ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்ப காலத்தில் சிறுநீரக வேலை திறன் டெஸ்ட் ஏன் எடுக்கப்படுகிறது..?

கர்ப்ப காலத்தில் சிறுநீரக வேலை திறன் டெஸ்ட் ஏன் எடுக்கப்படுகிறது..?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 68 : சிலருக்கு கர்ப்பம் இல்லாத போது சிறுநீரகத்தின் வேலை தேவையான அளவு இருக்கும். ஆனால் கர்ப்ப காலத்தில் அதன் வேலைப்பளு அதிகரிக்கும் பொழுது மெதுவாக அதனுடைய வேலை திறன் குறைவு வெளியே புலப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஷர்மிளா வங்கியில் பணிபுரிகிறார். திருமணமாகி ஒரு வருடமாகிறது. ஒரு வருடமாகவே குழந்தை வேண்டுமென்று திட்டமிட்டு , கர்ப்பத்திற்கு முந்தைய ஆலோசனைக்கும் வந்திருந்தார்.

இந்த மாதம் அவருடைய பீரியட்ஸ் ஒரு வாரம் வரை வரவில்லை. அதனால் ஆவலோடு, மருத்துவமனைக்கு அவரும் கணவரும் வந்திருந்தனர்.

முதல் கட்டமாக ஷர்மிளாவுக்கு யூரின் பிரக்னன்சி டெஸ்ட் எனப்படும் சிறுநீரில் செய்யப்படும் பரிசோதனையை எடுத்துப்பார்த்தோம்.

அதில் இரண்டு அடர்ந்த ரோஸ் நிற கோடுகள் கர்ப்பம் இருப்பதை உறுதி செய்தன. இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சி.

"அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் டாக்டர்! " என்று ஆவலுடன் கேட்டார் ஷர்மிளா.

என் ஆலோசனை:

மூன்று விஷயங்கள் மிக மிக முக்கியமானவை.

1. ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை ஏற்கனவே தொடங்கவில்லை எனில் தொடங்க வேண்டும்

2. கர்ப்ப காலத்திற்கான அடிப்படை ரத்த பரிசோதனைகளைச்செய்ய வேண்டும்

3. ஏழு வாரத்தில் ஒரு ஸ்கேன் செய்து கர்ப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

"டாக்டர்! ஆறு மாதத்திற்கு முன்பு தான் எல்லா பரிசோதனைகளும் எடுத்தோம். இப்போது அதையே உபயோகப்படுத்த முடியுமா? இல்லை! புதியதாக தான் செய்ய வேண்டுமா ? "என்று கேட்டார் ஷர்மிளா.

கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் போதே உடலில் கர்ப்ப ஹார்மோன் bHCG ஆல் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.

கர்ப்ப காலத்தில் செய்யப்படும் பரிசோதனைகளின் நார்மல் ரேஞ்ச் எனப்படும் இயல்பான அளவு கூடுதல் அல்லது குறைவு போன்றவையும் கர்ப்ப காலத்திற்கு ஏற்றவாறு மாறும். மிகவும் அவசியம்.

அத்துடன் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே எடுக்கப்படும் ரத்த பரிசோதனைகள் நமக்கு பிரச்சனைகள் ஏதும் இல்லை என்ற ஒரு உறுதியை வழங்கும்.

கர்ப்பத்தின் பிந்தைய காலத்தில் ஏதேனும் சிறுநீரக கோளாறு சர்க்கரை தைராய்டு போன்றவை ஏற்பட்டால் ஏற்கனவே உள்ள அடிப்படை பரிசோதனைகளை வைத்து அதோடு ஒப்பிட்டு பார்ப்பதற்கும் எதுவாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் கிட்னியின் வேலையை டெஸ்ட் செய்து பார்ப்பது எந்த அளவுக்கு முக்கியமானது?

கர்ப்ப காலத்தில் ஒரு தாயின் எல்லா உறுப்புகளுமே பல மடங்கு அதிகமான வேலையை செய்கின்றன. முதலில் ஏற்படும் மாற்றம் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதாகும். அவ்வாறே நம்முடைய சிறுநீரகத்தின் வேலைப்பளுவும் அதிகரிக்கிறது. அத்துடன் சிறுநீரகத்தின் அமைப்பு சிறுநீர் பாதை போன்றவற்றிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகிறது.

சிறுநீரகத்தின் வேலை குறைவாக இருந்தால் கர்ப்ப காலம் அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகத்தினுடைய பளுவும் அதிகரிக்கும். அதை ஈடு செய்ய ரத்த அழுத்தம் அதிகமாகலாம். அடிக்கடி சிறுநீரக தொற்று ஏற்படலாம். எதிர்ப்பு சக்தி குறையலாம் . ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும். மற்றும் கர்ப்பகால கருப்பையாக கரு வளர்ச்சி குறைவு எனப்படும் கருப்பைக்குள்ளையே குழந்தை எடை அதிகரிக்காமல் இருக்கும் .

குழந்தையினுடைய வளர்ச்சியை பாதிக்கும்.

சிலருக்கு கர்ப்பம் இல்லாத போது சிறுநீரகத்தின் வேலை தேவையான அளவு இருக்கும். ஆனால் கர்ப்ப காலத்தில் அதன் வேலைப்பளு அதிகரிக்கும் பொழுது மெதுவாக அதனுடைய வேலை திறன் குறைவு வெளியே புலப்படும்.

அதனால் முதலில் ஒரு அடிப்படை ரத்த பரிசோதனையும் பிறகு ஏழாவது மாதத்தில் மீண்டும் அனைத்து அடிப்படை பரிசோதனைகளும் அனைவருக்கும் செய்யப்படும். இதற்கு நடுவே ஏதேனும் அறிகுறி இருப்பின் அல்லது சந்தேகம் இருப்பின் தேவைப்படும் பரிசோதனைகள் மீண்டும் செய்யப்படலாம்.

பெண் குயின் கார்னர் 67 | கர்ப்ப காலத்தில் லிவர் டெஸ்ட் அவசியமா?

இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பெண்கள் எல்லா பரிசோதனைகளையும் செய்ய சொல்லும் போது ஒன்று பயப்படுகிறார்கள் அல்லது இந்த டெஸ்ட் தேவை இல்லை என்ற எண்ணமும் ஒரு சிலருக்கு இருக்கிறது. எனவே இதை சரியாக புரிந்து கொண்டால் பயமும் பதட்டமும் இருக்காது. தேவையான பரிசோதனைகளை செய்து கர்ப்ப காலத்தில் நிம்மதியாக இருக்கலாம் அது மட்டும் அல்ல. ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் ஆரம்ப கட்டத்திலேயே அதை கண்டுபிடித்தால் அதற்கான தீர்வு சுலபமாக இருக்கும். அதோடு குழந்தையை பாதிப்பதற்கு முன்பாகவே அந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் . இதுவே கர்ப்ப காலத்தில் செய்யப்படும் பல்வேறு பரிசோதனைகளுக்கான அடிப்படையாகும் ",என்று கூறினேன்.

"புரிந்தது டாக்டர்! .நான் இந்த வாரத்திற்குள் எல்லா பரிசோதனைகளையும் செய்துவிட்டு முடிவுகளை எடுத்துக் கொண்டு வருகிறேன் என்றார்" ஷர்மிளா.

கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

First published:

Tags: Kidney, Pregnancy test, பெண்குயின் கார்னர்