• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பற்களை பாதுகாக்க ஆயில் புல்லிங் தினசரி ஏன் செய்ய வேண்டும் ? கட்டாயம் படிங்க..

பற்களை பாதுகாக்க ஆயில் புல்லிங் தினசரி ஏன் செய்ய வேண்டும் ? கட்டாயம் படிங்க..

காட்சி படம்

காட்சி படம்

நம் வாயில் கிட்டத்தட்ட 600 வகையான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • Share this:
ஆயில் புல்லிங் என்பதை பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். எண்ணெய் கொப்புளிப்பதே ஆயில் புல்லிங் எனப்படும். இவ்வளவு சுலபமா என்றால் ஆம். ஆனால், அதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன.

ஆயில் புல்லிங் என்பது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகளில் ஒன்றாகும். உண்ணக்கூடிய எண்ணெய் அல்லது நெய்யை வாயில் ஊற்றி கொப்புளிப்பது தான் ஆயில் புல்லிங். வாயில் இருக்கும் நுண்கிருமிகளை அகற்றுவதிலும், ஓரல் ஹெல்த் எனப்படும் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் ஆயில் புல்லிங் பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாக, உலக அளவில் இந்த செயல்முறை புகழ் பெற்றது.

இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வாயில் ஊற்றி, வாயின் உட்புறங்களில் நன்றாகப் படுமாறு கொப்புளிக்கும் போது, பல்துலக்கும் போது எட்டாத பகுதிகளையும் எளிதாக சென்றடையும். வாயின் மூலை முடுக்குகளில் ஒளிந்திருக்கும் பேக்டீரியாக்கள் உட்பட நுண்கிருமிகளை அழிக்கும். இது ஈறுகளை பலப்படுத்தி, உமிழ்நீர் உற்பத்தியை அதிகரித்து, உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆயில் புல்லிங் தினசரி செய்ய வேண்டியதற்கான காரணங்கள் :

* வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துங்கள்;

நம் வாயில் கிட்டத்தட்ட 600 வகையான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றில் சில பாக்டீரியாக்கள் ஆரோக்கியமானவை, சில பல் சிதைவு மற்றும் ஈறு சம்மந்தப்பட்ட நோய்கள் போன்ற வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாக்கும்.

தினமும் காலையில் தவறாமல் ஆயில் புல்லிங் செய்வது வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும். இளம் வயதிலேயே ஆயில் புல்லிங் செய்யத் தொடங்குவது பல் சிதைவு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் டென்ட்டல் பிரச்சினைகளைக் குறைக்க பெருமளவில் உதவும்.

also read : சரும பராமரிப்பில் ரெட்டினோலுக்கு மாற்றாக இருக்கும் பாகுச்சியோல்.. இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா ?

பல் சொத்தை மற்றும் ஈறுகள் பாதிப்பைத் தடுக்கிறது:

மேலே குறிப்பிட்டுள்ளது போல, பல்சொத்தை மற்றும் ஈறுகள் வீக்கம் அல்லது ரத்தக்கசிவு ஆகியவை கெட்ட பாக்டீரியாக்களால் ஏற்படும் பொதுவான பல் மற்றும் வாய் ஆரோக்கிய பிரச்சனைகள் ஆகும்.

அதே போல, பாக்டீரியாக்கள் பெரிதாக பாதிப்பது ஈறுகளைத் தான். ஈறுகள் வீக்கம் அல்லது ஈறுகளில் ரத்தக்கசிவு, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, பற்களையும் பாதிக்கக்கூடும். ஈறுகள் அடர்த்தியாக ஆரோக்கியமாக இருந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், பற்களின் எனாமலும் இதனால் பாதிக்கலாம். எனாமல் பாதிப்பு ஏற்பட்டால், பற்கூச்சம் உண்டாகும், பற்கள் எளிதில் உடையக்கூடிய தன்மை ஏற்படும்.

ஆயில் புல்லிங் நன்மைகள் :

வாய் துர்நாற்றத்தைத் தடுத்து, செரிமானத்தை மேம்படுத்தும் :

பலரும் அவதிப்படும் அன்றாடப் பிரச்சனைகளில் வாய் துர்நாற்றமும் ஒன்று. வாய் துர்நாற்றமும், உணவு செரிமானமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. உதாரணமாக, உங்களுக்கு செரிமானக் கோளாறு இருந்தால், அல்லது வயிற்றில் புண் / அல்சர் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதே போல, உங்களுக்கு செரிமானக் கோளாறு இல்லையென்றாலும், நீங்கள் உங்கள் வாய்வழி ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்கவில்லையின்றாலும், கெட்ட பாக்டீரியாக்களாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

ஆயில் புல்லிங் செய்வது, உங்கள் ஒட்டுமொத்த வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், வாய் துர்நாற்றம் நீங்கும். அது மட்டுமின்றி, உங்கள் உணவுக் குழாயை சீர்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்தும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

மோசமான டென்ட்டல் ஹெல்த் அல்லது ஓரல் ஹெல்த், இதயத்தை நேரடியாக பாதிக்கும் தன்மை கொண்டது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆயில் புல்லிங் செய்வது உங்கள் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய்களில் இருந்து பாதுகாப்பை அளிக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: