முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பெண்கள் ஏன் எலும்பு ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்..?

பெண்கள் ஏன் எலும்பு ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்..?

எலும்பு ஆரோக்கியம்

எலும்பு ஆரோக்கியம்

எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்தானது சாதாரண பெண்களை விட குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் மிக அதிக அளவில் தேவைப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு வேகமாக சுழன்று கொண்டு இருக்கும் இந்த உலகத்தில் தங்களுடைய உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்ள பலருக்கும் போதுமான நேரம் கிடைப்பதில்லை. அதிலும் முக்கியமாக வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது வேலையையும் பார்த்துக் கொண்டு குடும்பத்தை நிர்வகிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலை உண்டாகியுள்ளது. அதிலும் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் பல விதங்களில் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

இன்றைக்கு பல தாய்மார்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவருடைய எலும்புகளின் ஆரோக்கியமானது அவர்கள் உண்ணும் உணவுகள், செய்யும் உடற்பயிற்சிகள், அவர்கள் செய்யும் வேலை  ஆகியவற்றை பொறுத்து அமைகிறது. அதிலும் முக்கியமாக எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்தானது சாதாரண பெண்களை விட குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் மிக அதிக அளவில் தேவைப்படுகிறது.

வயதை பொறுத்து எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் பின்பற்றப்பட வேண்டிய உணவு முறைகளும் மாறுபடுகின்றன. இளம் வயதினரை பொறுத்தவரை சூரிய ஒளியிலிருந்து கிடைக்க வேண்டிய வைட்டமின் டி கிடைக்காத காரணத்தினால் அவர்களின் எலும்புகளில் பாதிப்புகள் உண்டாகிறது. இதுவே மத்திய வயதை சார்ந்தவர்களும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்கும் வைட்டமின் டி குறைபாட்டினாலும் உடற்பயிற்சி செய்யாத காரணத்தினாலும் எலும்புகளில் பாதிப்புகள் உண்டாகின்றன. முதியோர்களை எடுத்துக் கொண்டால் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு இழப்பு நோயால் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

எவ்வாறு இந்த பிரச்சினையை கையாள்வது..?

முதலில் நம்முடைய உணவுமுறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

பால், யோகர்ட், கீரை வகைகள், பாதாம், மீன், ஆரஞ்சு, ப்ரோக்கோலி, காளான் ஆகியவற்றில் கால்சியம் அதிக அளவில் நிறைந்துள்ளது.

மீன், முட்டையின் மஞ்சள் கரு, காளான்கள் மற்றும் சூரிய ஒளியில் வைட்டமின் டி நிறைந்துள்ளது.

தினசரி உடலுக்கு தேவைப்படும் கால்சியம் மற்றும் அளவுகள் :

தினசரி உடலுக்கு தேவைப்படும் கால்சியம் மற்றும் வைட்டமின் அளவீடுகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. தினசரி உடற்பயிற்சி செய்வதின் மூலம் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே ஆகியவை போதுமான அளவு கிடைப்பதுடன் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. பொதுவாகவே நம் உடலில் உள்ள எலும்புகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சில மாற்றங்களை அடைகின்றன. நாம் தினசரி உடற்பயிற்சி செய்து வந்தால் எலும்புகள் வலுவானதாகவும் உறுதியாகவும் மாறுகின்றன. வாக்கிங் செல்வது, ஓடுவது, உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது, நடனம் ஆடுவது ஆகியவை கூட உடற்பயிற்சியாவே கருத்தில் கொள்ளப்படும்.

Also Read : 40 வயதை எட்டிய பெண்களே.. குளிர்காலத்தில் இந்த ஊட்டச்சத்துகளில் கவனம் செலுத்துங்க..!

இதுவே முதியோர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் ஆஸ்டியோபோரோசிஸ் சென்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உண்மையில் இந்த நோய் வரும் முன் காப்பது என்பது நூறு சதவீதம் சாத்தியம் இல்லை. ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்புகளை நம்மால் குறைக்க இயலும். மருத்துவ பரிசோதனைகளையும் கண்காணிப்பையும் சரியான புரிதலும் இருந்தால் இதிலிருந்து நாம் மீண்டு விடலாம்.

இந்த நோய் பெண்களுக்கு அவர்கள் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் சமநிலை அற்ற தன்மையினால் எலும்பு இழப்பை ஏற்படுத்துகிறது. இதுவே ஆண்களுக்கு 60 வயதுக்கு மேல் உண்டாகிறது. எவ்வளவு சீக்கிரம் இந்த பாதிப்பை நாம் கண்டறிகிறோமோ அவ்வளவு விரைவாக நம்முள் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும். இதற்கான சிகிச்சையை முறையாக சான்றிதழ் பெற்று மருத்துவர் மட்டுமே அளிக்க வேண்டும். மேலும் DEXA ஸ்கேன், ரத்த பரிசோதனை மூலமாக இதனை நாம் கண்டறியலாம். சரியான முறையில் பரிசோதனை செய்தால் தைராய்டு பிரச்சனை மற்றும் ஹார்மோன் சமநிலையற்ற தன்மை ஆகியவற்றை கண்டறிந்து எலும்புகளில் உண்டாகும் பிரச்சனையும் நம்மால் சரி செய்ய முடியும்.

First published:

Tags: Bone, Bone health, Calcium