முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பெண்களின் உள்ளாடைகளில் வெள்ளைக் கறை திட்டுக்கள் படிவதற்கு என்ன காரணம்..? சரி செய்யும் வழிகள்

பெண்களின் உள்ளாடைகளில் வெள்ளைக் கறை திட்டுக்கள் படிவதற்கு என்ன காரணம்..? சரி செய்யும் வழிகள்

உள்ளாடையில் திட்டுக்கள் ஏற்படுவது ஏன்?

உள்ளாடையில் திட்டுக்கள் ஏற்படுவது ஏன்?

உங்கள் பிறப்புறுப்பில் இயல்பாகவே லேக்டோபெசில்லி என்னும் நன்மை செய்யும் பாக்டீரியா இருக்கிறது. இது பிறப்புறுப்பில் பிஹெச் அளவை சமநிலையில் வைத்திருப்பதுடன், கெட்ட பாக்டீரியாக்களை வளர விடாமல் தடுக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

பார்ப்பதற்கு அழகான, ஆடம்பரமான உள்ளாடைகளை வாங்குவதற்கு பெண்களில் பலர் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதே சமயம், பெண்கள் பிராக்களை காட்டிலும் பேண்டீஸ்களுக்கு குறைவான முக்கியத்துவம் தான் கொடுக்கின்றனர். பேண்டீஸ்களை நீங்கள் ஓரிரு முறை அணிந்த பிறகு, அதில் லேசான கறை திட்டுக்குள் (பேட்சஸ்) படிந்திருப்பதை பார்த்திருக்க முடியும்.

நீங்கள் எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் உள்ளாடையை விட்டு அந்த திட்டுக்கள் அகலாது. குறிப்பாக, கருப்பு அல்லது மிக அடர்த்தியான கலர் கொண்ட பேண்டீஸ்களில் இத்தகைய கறைகள் பட்டவர்த்தனமாக தெரியும்.

அதே சமயம், இந்த திட்டுக்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதை ஒருமுறையாவது சிந்தித்துப் பார்த்துள்ளீர்களா? இதற்கான விடை எளிமையானது. உங்கள் பிறப்புறுப்பு தான் இதற்கு காரணமாகும். ஏன், எப்படி என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

உள்ளாடையில் திட்டுக்கள் ஏற்படுவது ஏன்?

பெண்களின் பிறப்புறுப்பில் பொதுவாகவே அமிலங்களின் சுரப்பு அதிகமாக இருக்கும். இது உங்கள் உள்ளாடையில் கசியும் போது வெள்ளை அல்லது மஞ்சள் நிற திட்டுக்கள் படியலாம். பொதுவாக, பெண்ணுறுப்பின் பிஹெச் அளவு என்பது 3.5 முதல் 7 வரையில் இருக்கும். இதுதான் உங்கள் உள்ளாடையில் கறை திட்டுக்களை ஏற்படுத்தும். நீங்கள் துவைத்த பிறகு, அவை ஆரஞ்சு நிறத்தில் மாறி விடும்.

திட்டுக்கள் இருப்பது மோசமான அறிகுறியா?

உங்கள் பிறப்புறுப்பில் இயல்பாகவே லேக்டோபெசில்லி என்னும் நன்மை செய்யும் பாக்டீரியா இருக்கிறது. இது பிறப்புறுப்பில் பிஹெச் அளவை சமநிலையில் வைத்திருப்பதுடன், கெட்ட பாக்டீரியாக்களை வளர விடாமல் தடுக்கிறது. இதில், அமிலக் கசிவு காற்றோட்டத்தில் படும்போது, உள்ளாடையில் அவை திட்டுக்களை ஏற்படுத்தி விடுகின்றன. பெண்களின் பிறப்புறுப்பு இயற்கையாகவே சுத்தம் செய்யப்படுவதன் விளைவாகவே இந்தக் கசிவு ஏற்படுகிறது. ஆகவே, இதுகுறித்து நிச்சயமாக நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.

நீங்கள் அணியும் பிரா உங்களுக்கு சௌகரியமாக உள்ளதா..? இறுக்கமாக இருந்தால் இந்த பிரச்சனை வரலாம்..!

பிஹெச் அளவு மாறுபடும் :

ஆரோக்கியமான பெண்ணுறுப்பு ஒன்றில் இருந்து வெளியேறும் அமிலத்தில், பல்வேறு காரணங்களால் பிஹெச் அளவு மாறுபடும். செக்ஸ் வாழ்க்கை, ஹார்மோன்கள் மற்றும் மாதவிலக்கு போன்ற காரணங்களால் இது மாறுபடலாம். எனினும், இந்த அமிலக் கசிவு மிக அதிகமாக இருந்தது என்றால் உடனடியாக மகளிர் நலனுக்கான மருத்துவரை அணுகவும்.

திட்டுக்களை எப்படி தடுப்பது?

அமிலக் கசிவு என்பது கவலைப்படக் கூடிய விஷயம் இல்லை என்றாலும் கூட, உங்கள் மனதிற்குப் பிடித்த அழகான உள்ளாடையை கறையில் இருந்து காப்பதற்கான சில டிப்ஸ்களை நீங்கள் கடைப்பிடிக்கலாம்.

* நாள் முழுவதும் ஒரு பேண்டீலைனரை நீங்கள் அணிந்து கொள்ளலாம். இது உங்கள் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் அமிலக் கசிவுக்கும், உள்ளாடைக்கும் இடையே ஒரு தடுப்பாக செயல்படும். இதனால், உள்ளாடை மீது நேரடியாக கறை படியாது.

* ஒவ்வொரு முறையும், உள்ளாடையை பயன்படுத்திய பிறகு உடனடியாக அதை துவைக்கவும். இதனால், உள்ளாடையுடன் கறை ஒட்டிக் கொள்வது தடுக்கப்படும் அல்லது அதன் அளவு குறைவாக இருக்கும். உள்ளாடையை துவைப்பதற்கு முன்பாக சில நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் துவைக்கவும்.

First published:

Tags: Inner Wear Guide, Intimate Hygiene, Women Health