முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்பக்காலத்தில் விட்டமின் டி3 பரிசோதனை ஏன் அவசியம்..?

கர்ப்பக்காலத்தில் விட்டமின் டி3 பரிசோதனை ஏன் அவசியம்..?

விட்டமின் டி3

விட்டமின் டி3

கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் முக்கியமான பரிசோதனைகள் ஒன்று ரத்தத்தில் விட்டமின் டி3 அளவை சோதிப்பதாகும். கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் விட்டமின் டி3 குறைந்த பட்சம் சராசரியான அளவாக 30 / ng/ ml அளவு இருக்க வேண்டும் .

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சோபியா தன்னுடைய தோழியோடு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் தன் முதல் கர்ப்பத்தில் இருக்கிறார். அன்று ஸ்கேன் செய்வதற்காக வந்திருந்தார். ஸ்கேன் செய்து கருவினுடைய வளர்ச்சியை உறுதி செய்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார். அடுத்து செய்ய வேண்டிய பரிசோதனைகளுக்கான பட்டியலை கொடுத்துவிட்டு இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் வருமாறு அவரிடம் கூறினேன். பரிசோதனை பட்டியலை பார்த்தவர், " டாக்டர்! இவ்வளவு டெஸ்ட் பண்ணனுமா? வைட்டமின் D3 டெஸ்ட் எதுக்கு டாக்டர் ?" என்று கேட்டார்.

என்னுடைய பதில் :

கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் முக்கியமான பரிசோதனைகள் ஒன்று ரத்தத்தில் விட்டமின் டி3 அளவை சோதிப்பதாகும். கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் விட்டமின் டி3 குறைந்த பட்சம் சராசரியான அளவாக 30 / ng/ ml அளவு இருக்க வேண்டும் .

நம் உடலில் விட்டமின் டி யின் முக்கிய வேலை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் உறுதி . அத்தோடு, நம்முடைய எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது மற்றும் நீர்க்கட்டி சார்ந்த பிரச்சனைகளின் தீவிரத்தை குறைப்பது என்று பல்வேறு வேலைகளை செய்கிறது.

குறைவாக இருந்தால் துவக்கத்திலிருந்து விட்டமின் டி மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளும் பொழுது குழந்தையின் வளர்ச்சி, கர்ப்ப காலத்தில் வரக்கூடிய சிக்கல்கள் குறிப்பாக சர்க்கரை நோய் தொற்று நோய்கள் போன்றவற்றிலிருந்தும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு பாதுகாப்பு பெறலாம்.

உலக அளவில் உள்ள மகப்பேறு மருத்துவ குழுக்கள் மற்றும் அமைப்புகள், கர்ப்ப காலத்தில் துவக்கத்திலிருந்து போலிக் ஆசிட் மாத்திரைகளோடு விட்டமின் டி மாத்திரைகளையும் 1000IU அளவு தினமும் பரிந்துரைக்கின்றன.

பொதுவாக விட்டமின் டி +போலிக் ஆசிட் தினமும் எடுத்துக் கொள்ளக்கூடிய மாத்திரைகளாக சேர்ந்து வருகிறது. விட்டமின் டி மிகவும் குறைவாக இருப்பின் வாரம் ஒருமுறை 8---12 வாரங்கள் வரை எடுக்கலாம்.

Also Read : கர்ப்ப காலத்தில் பிளட் குரூப் பார்ப்பதன் முக்கியத்துவம் என்ன ? Rh negative என்றால் ஒரு குழந்தை தான் பிறக்குமா?

இந்த காரணங்களுக்காக தான் கர்ப்ப காலத்தில் விட்டமின் டி3 குறைபாடு எதுவும் உள்ளதா? என்பதை கண்டறியும் பரிசோதனை மிகவும் முக்கியமானதாகிறது.

விட்டமின் டி3 முக்கியத்துவம் நன்றாக புரிந்தது டாக்டர் . பரிசோதனைகளை எடுத்துவிட்டு முடிவுகளோடு வருகிறேன் என்று விடைபெற்றார் சோபியா.

கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

First published:

Tags: Pregnancy, Pregnancy test, Vitamin D3, பெண்குயின் கார்னர்