பிரா என்பது பெண்களின் மார்பக வடிவம் மற்றும் அளவுக்கு உதவுவது மட்டுமல்ல, பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் முதுகுவலியை நிர்வகிக்கவும் உதவுகிறது. இது பெண்கள் பலருக்கே தெரியாத ஒரு விஷயம். பிராக்களுக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. ஆரம்பகாலத்தில் ப்ராக்கள் சந்தைகளில் கிடைப்பதில்லை. விலை உயர்ந்தவையும் கூட என்பதால் படித்த செல்வந்தர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அவற்றை பல காலங்கள் அணிந்தார்கள்.
பிராக்களின் வரலாறு என்பது பெண்களின் சமூக வரலாற்றோடு பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது எனலாம். இதில் ஃபேஷன் பரிணாமமும் பெண் உடல் மீதான மாறுபட்ட பார்வையும் அடங்கும். மேலும், 1960களில் நடந்த நோ-பிரா இயக்கத்தைப் பற்றியும் நம்மில் பலர் அறிந்திருப்போம். மேலும், 19ஆம் நூற்றாண்டில் தான் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவில் உள்ளாடைகள் அறிமுகமானது என்கிறது வரலாறு.
தோல் எரிச்சல்:
நீங்கள் அணியும் பிரா இறுக்கமாக இருக்கும் பட்சத்தில் அவை ஃபோலிகுலிடிஸ், டெர்மடிடிஸ், சொறி மற்றும் படை நோய் உள்ளிட்ட தோல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க | “சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” – நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!
தொடர்ந்து சரிசெய்வது:
இறுக்கமான பிராவை அணிகையில் உங்களை அறியாமலேயே பிராவின் பட்டைகளை தொடர்ந்து சரிசெய்வீர்கள்.
அமில ரிஃப்ளக்ஸ் உருவாகுதல்:
இறுக்கமான பிரா அணிவது மார்பக பகுதிக்கு கீழே கடுமையான வலியை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் இறுக்கம் ஏற்பட்டு ரிஃப்ளக்ஸ் எனும் அமிலம் உருவாகிறது. இந்த அமிலம் வயிற்றுப் பகுதியினை கடுமையாக பாதிக்கலாம்.
பிரா கப் விலகுதல்:
சில நேரங்களில் நீங்கள் அணியும் பிராவானது வீட்டில் நன்றாக பொருந்துவது போல் தோன்றும். ஆனால் நாள் முழுவதும் வெளியே சென்று பணி செய்யும்போது கப்களின் முன்புறம் அல்லது ஓரங்களில் இருந்து உங்கள் மார்பகங்கள் நழுவத் தொடங்கும். ஆகவே, அதுபோன்று நிகழ்வது உங்களுக்கு கவன சிதறல்களை ஏற்படுத்தும். எனவே, பிரா வாங்கும்போது அவற்றின் கப் அளவை கவனிப்பது அவசியம்.
இதையும் படிங்க | ‘40 வயதினிலே’… 40 வயதிலும் உங்கள் எடையை குறைப்பது சாத்தியமே… 5 எஃபெக்டிவ் டிப்ஸ்!
உடலின் மேல் பகுதியில் வலி ஏற்படுதல்:
இறுக்கமாக பிரா அணிவது உங்கள் உடம்பிற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதோடு தோள்பட்டை மற்றும் முதுகுவலி போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது.
சரியான பிராவை தேர்ந்தெடுப்பது எப்படி?
ஒரு அளவு டேப்பின் மூலம் உங்கள் மார்பகங்களுக்கு கீழ் உள்ள பகுதியின் சுற்றளவை குறித்துக் கொள்ளவும். பின் அந்த அளவுடன் இரண்டு இஞ்சினை கூட்டிக் கொள்ளவும். உதாரணத்திற்கு 34 இஞ்ச் என்று வந்தால் 36 இஞ்ச் என்று வைத்துக் கொள்ளவும். மேலும், ஒரு பிராவின் தன்மை பொறுத்து அளவு மாறுபட்டும். இருப்பினும், மார்பளவு, கீழ்ப்பகுதி, பின்பகுதி, தோல்ப்பட்டை இறுக்கம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவும். பிராவின் கப் அளவு உங்கள் மார்பகங்களை முழுவதுமாக கவர் செய்வதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bra, Women Health