Home /News /lifestyle /

குளிர்காலத்தில் கரும்பு ஜூஸ் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

குளிர்காலத்தில் கரும்பு ஜூஸ் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

கரும்பு சாறு

கரும்பு சாறு

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க கரும்பு சாறு உதவுகிறது. எனவே உங்க மாதவிடாய் காலம் ஒரு வாரத்திற்கு முன்பே கரும்பு சாற்றை தவறாமல் குடியுங்கள்.

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் மட்டுமின்றி குளிர்காலத்திலும் கரும்பு ஜூஸ் புத்துணர்ச்சியை தரும். ஒரு கிளாஸ் கரும்பு சாறு , எலுமிச்சை சாறு, சிறிது புதினா மற்றும் இஞ்சி சேர்த்து தயாரித்தால் கரும்பு ஜூஸ் ரெடியாகிவிடும். இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

கரும்பு சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்...

* குளிர்காலத்தில் ஏற்படும் பல்வேறு தொற்றுநோய்களுக்கு கரும்பு ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.

* கரும்பு சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் என பல்வேறு சத்துக்கள் உள்ளன. இவை உடலில் தொற்று நோயை எதிர்த்து போராடவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

* கரும்பு சாறு உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் டீடாக்ஸ் பானமாகவும் இருக்கிறது. இந்த விடுமுறை காலத்தில் நீங்கள் பார்ட்டிகளில் அதிகமாக சென்று சாப்பிட்டால் வீட்டிற்கு வந்ததும் ஒரு கிளாஸ் கரும்பு சாற்றை தவறாமல் அருந்துங்கள்.

* உங்கள் அன்றாட உணவில் கரும்புச் சாற்றை சேர்த்துக்கொள்வதால், உங்கள் எலும்புகள் வலுவடையும்.



* மன அழுத்தத்தை குறைக்கவும், உங்கள் செரிமான அமைப்பை சீரான நிலையில் வைத்திருக்கவும் கரும்பு சாறு உதவுகிறது. வயிற்றில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களைத் தடுக்கிறது.

* கரும்பு சாறு உங்கள் எனர்ஜியை அதிகரிக்கவும், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கவும், UTI தொற்றுகளை தடுக்கவும் மிகவும் உதவியாக இருக்கும்.

* இது மஞ்சள் காமாலை நோயை விரைவாக குணமடைய உதவுகிறது.

* பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க கரும்பு சாறு உதவுகிறது. எனவே உங்க மாதவிடாய் காலம் ஒரு வாரத்திற்கு முன்பே கரும்பு சாற்றை தவறாமல் குடியுங்கள்.

https://www.instagram.com/p/CYA17JGINIn/?utm_source=ig_web_copy_link

ஊட்டச்சத்து நிபுணரான ஜினல் ஷா தனது இன்ஸ்டாகிராமில் கரும்புச் சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஷேர் செய்துள்ளார். அதில், கரும்பு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் அடிக்கடி சாப்பிடுவது நல்லது என குறிப்பிட்டுள்ளார்.

இதில் அதிக அளவு நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது. குளிர்காலத்தில் நாம் அடிக்கடி தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுகிறோம், எனவே கரும்பு சாறு அருந்துவதால் உங்கள் உடலின் நீர் சமநிலையை பராமரித்து நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது என்று ஷா கூறியுள்ளார்.

பிசிஓடி , செரிமானப் பிரச்சனை... சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..? மிஸ் பண்ணிடாதீங்க

கரும்பு சாற்றில் உள்ள AHA (ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள்) சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது. இதில் வைட்டமின் பி 12 நிறைந்துள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக கரும்பு சாறு அருந்தலாம்.

எனவே உங்கள் புது வருட திட்டத்தில் உடல் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்த எண்ணினால் கரும்பு சாற்றை உங்கள் அன்றாட உணவு பட்டியலில் சேர்த்து பயன் பெறுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Health Benefits, Health tips, Sugarcane Juice, Winter

அடுத்த செய்தி