முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இவர்களைத்தான் கொசு தேடித்தேடி கடிக்கும்! - காரணம் சொல்லும் புதிய ஆய்வு முடிவு!

இவர்களைத்தான் கொசு தேடித்தேடி கடிக்கும்! - காரணம் சொல்லும் புதிய ஆய்வு முடிவு!

கொசு

கொசு

பெண் கொசுக்களே மனிதர்களை கடிக்கின்றன. ஒரு பெண் கொசு, தனது ஆறுவார ஆயுள்காலத்தில், உயிர் வாழ்வதற்கு தேவையான புரோட்டினை பெறுவதற்காகவும், இனத்தை பெருக்கும் வகையில் முட்டை இடுவதற்காகவும், மனிதர்களை கடித்து ரத்தத்தை உறிஞ்சுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கூட்டமாக பலர் இருந்தாலும், ஒரு சிலரை மட்டுமே தேடி வந்து கொசுக்கள் கடிப்பது உண்டு. இது ஏன் என கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

சிறிய உயிரினமாக இருந்தாலும், மனிதன் மீது கொசுக்கள் ஏற்படுத்தும் தாக்கம் மிகமிக அதிகம். கொசு கடித்ததால் ஏற்பட்ட மலேரியா உள்ளிட்ட நோய்களால், உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, ஏடிஸ் எகிப்தி (Aedes aegypti) வகை கொசுக்கள் ஜிகா, டெங்கு, சிக்குன்குன்யா, மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை பரப்பி வருகின்றன.

கொசுவர்த்தி சுருள், கொசுவிரட்டி மருந்துகள், உடல் முழுவதையும் மறைக்கும் ஆடை, கொசுவலை என கொசுக்களிடமிருந்து தப்பிக்க மனிதர்கள் எத்தனை வழிமுறைகளை கடைபிடித்தாலும், கொசுக்களிடம் இருந்து தப்பிக்கவே முடிவதில்லை.

பெண் கொசுக்களே மனிதர்களை கடிக்கின்றன. ஒரு பெண் கொசு, தனது ஆறு வார ஆயுள்காலத்தில், உயிர் வாழ்வதற்கு தேவையான புரோட்டினை பெறுவதற்காகவும், இனத்தை பெருக்கும் வகையில் முட்டை இடுவதற்காகவும், மனிதர்களை கடித்து ரத்தத்தை உறிஞ்சுகிறது. ஏ, பி, ஓ வகை ரத்த குரூப்பை சேர்ந்தவர்களையே கொசு அதிகமாக கடிக்கிறது; கருவுற்ற பெண்களை அதிகமாக கடிக்கிறது; வெள்ளைப் பூண்டு மற்றும் வைட்டமின் பி உணவுகளை எடுத்துக் கொண்டால் கொசு கடிக்காது.

கொசுக் கடி தொடர்பாக இதுபோன்ற பலவகையான ஊக செய்திகள் உலா வந்தாலும், இவை எதுவுமே அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அது மனிதரிடமிருந்து வெளிப்படும் வாசனையே கொசுக்களை ஈர்க்கிறது என்பதுதான்.

அதிலும் கூட்டமாக பலர் இருந்தாலும் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் தேடி வந்து கடிக்கின்றன. இதை கவனத்தில் கொண்டு, மனிதர்களை கொசுக்களிடமிருந்து பாதுகாக்க பல்வேறு ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து வருகின்றனர். அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள ராக்பில்லர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் (லெஸ்லி வோஸ்ஸல், மார்க்கிரேட் ஹேர், ஒலிவா, யங்கர், சயோவோ லு) ஆகியோர், கொசுக் கடி குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மனிதர்களை இரு பிரிவுகளாக பிரித்துவைத்து, ஆய்வு மேற்கொண்ட நிலையில், ஒரு சிலரை மட்டும் ஏடிஸ் எகிப்தி கொசுக்கள் தேடிச் சென்று கடித்தன.

மனிதர்களிடமிருந்து விதவிதமான வாசனை வெளியாகிறது. இதற்கு முக்கிய காரணம், நமது தோலில் சுரக்கும் அமிலங்கள். இதை தோலில் உள்ள பாக்டீரியாக்கள் பயன்படுத்திக் கொள்வதால், வாசனை உருவாகிறது. இது மனிதர்களுக்கு மனிதர் வேறுபடுகிறது. இந்த வாசனை, உடல் வெப்பம் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றை அறிந்து கொசுக்கள் மனிதர்கள் தேடி வந்து கடிக்கின்றன. குறிப்பாக கார்பாக்சிலிக் (carboxylic) அமிலம் சுரப்பவரின் வாசனையே கொசுக்களை அதிக அளவில் ஈர்க்கின்றன. இதுமட்டுமன்றி, Aedes aegypti கொசுக்களுக்கு மனிதர்களின் வாசனையை கிரகிக்கும் ஒரு தனித்திறன் இருப்பதையும் கண்டறிந்தனர்.

Also Read : ஒரே கொசுத் தொல்லையா..? இந்த செடிகளால் வீட்டை அலங்கரியுங்கள்..!

மனிதர்களை நோக்கி கொசுக்கள் ஈர்க்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பதே ஆராய்ச்சியாளர்களின் நோக்கம். இந்த நோக்கத்திற்கு, புதிய பாதை வகுத்து தந்திருக்கிறது தற்போதைய முடிவுகள். இதிலிருந்து கொசு மனிதன் இடைடேயான தொடர்பை துண்டிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் வரும் என்பதே ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை.

First published:

Tags: Dengue, Malaria, Mosquito, Mosquito bite