Home /News /lifestyle /

நோய்களில் இருந்து தப்பிக்க வேப்பிலை, மஞ்சள் இருந்தால் போதும்… ஏன் தெரியுமா..?

நோய்களில் இருந்து தப்பிக்க வேப்பிலை, மஞ்சள் இருந்தால் போதும்… ஏன் தெரியுமா..?

 வேப்பிலை, மஞ்சள்

வேப்பிலை, மஞ்சள்

வேம்பு மற்றும் மஞ்சள் ஆகியவை கிருமிகள் மற்றும் பாக்டீரியா போன்றவற்றின் தொற்றிலிருந்து உடலை பாதுக்காக்க உதவுகிறது.

‘நோயற்ற வாழ்வே குறைவில்லா செல்வம்’ என்பது பழமொழி. அப்படிப்பட்ட நோயற்ற வாழ்வுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், இயற்கையான, பாரம்பரியமாக நாம் சாப்பிட்டு வந்த உணவு முறையை பின்பற்ற வேண்டும் என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. குறிப்பாக வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவை இன்றளவும் ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் தவிர்க்க முடியாத மருந்தாக இருந்து வருகிறது.

மஞ்சள் மற்றும் வேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அதனால் தொன்று, தொற்று திருவிழாக்களில் மஞ்சள் தண்ணீரை தெளித்தும், கோயில் முழுவதும் வேப்பிலையை கட்டியும் கூட்டம், கூட்டமாக கூடும் மக்களிடையே எவ்வித தொற்றும் பரவாமல் தடுத்து வருகின்றனர்.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது கிருமிகளிடம் இருந்து தற்காத்து கொள்வதற்காக வேப்பிலை சாறு மற்று மஞ்சள் கலந்த தண்ணீரை வீட்டு வாசலிலும், ஊர் முழுவதும் மக்கள் தெளித்து வந்த காட்சிகளை தமிழ்நாடு முழுவதும் காண முடிந்தது. மேலும் மஞ்சள், வேப்பிலை, இஞ்சி, மிளகு, சீரகம் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த பொருட்களை பயன்படுத்தி கசாயம் குடித்ததும் நல்ல பலனை கொடுத்தது.

மருத்துவ குணங்கள் நிறைந்த வேம்பு மற்றும் மஞ்சளை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்க கூடிய சில பயனுள்ள தகவல்களை பார்க்கலாம்...



நுண்ணுயிரிகளை கொல்லும்:

வேம்பு மற்றும் மஞ்சள் ஆகியவை கிருமிகள் மற்றும் பாக்டீரியா போன்றவற்றின் தொற்றிலிருந்து உடலை பாதுக்காக்க உதவுகிறது. இரண்டிலும் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு திறன்களுக்கான சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

காய்ச்சல் பாதுகாப்பு:

பருவநிலை மாறும் போது இருமல், மூக்கு அடைப்பு, காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் வருவது வழக்கமான ஒன்று. அப்படிப்பட்ட சமயங்களில் வேம்பு மற்றும் மஞ்சள் கலந்த மருந்து அல்லது கசாயம் எடுத்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். மஞ்சளில் உள்ள ஆன்டிவைரல் பண்புகள் வைரஸ் காய்ச்சலை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.



நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்:

உடலில் நோய் எதிப்பு சக்தியை பலப்படுத்த வேப்பிலை மற்றும் மஞ்சள் பயன்படுகிறது. வேப்பிலை வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. தோல் மற்றும் உடலில் உள்ள நஞ்சை நீக்க பயன்படுகிறது.

ஆர்டிபிஷியல் கலர், பிரிசர்வேட்டிவ்ஸ், அடிக்டிவ்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் கலக்கப்படாத சுத்தமான மஞ்சளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். இவை இரண்டிலும் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலின் சக்தியை மேம்படுத்த உதவுகின்றன.

வெந்தயத்தில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி தெரியுமா..? அவற்றை தினமும் உட்கொள்ளும் வழி முறைகள்

சரும பராமரிப்பு:

சருமத்தில் ஏற்படும் முகப்பரு, வடுக்கள் போன்றவற்றிற்கு மஞ்சள் மற்றும் வேப்பிலை நல்ல பலனைக் கொடுக்கிறது. வேப்பிலை மற்றும் மஞ்சளை உட்கொள்வதன் மூலமாகவோ, அல்லது ஃபேஸ்பேக் போல் தயாரித்து முகத்தில் போட்டு வந்தாலோ நாளாடைவில் சருமம் பளபளப்பாக மாறும்.



மேலும் மஞ்சள் மற்றும் வேப்பிலையை உட்கொள்வதால் உடலின் வெளிப்புறம் மட்டுமல்லாது உட்புறமும் சுத்தப்படுத்தப்படும். இவை கூடுதலாக முகத்தில் தோன்றும் துளைகள் மற்றும் தளர்வான தோலை இறுக்க உதவுகிறது.

(துறப்பு: இந்தக் கட்டுரையில் பகிரப்படும் நல்வாழ்வுக் கருத்துக்கள் பெரும்பாலும் அடிக்கடி நடைமுறைகள் மற்றும் இயல்பான தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை. வாசகர்கள் இதனை பின்பற்றும் முன்னதாக மருத்துவரிடம் ஆலோசனை பெற பரிந்துரைக்கப்படுகிறது)

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Immunity boost, Neem, Turmeric

அடுத்த செய்தி