Home /News /lifestyle /

பெரும்பாலான மனிதர்கள் ஏன் 80 வயதிற்குள் இறக்கிறார்கள் - ரகசியத்தை கண்டறிந்த நிபுணர்கள்!

பெரும்பாலான மனிதர்கள் ஏன் 80 வயதிற்குள் இறக்கிறார்கள் - ரகசியத்தை கண்டறிந்த நிபுணர்கள்!

காட்சி படம்

காட்சி படம்

பெருந்தொற்றுக்கு முன் வரை மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 80 வயதாக இருந்தது.

பாலூட்டிகளில் சில மிக குறுகிய காலம் வாழ்கின்றன, சில நீண்ட ஆயுளுக்கு வாழ்கின்றன. மனிதர்களில் நீண்ட, ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கையை வாழ விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன.? மனிதர்கள் நீண்ட ஆயுளை வாழ்வது புதிதல்ல. எனினும் வெகு சிலரே 100 வயது மற்றும் அதற்கு மேல் வாழ்கிறார்கள்.

முதுமையில் பலர் உடல்நலப் பிரச்சனைகளால் போராடுகிறார்கள். அதே சமயம் இதில் பலர் 80 வயதிற்குள் இறக்கிறார்கள்.. இது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா.? இதனிடையே 80 வயதிற்குள் மனிதர்கள் ஏன் இறக்கிறார்கள் என்ற் மர்மத்திற்கான விடையை கண்டறிந்து விட்டதாக நிபுணர்கள் நம்புகிறார்கள்.

பெருந்தொற்றுக்கு முன் வரை மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 80 வயதாக இருந்தது. எனினும் கடந்த 2 ஆண்டுகளில் கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு, அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் காரணமாக இந்த சராசரி ஆயுட்காலம் சற்று குறைந்துள்ளது. மனிதர்களும், விலங்குகளும் ஒரே மாதிரியான மரபணு மாற்றங்களை எதிர்கொண்ட பிறகு இறப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். டிஎன்ஏ பிழைகளின் வேகத்தை குறிப்பிடும் இந்த கண்டுபிடிப்பு ஒரு இனத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிப்பதில் முக்கியமானது.

also read : நீங்கள் சரியான டூத்பேஸ்டைதான் தேர்வு செய்கிறீர்களா..? சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்..!

 



 

கேம்பிரிட்ஜில் உள்ள வெல்கம் சாங்கர் இன்ஸ்டிடியூட் நிபுணர்களின் புதிய ஆராய்ச்சியின் படி, மரபணு சேதத்தின் வேகம் (speed of genetic damage) உயிர் வாழ்வதற்கான திறவுகோலாக இருக்கலாம் என தெரிகிறது. முன்னதாக நீண்ட ஆயுளுக்கான காரணமாக அளவில் சிறிய விலங்குகள் தங்களைவிட பெரிய அளவு உயிரினங்களை விட வேகமாக அதிக ஆற்றலை எரிக்கிறார்கள் என்று கூறி இருந்தனர்.

also read : ஏன் வாழை இலையில் சாப்பிட வேண்டும்.? உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்..

அதாவது நிபுணர்களின் கூற்றுப்படி, உருவத்தின் அளவு நீண்ட ஆயுளுக்கு அடிப்படையாகும். பெரிய விலங்குகளை விட சிறிய விலங்குகள் அதிக ஆற்றலை எரிப்பதால் மரபணு சேதத்தின் வேகம் உயிர்வாழ்வதற்கான அடிப்படையாக கருதப்படுகிறது.

உருவத்தின் அளவு எப்படி நீண்ட ஆயுளுக்கு அடிப்படையாக இருக்க முடியும்?

நிபுணர்களின் கூற்றுப்படி, நீண்ட காலம் வாழும் விலங்குகள் டிஎன்ஏ பிறழ்வு (DNA mutations) விகிதத்தை குறைக்கும் திறன் கொண்டது. அதாவது அவை வயதைப் பொருட்படுத்தாமல் டிஎன்ஏ பிறழ்வுகளின் விகிதத்தை வெற்றிகரமாக குறைக்க முடியும். அதனால் தான் ஒரு ஒட்டகச்சிவிங்கி பொதுவாக 24 ஆண்டுகள் வாழும் போது, நேக்ட் மோல்-எலிகள் 25 ஆண்டுகள் வாழ்கிறது. அதிக அல்லது குறைந்த ஆயுட்காலத்தின் பின் மரபணு சிதைவு மற்றும் டிஎன்ஏ பிறழ்வுகளின் விகிதம் இருக்கலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.



நேக்ட் மோல்-எலிகள் வருடத்திற்கு 93 பிறழ்வுகளை சந்திக்கின்றன, ஆனால் ஒட்டகச்சிவிங்கிகளில் 99 பிறழ்வுகள் ஏற்படுகின்றன. மறுபுறம் பிற வகை எலிகள் ஆண்டுக்கு சராசரியாக 796 பிறழ்வுகளை கொண்டு 3.7 ஆண்டுகள் மட்டுமே சராசரி ஆயுளை கொண்டுள்ளன. மேலும் சமீபத்திய ஆய்வில் ஆயுட்காலம் சோமாடிக் பிறழ்வு விகிதத்திற்கு நேர்மாறான விகிதத்தில் இருப்பதை வல்லுநர்கள் கண்டறிந்தனர். இதுவே ஒரு பாலூட்டியின் ஆயுட்காலம், பிறழ்வுகள் நிகழும் விகிதம் குறைவாக இருப்பதை பொறுத்தது என்று நிபுணர்கள் முடிவுக்கு வர காரணமாக அமைந்தது.

also read : சளி, காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி அவசியமா? கொரோனாவுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?



இது மனிதர்களில் வயதான செயல்முறையை பற்றிய சிறந்த புரிதலுக்கான கதவுகளை திறக்கும் என்று நம்பப்படுகிறது. முதுமை என்பது செல் டர்ன்ஓவர் ரேட்டை(cell turnover rate) பொறுத்து மற்றும் செல்கள் மற்றும் திசுக்கள் சேதமடையும் வேகத்தைப் பொறுத்து ஒரு சிக்கலான செயல்முறை என்று உறுதியாக கூறலாம். செல் டர்ன்ஓவர் ரேட்டை கட்டுக்குள் கொண்டுவந்தால், ஒருவர் சராசரியாக 80 ஆண்டுகளுக்கு மேல் வாழ முடியும் என்பதே ஆய்வில் ஈடுபடாத நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Death, Health, Live

அடுத்த செய்தி