மாம்பழப் பிரியர்கள் கவனத்திற்கு : பழத்தை அரியும் முன் இந்த தகவலைத் தெரிந்துகொள்ளுங்கள்...!

மாம்பழம் கட்டாயம் உண்ண வேண்டும் என்பதற்குப் பல நன்மைக் காரணங்கள் இருப்பது தெரியுமா ?

மாம்பழப் பிரியர்கள் கவனத்திற்கு : பழத்தை அரியும் முன் இந்த தகவலைத் தெரிந்துகொள்ளுங்கள்...!
மாம்பழம் : தினமும் மாம்பழம் சாப்பிட்டால் நமக்கு 60 சதவீதம் வைட்டமின் C கிடைக்கும் என்கிறது அமெரிக்காவின் விவசாயத் துறை. இது கோடை கால நண்பர் என்பதால் எளிதில் கிடைக்கக் கூடிய மாம்பழத்தோடு கூடுதல் சுவைக்காக கிவி பழம் சேர்த்து ஜீஸாக அருந்தலாம்.
  • News18
  • Last Updated: May 14, 2019, 1:58 PM IST
  • Share this:
பழக்கடைகள், தெருவோர கடைகள் என எங்குப் பார்த்தாலும் கண்கவர் மஞ்சள் நிறத்தில் மாம்பழங்கள் ஈர்க்கின்றன. சிலர் அதை வெயிலில் உடல் சூட்டை அதிகரிக்கும் என்கிற ஒற்றைக் காரணத்திற்காக நிராகரிப்பார்கள். ஆனால் மாம்பழம் கட்டாயம் உண்ண வேண்டும் என்பதற்குப் பல நன்மைக் காரணங்கள் இருப்பது தெரியுமா ?

சுவை மிகு மாம்பழ சதையில் குறைந்த கலோரி, நார்ச்சத்து விட்டமின் A மற்றும் C ஆகியவை அடங்கியிருக்கின்றன. இதுதவிர கால்சியம், ஸிங்க். வைட்டமின் E , ஆண்டி ஆக்ஸிடண்ட். ஐயர்ன், B6 போன்ற மினரல் மற்றும் ஊட்டச்சத்துகள் பெரிதளவில் இருக்கின்றன.

தேவையற்றக் கொழுப்பைக் குறைக்கும் : இதில் நார்ச்சத்தும் விட்டமின் C இருப்பதால் தேவையற்ற கொழுப்பை நீக்கி சீரான உடல் நிலையை வைத்துக்கொள்ளும்.
புற்றுநோய்க்கு உதவும் : இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மார்பகப் புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோய் கிருமிகள் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கிறது.

கண்களுக்கு ஆரோக்கியம் : உடலுக்குத் தினமும் தேவையான விட்டமின் A சத்தில் 25 சதவீதம் மாம்பழம் அளிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இது பார்வைக் குறைபாடுகளின்றி, கூர்மையான பார்வைப் பெற உதவுகிறது. குறிப்பாகக் கண்களின் வறட்சியையும் போக்குகிறது.தெளிவான சருமம் : முகப்பருக்கள் இல்லாத, வாய் திறந்த சருமக் குழிகள் எதுவுமின்றி தெளிவான மென்மையான முக அழகைப் பெற உதவுகிறது.

உடல் ஒவ்வாமை நீங்கும் : மாம்பழத்தில் டார்டாரிக் ஆசிட், மாலிக் ஆசிட், சிட்ரிக் ஆசிட் போன்றவை அதிகமாக உள்ளதால் உடல் ஒவ்வாமைகளைச் சரிசெய்யும்.

வெயில் பக்கவாதத்தைத் தவிர்க்கலாம் : மாம்பழத்தின் சாறு நிறைந்த சதை உடம்பை குளிர்ச்சியாக்கி உடல் வெப்பமடைதலைக் குறைக்கும். இதனால் வெயில் காலத்தில் ஏற்படும் பக்கவாதமின்றி பாதுகாக்கும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் : இதில் விட்டமின் C மற்றும் A அதிகமாக உள்ளதால் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

இதையும் படிக்க :

இரசாயன கலப்படம் இல்லாத மாம்பழம்... கண்டறிவது எப்படி?
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading