வாகனம் ஓட்டுவதில் பிரச்சனை மற்றும் அதிக அளவு காபி உட்கொள்ள விரும்புவது போன்ற பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படிப்பட்ட பெண்கள் அனைவருமே இன்சோமனியா நோய் அல்லது வேறுபல உறக்கம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

First published:

Tags: Sleep Apnea, Sleep deprivation, Women Health