முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பெண்களை விட ஆண்கள் ஸ்கின் கேன்சரால் அதிகம் இறக்கின்றனர் : என்ன காரணம்..?

பெண்களை விட ஆண்கள் ஸ்கின் கேன்சரால் அதிகம் இறக்கின்றனர் : என்ன காரணம்..?

சரும புற்றுநோய்

சரும புற்றுநோய்

தோல் புற்றுநோயில் பாசல் செல் கார்சினோமா, ஸ்குவாமஸ் செல் கார்சினோமா மற்றும் மெலனோமா ஆகிய 3 முக்கிய வகைகள் உள்ளன.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

பெரும்பாலும் சூரிய ஒளியில் மிக அதிக நேரத்தை செலவிடும் எவருக்கும் தோல் செல்களின் அசாதாரண வளர்ச்சி காரணமாக தோல் புற்றுநோய் ஏற்படலாம். சில நேரங்களில் நேரடி சூரிய ஒளியில் அடிக்கடி வெளிப்படாத சரும பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்படலாம். தோல் புற்றுநோயில் பாசல் செல் கார்சினோமா, ஸ்குவாமஸ் செல் கார்சினோமா மற்றும் மெலனோமா ஆகிய 3 முக்கிய வகைகள் உள்ளன.

இதில் கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள மெலனோமா (Melanoma), சருமத்தில் அதிகம் ஊடுருவக்கூடிய தோல் புற்றுநோயாகும், மேலும் அதிக இறப்பு அபாயம். தோலுக்கு நிறத்தை கொடுக்கும் நிறமியை உருவாக்கும் செல்களான மெலனோசைட்டுகள் அளவுக்கு மீறி வளர ஆரம்பிக்கும் போது இந்த வகை புற்றுநோய் ஏற்படுகிறது.இந்த வகை ஆபத்தான புற்றுநோய் தங்களை தாக்காமல் பார்த்து கொள்வதில் பெண்களை விட ஆண்களே மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறது சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று.

மேலும் இந்த ஆய்வில் பெண்களை விட ஆண்களே மெலனோமாவா கேன்சரால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி, கடந்த 2012 முதல் 2016 வரையிலான டேட்டாக்களின் படி, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் சுமார் 77,698 புதிய மெலனோமா பாதிப்புகள் பதிவாகின. இதில் 45,854 பேர் ஆண்கள் மற்றும் 31,845 பேர் பெண்கள். தோல் புற்றுநோயின் அதிக நிகழ்வு விகிதம் ஹிஸ்பானிக் அல்லாத வெள்ளை நிற ஆண்களிடையே இருந்தது (100,000 க்கு 34.9%), மற்றும் குறைந்த விகிதம் கறுப்பின பெண்களிடையே இருந்தது (100,000 க்கு 0.9%).

வெள்ளையர்களில், ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட2 மடங்கு அதிகமாக தோல் புற்றுநோயால் இறப்பதாக தரவுகள் கண்டறிந்துள்ளன.இந்தியாவில்...நம் நாட்டை பொறுத்த வரை ஆண்டுக்கு சராசரியாக சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மெலனோமா கேன்சர் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. எனினும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து புற்றுநோய்களை ஒப்பிடும் போ தோல் புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருப்பதை ICMR கண்டறிந்துள்ளது.

ஸ்கின் கேன்சரை பொறுத்த வரை இந்தியாவின் வடகிழக்கில் அதிக பாதிப்புகள் காணப்படுகின்றன. ஆண்களில் 5.14% மற்றும் பெண்களில் 3.98% பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கிழக்கு பகுதியில் வசிக்கும் ஆண்களில் சுமார் 6.2% பேர் ஸ்கின் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மற்றும் கிழக்கு இந்தியாவில் தோல் புற்றுநோயின் அதிக நிகழ்வுகள் கங்கைப் படுகையில் உள்ள ஆர்சனிக் வெளிப்பாடு காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

ஆண்களுக்கு மெலனோமா கேன்சர் ஏற்பட சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், நிபுணர்கள் நம்பும் சில காரணங்கள் இங்கே...

ஆண்களின் அணுகுமுறை..

கணக்கெடுப்பு ஒன்றில் பங்கேற்ற ஆண்களில் கால் பகுதிக்கும் குறைவானவர்கள் மட்டுமே எப்போதும் அதிக வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதாக கூறியுள்ளனர். சுமார் நான்கில் ஒரு பங்கு ஆண்கள் பாதுகாத்து கொள்ளும் அளவுக்கு அதிக வெயில் இருப்பதாக நினைக்கவில்லை என கூறினர். குறிப்பாக 23% ஆண்கள் வெளியே செல்லும் போது சூரிய ஒளியிலிருந்து தங்கள் சருமத்தை பாதுகாப்பதை பற்றி சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் மேகமூட்டமான கிளைமேட்டில் கூட, சூரிய ஒளி சரும செல்களை சேதப்படுத்தும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். சன்ஸ்கிரீனை சரியாகப் பயன்படுத்தினால் மெலனோமா மற்றும் பிற வகை தோல் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

தோல் வகைகளில் உள்ள வேறுபாடுகள்..

ஆண்கள் தடிமனான தோலை கொண்டுள்ளனர், பெண்களை விட ஆண்களின் தோலில் கொலாஜன் அதிகமாக உள்ளது. பெண்களுடன் ஒப்பிடும்போது, தோல் வகையின் இந்த வேறுபாடுகள் ஆண்களின் தோலை UV சூரிய ஒளி அதிகம் சேதப்படுத்த காரணமாக அமைகிறது என ஆராய்ச்சி காட்டுகிறது.

இந்த 5 இலைகள் உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுமாம்...

ஈஸ்ட்ரோஜன்..

ஈஸ்ட்ரோஜன் அதிகமாக உள்ளவர்களுக்கு மெலனோமாக்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தோல் புற்றுநோய்க்கு எதிராக போராடி மீள்வதில் ஆண்களை காட்டிலும் பெண்களின் என்னைகை அதிகம் என்ற தரவு இதை உறுதிப்படுத்துகிறது. பருமனான ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

புரிதலின்மை..

பெரும்பாலான தோல் புற்றுநோய்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை, எனவே மக்கள் ஆரம்ப அறிகுறிகளை புறக்கணிக்கிறார்கள். ஆண்களில் ஏற்படும் பெரும்பாலான மெலனோமா கேன்சர் தோள்பட்டை அல்லது பின்புறம் போன்ற கடின பகுதிகளில் ஏற்படுகின்றன. எனவே லேசான மாற்றம் தெரிந்தால் கூட உடனடியாக பரிசோதிப்பது நல்லது. தாமதப்படுத்துவது சிகிச்சை கடினமாகிவிடும், இது இறப்பு விகிதத்தை அதிகரிக்கும்.

First published:

Tags: Cancer, Men's health, Skin Care