ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆண்கள் அந்தரங்க உறுப்பை பராமரிப்பது ஏன் அவசியம்..? சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

ஆண்கள் அந்தரங்க உறுப்பை பராமரிப்பது ஏன் அவசியம்..? சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

ஆண்கள் அந்தரங்க உறுப்பை பராமரிக்க டிப்ஸ்

ஆண்கள் அந்தரங்க உறுப்பை பராமரிக்க டிப்ஸ்

பெண்கள் மட்டுமே தங்கள் அந்தரங்க சுகாதாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் ஆண்களும் கூட தங்கள் அந்தரங்க சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் சுகாதாரத்தின் அனைத்து அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரம் பலரும் அந்தரங்க சுகாதாரத்தில் உரிய கவனம் செலுத்துவதில்லை. ஒருவரது உடல் நன்றாக, ஆரோக்கியமாக இருப்பதில் அந்தரங்க பாகங்கள் உட்பட உடலின் சரியான சுகாதாரமான பராமரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தவொரு தனிப்பட்ட சுகாதாரத்தை போலவே மோசமான துர்நாற்றங்களை தவிர்ப்பது, சிறந்த ஆரோக்கியத்தை பேணுவது உள்ளிட்டவை அந்தரங்க சுகாதாரத்திற்கு முக்கியமானது.

இது இருபாலருக்கும் பொருந்தும். ஏனென்றால் பெண்கள் மட்டுமே தங்கள் அந்தரங்க சுகாதாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் ஆண்களும் கூட தங்கள் அந்தரங்க சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதுபற்றி கூறும் நிபுணர்கள் ஈரப்பதம் மற்றும் தொற்றுநோய்க்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய உடலின் அந்தரங்க பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்துவது ஆண்களுக்கும் முக்கியம் என்கின்றனர். ஆண்களின் பிறப்புறுப்பு பகுதி உடலின் மற்ற பாகங்களை விட அதிக சென்சிட்டிவானது. எனவே மென்மையான மற்றும் பயனுள்ள தனி சுகாதார நடைமுறை தேவைப்படுகிறது.

மோசமான அந்தரங்க சுகாதாரம் பாலியல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், துர்நாற்றம், அரிப்பு, ரேஷஸ், பிம்பில்ஸ் மற்றும் அதிக வியர்வையை ஏற்படுத்தும். சோப்புகள் கடுமையானவை, காரத்தன்மை கொண்டவை என்பதால் அவற்றை கொண்டு அந்தரங்க பகுதியை பகுதியை சுத்தம் செய்வது நல்லதல்ல. அடிக்கடி கழுவுவதை தவிர ஆண்கள் தங்கள் அந்தரங்க சுகாதாரத்தை பராமரிக்க இன்டிமேட் வாஷ் தயாரிப்புகளை பயன்படுத்துவதும் முக்கியம்.

ஆண்கள் இன்டிமேட் வாஷ் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

- அந்தரங்க பகுதியை அவ்வப்போது சுத்தம் செய்யாமல் இருப்பது அழுக்கு மற்றும் வியர்வை குவிந்து, துர்நாற்றம் மற்றும் ஆண்குறி நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது. இன்டிமேட் வாஷ் இதனை தடுக்கிறது.

- அந்தரங்க பகுதியில் ஏற்படும் எரிச்சல், வீக்கத்தைக் குறைத்து அந்த பகுதியை பாதுகாப்பாக வைக்கிறது.

- தொற்று மற்றும் அரிப்பு இருந்தால் அதை சரி செய்து நிம்மதியாக உணர வைக்கிறது. இதன் தொடர் பயன்பாடும் மீண்டும் தொற்று அல்லது அரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

- அந்தரங்க பகுதிக்கு அருகில் இருக்கும் மூலையை ஃபிரெஷ்ஷாக வைக்கிறது.

- இன்டிமேட் வாஷ் அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் அழற்சியை குறைக்கும்.

எப்படி தேர்வு செய்ய வேண்டும்.?

குறிப்பாக ஆணின் பிறப்புறுப்புக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இன்டிமேட் வாஷை ஆண்கள் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யும் வாஷில் எந்தவிதமான தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்களும் இல்லாத ஆர்கானிக் தயாரிப்பை தேர்ந்தெடுப்பது நல்லது. வாசனை பொருட்கள், செயற்கை கலர் மற்றும் சிந்தடிக் சேர்க்கைகள் இல்லை மற்றும் சாஃப்டானது என்பது உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

Also Read : Breast Cancer Month 2022 : பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களையும் தாக்கும் மார்பகப் புற்றுநோய்... தெரிந்துகொள்ள வேண்டிய அறிகுறிகள்

மேலும் எப்படி பராமரிக்கலாம்?

உடலின் மற்ற பகுதிகளை போலவே, அந்தரங்க பகுதிக்கு சமமான கவனிப்பு தேவை. அந்தரங்க சுகாதாரத்தை பராமரிக்க குளிக்கும் போது தவறாமல் கழுவி சுத்தம் செய்து நல்ல துணியால் துடைக்க வேண்டும். இறுக்கமான உள்ளாடைகளை அணிவதை தவிர்த்து காற்றோட்டமான உள்ளாடைகளை அணிய வேண்டும்.அந்தரங்க பகுதியில் ட்ரிம்மிங், ஷேவிங் உள்ளிட்ட பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Intimate Hygiene, Men Health