Home /News /lifestyle /

வைட்டமின் டி... ஏன் அதன் தேவையைப் பற்றி பேச வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்..? 

வைட்டமின் டி... ஏன் அதன் தேவையைப் பற்றி பேச வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்..? 

வைட்டமின் டி

வைட்டமின் டி

ஆய்வில்,18 முதல் 30 வயதிற்குட்பட்ட இந்தியர்களிடையே விட்டமின் டி பற்றாக்குறையின் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :
  வைட்டமின் டி இன் முக்கியத்துவம் நன்கு அறியப்பட்டு வருகிறது, ஏனெனில் இது ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்க உதவுகிறது, ஆனால் காலப்போக்கில் உடல் செயல்பாடுகள் குறைந்துவிட்டதால், சுறுசுறுப்பான வாழ்க்கையை பராமரிக்க வைட்டமின் D யின் பங்கு முக்கியத்துவம் பெற்றது. வைட்டமின் D குறைபாட்டுடன் தொடர்புடைய பல்வேறு கோணங்களில் ஆராய இது ஒரு நல்ல நேரம் என்று நான் நம்புகிறேன்.

  ஒரு மருத்துவ நிபுணராக நான் நோயாளிகளிடம் எலும்பு/தசை வலிகள் மற்றும் சோர்வு என வெளிப்படும் மோசமான ஆரோக்கியத்தின் அறிகுறிகளைக் கண்டிருக்கிறேன். ஆரோக்கியத்தில் இந்த சீரழிவுக்கு மிகப்பெரிய அடிப்படை காரணங்களில் ஒன்று வைட்டமின் D குறைபாடு ஆகும். அதனால்தான் ஒருவரின் வைட்டமின் D நுகர்வினை கவனத்தில் வைத்திருப்பது மற்றும் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பதும் மிகவும் முக்கியம்.

  நான்,தற்போது நம் கைகளில் உள்ள வெவ்வேறு வகையான உடல்நிலை நெருக்கடிகளின் மீது கவனம் செலுத்த,இது ஒரு நல்ல நேரம் என்று நம்புகிறேன்.நமது வேலை பழக்கங்கள் மாறிவிட்டன என்றாலும், அது ஏற்கனவே இருக்கும் பிற நிலைமைகளையும் மோசமாக்கியுள்ளது.

  ஒரு மருத்துவ நிபுணராக நான்,நோயாளிகளிடம் கடந்த சில மாதங்களாக,உடல் உழைப்பு தேவைப்படாத வாழ்க்கை முறையினால் ஏற்படும் எலும்பு/தசை வலிகள் மற்றும் சோர்வு என வெளிப்படும் மோசமான ஆரோக்கியத்தின் அறிகுறிகளைக் கண்டிருக்கிறேன்.ஆரோக்கியத்தில் இந்த சீரழிவுக்கு மிகப்பெரிய அடிப்படை காரணங்களில் ஒன்று வைட்டமின் D குறைபாடு ஆகும்.அதனால்தான் ஒருவரின் வைட்டமின் டி நுகர்வினை கவனத்தில் வைத்திருப்பது மற்றும் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பதும் மிகவும் முக்கியம்.

  வைட்டமின் D பற்றாக்குறை உலகெங்கிலும் உள்ள மக்கள் தொகையில், 50 சதவீதம் மக்களை பாதிக்கிறது.76 சதவீதம் இந்தியர்கள் போதுமான வைட்டமின் D அளவைக் கொண்டிருக்கவில்லை என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ஆய்வில்,18 முதல் 30 வயதிற்குட்பட்ட இந்தியர்களிடையே இந்த பற்றாக்குறையின் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும்,இந்த பற்றாக்குறையின் பரவலானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சமமாக பரவியுள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

  வைட்டமின் D குறைபாடு, குறைந்த எலும்பு நிறை மற்றும் தசை பலவீனத்துடன் தொடர்புடையது, இதன் விளைவாக எலும்பு முறிவுகள் மற்றும் எலும்பு கோளாறுகளான எலும்பு மென்மை நோய்(ஆஸ்டியோமலாசியா) மற்றும் எலும்புத் திண்மக் குறை (ஆஸ்டியோபீனியா), எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது.

  வளர்ந்து வரும் ஆராய்ச்சி இதய நோய், வகை 2 நீரிழிவு, எலும்பு முறிவுகள் மற்றும் வீழ்ச்சி, மனச்சோர்வு, புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு எதிராக வைட்டமின் D சாத்தியமான பங்கை ஆதரிக்கிறது.

  ஆனால் இந்த. அறிகுறிகளை மனதில் கொண்டு கூட, வைட்டமின் D போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்து இல்லாதது, பல சுகாதார நிலைமைகளை பாதிக்கும் பல்வேறு வழிகளை அறிந்து கொள்வது அவசியம்.எனது நோயாளிகளுக்கு நான் அறிவுறுத்துவது போல, இதுபோன்ற ஒரு நிகழ்வைத் தவிர்க்க நல்ல ஆரோக்கியத்தின் அடிப்படைகளை கவனித்துக்கொள்வதும் முக்கியம்.  வைட்டமின் D அதிகம் உள்ள உணவுகள்:

  தொழில்நுட்ப ரீதியாக, பெரியவர்கள் சுமார் 30 ng/mL வைட்டமின் டி ஐ போதுமான வைட்டமின் டி அளவாக பராமரிக்க வேண்டும்.வைட்டமின் டியின் பிரதானமான மூலமான சூரிய ஒளி, வைட்டமின் D இன் உள்ளார்ந்த உற்பத்திக்கு உதவுகிறது.

  சில உணவுகள் மட்டுமே ஒரு நிலையான வைட்டமின் டி தினசரி விநியோகத்தை வழங்க முடியும்;அவை பெரும்பாலும் கிழங்கான் மற்றும் சூரை மீன்கள், மீன் கல்லீரல் எண்ணெய்கள், பாலாடைக்கட்டி மற்றும் முட்டையின் மஞ்சள் கருக்கள் ஆகும்.இதுவும்,ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை 10 முதல் 3 மணி வரை சூரியனில் 10 முதல் 15 நிமிடங்கள் கால வரையறை இருப்பது, உங்கள் தினசரி வைட்டமின் டி தேவைகளை பூர்த்தி செய்யக்கூடும்.

  இந்த வைட்டமின் D வளங்களில் எது அவர்களுக்கு மிகவும் ஒத்துக்கொள்ளும் என்பதை தீர்மானிக்கவும், அவர்கள் தினசரி அளவைப் பெறுவதை உறுதிசெய்யவும் பெரும்பாலான நோயாளிகளுக்கு நான் அறிவுறுத்துகிறேன்.ஒருவேளை பற்றாக்குறை இருந்தால் அவர்கள் அதை வைட்டமின் டி சேர்க்கை பொருட்கள் மூலம் ஈடு செய்ய வேண்டும்.

  வைட்டமின் டி குறைபாட்டிற்கு என்ன காரணம்?

  பொதுவாக வெயிலில் போதுமான நேரத்தை செலவிடாதவர்கள் வைட்டமின் D குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள். வெயிலில் செலவழித்த நேரத்தைத் தவிர,சூரிய ஒளி மிகவும் பலவீனமாக இருந்தாலும்,அல்லது பயன்படுத்தப்படும் சூரிய திரை திரவத்தின், சூரிய பாதுகாப்பு காரணி 30க்கு மேல் இருந்தாலும் என பல காரணங்களாலும் இது ஏற்படலாம்.

  உங்கள் சருமத்தின் நிறம், உங்கள் உடலில் வைட்டமின் டி அளவை உற்பத்தி செய்ய, வெளியில் அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியத்திற்கும் பங்களிக்கிறது.பொதுவாக உடல்பருமன் உள்ள நோயாளிகளுக்கு உணவு வைட்டமின் டி குறைவாக உறிஞ்சப்படுவதாலும், சிறுகுடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாத கொழுப்பு வெளியேற்றாமல் இருப்பதாலும் ,உடல் பருமன் வைட்டமின் டி குறைபாட்டுடன் தொடர்புடையது.

  வயது மெதுவாக உடலின் வைட்டமின் டி ஒருங்கிணைக்கும் திறன்களைக் குறைக்கின்றதால்,நிச்சயமாக வயது மிக முக்கியமான காரணமாகும்.ஆனால்,சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தால், இந்த ஒட்டுமொத்த விளைவுகளை அடக்க இயலும்.

  ஒரு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே, குறைபாட்டிற்கு கூடுதலாக இணை உணவுகளை எடுத்து கொள்ளவேண்டுமா?

  மருத்துவரின் பரிந்துரையைப் பொறுத்து கூடுதலாக வழங்க பல வகையான சூத்திரங்கள் இந்தியாவில் உள்ளன. சிறந்த உறிஞ்சுதலுக்கு துகள்கள்/ மாத்திரைகள்/ காப்ஸ்யூல்கள் போன்ற சூத்திரங்கள்,கொழுப்பு பொருட்களுடன் எடுக்கப்பட வேண்டும்.மேலும் நிர்வகிக்க தயாராக உள்ள மிக நுண்ணிய (நானோ) திரவ சூத்திரங்களும் உள்ளன.

  வைட்டமின் டி நானோ துகள்கள் சூத்திரங்களுடனான ஆய்வுகள் நோயாளியின் வாழ்க்கைக் குறியீட்டின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் திரவ சூத்திரங்களின் நல்ல செயல்திறனைக் காட்டுகின்றன.உங்களுக்கு மிகவும் பொருத்தமானது எது என்பதை உங்கள் மருத்துவர் தீர்மானிக்க முடியும்.

  மாறுபட்ட நோயாளி சுயவிவரங்கள் கொண்டுள்ள, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அகவைப்பிரிவில், வைட்டமின் டி குறைபாடு தேவைகள் குறித்து கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதனை சார்ந்துள்ள பலவற்றை நிவர்த்தி செய்யவும் மருத்துவர்கள்,சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  Abbott-ன் வலுவான, சுறுசுறுப்பான வாழ்க்கை(Abbott’s ‘D Strong, Active Life’) பிரச்சாரம் நமது நாட்டின் நல்வாழ்வுக்கு முக்கியமான ஒரு சுகாதாரப் பிரச்சினையை அணுகுகிறது. மேலும் தகவலுக்கு இங்கே அழுத்தவும்.

  பொறுப்பாகாமை

  இது அபோட் இந்தியாவுடன் கூட்டாக உள்ளது. மேலும், கொச்சி ஆஸ்டர் மருத்துவத்தில்,மூத்த உட்சுரப்பியல் இணை ஆலோசகர் டாக்டர் ஆர்.வி.ஜெயக்குமார் MD DM, MNAMS, FRCP என்பவரால் எழுதப்பட்டது.  இந்த உள்ளடக்கத்தில் தோன்றும் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்கு மட்டுமே மற்றும் எந்த மருத்துவ ஆலோசனையையும் கொண்டிருக்கவில்லை.உங்கள் நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்.

  குறிப்புகள் :
  ⦁ Ritu G, Gupta A. Vitamin D Deficiency in India: Prevalence, Causalities and Interventions. Nutrients 2014, 6, 729-775
  ⦁ Aparna P et al. Vitamin D deficiency in India. Family Med Prim Care. 2018 Mar-Apr; 7(2): 324–330.
  ⦁ Goel S. Vitamin D status in Indian subjects: a retrospective analysis. Int J Res Orthop. 2020 May;6(3):603-610
  ⦁ Zhang and Naughton. Vitamin D in health and disease: Current perspectives. Nutrition Journal 2010, 9:65
  ⦁ Nair R, Maseeh A. Vitamin D: The “sunshine” vitamin. J Pharmacol Pharmacother. 2012 Apr-Jun; 3(2): 118–126.
  ⦁ Kennel KA, Drake MT, Hurley DL. Vitamin D Deficiency in Adults: When to Test and How to Treat. Mayo Clin Proc. 2010;85(8):752-758
  ⦁ 7. Cleveland Clinic. Vitamin D Deficiency. Available at: https://my.clevelandclinic.org/health/articles/15050-vitamin-d--vitamin-d-deficiency
  ⦁ 8. Bothiraja C, Pawar A & Deshpande G. Ex vivo absorption study of a nanoparticle based novel drug delivery system of vitamin D3(Arachitol Nano™) using everted intestinal sac technique. J Pharma Investing. 2016;46(5):425-432.

  இது ஒரு கூட்டு இடுகை.
  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Vitamin D

  அடுத்த செய்தி