Home /News /lifestyle /

ஃபிட்டா இருந்தாலும் இரத்த அழுத்தம் அதிகரிக்க என்ன காரணம்..? கவனிக்க தவறும் விஷயங்கள்...

ஃபிட்டா இருந்தாலும் இரத்த அழுத்தம் அதிகரிக்க என்ன காரணம்..? கவனிக்க தவறும் விஷயங்கள்...

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

இந்தியாவில் 8ல் ஒரு நபர் ஹைப்பர்டென்ஷனால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இந்த ஹைப்பர்டென்ஷன் பாதிப்பு கொண்டவர்களில் 12 சதவீத மக்கள் மட்டுமே தங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியாவில் இளம் வயது மரணங்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர்டென்ஷன் ஆகிய பிரச்சனைகள் பல ஆண்டுகளாக எந்தவித அறிகுறிகளும் காட்டாமல் நம் உடல்நிலையை பாதிக்கக்கூடியவை ஆகும்.

உண்மையை சொல்வதென்றால், இந்தியாவில் 8ல் ஒரு நபர் ஹைப்பர்டென்ஷனால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இந்த ஹைப்பர்டென்ஷன் பாதிப்பு கொண்டவர்களில் 12 சதவீத மக்கள் மட்டுமே தங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கட்டுப்படுத்தப்படாத உயர் ரத்த அழுத்தம் தான் ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்டிரோக் போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாகும். இந்தியாவில் மூன்றில் பங்கு மரணங்களுக்கு இதுதான் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக, சமீப காலங்களில் 30 முதல் 40 வயது உடைய இளம் வயது பிரபலங்கள் பலர் ஹார்ட் அட்டாக் காரணமாக உயிரிழந்துள்ளனர்.



உயர் ரத்தம் அழுத்தம் - இதை ஏன் சைலண்ட் கில்லர் என்கிறோம்

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்பவர்கள், தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் கூட ரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறது. சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது தலைசுற்றல் அல்லது தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஹைப்பர்டென்ஷன் கொண்ட சிலருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் ஹார்ட் அட்டாக்கில் சென்று முடிகிறது. முறையான மருத்துவ பரிசோதனைகளை அவ்வப்போது செய்து கொள்ளாதவர்கள் இதுபோன்று பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? உடனே மருத்துவரை அணுகுங்கள்...

கட்டுக்கோப்பாக உள்ளவர்கள் பாதிக்கப்படுவது ஏன்

மரபு ரீதியான பிரச்சனைகள், உடல் வாகு, உணவுப் பழக்கம் போன்ற பல காரணங்களால் உயர் ரத்த அழுத்த பிரச்சினை வருகிறது. மரபு கூறுகள் மற்றும் வயோதிகம் ஆகிய இரண்டையும் நாம் தடுக்க முடியாது என்கிற சூழலில் உயர் ரத்த அழுத்த பிரச்சனை வந்தே தீரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.



பரிசோதனைகள் அவசியம்

30 வயதை தாண்டியவர்கள், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓராண்டு ஒருமுறையேனும் இதய நல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இசிஜி, எக்கோ, சிபிசி, கேஎஃப்டி, லிபிட் புரொஃபைல் (கொலஸ்ட்ரால் பரிசோதனை), ரத்த சர்க்கரை அளவு, சிறுநீர் பகுப்பாய்வு போன்ற பரிசோதனைகள் அவசியமானது.

சப்பாத்தியில் இத்தனை வகைகளா..? உடல் எடையை குறைப்போருக்கு டிப்ஸ்

உப்பு குறைக்கப்பட வேண்டும்

பெரும்பாலான இந்தியர்கள் நாளொன்றுக்கு 1.5 டீ ஸ்பூன் அல்லது 3,400 மி.கி. அளவுக்கு மேலாக உப்பு எடுத்துக் கொள்கின்றனர். அதிக உப்பு சாப்பிடுவது ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டிரோக் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆகவே, உப்பை குறைக்க வேண்டும்.



சமையல் எண்ணெயில் கவனம் தேவை

ரிஃபைண்ட் எண்ணெய் அல்லது ஏற்கனவே சமைக்கப்பட்ட எண்ணெய்யை மீண்டும் உபயோகிப்பது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கருப்பாக மாறிய, புகை ஏறிய பழைய எண்ணெய்யை பயன்படுத்தும் தெருவோரக் கடை உணவுகளை தவிர்க்க வேண்டும். செக்கில் ஆட்டப்பட்ட கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.

அதிக புரதம் கூடாது

உடலுக்கு புரதச்சத்து அவசியம்தான் என்றாலும், மிகுதியாக எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்கள், இதயம் போன்றவற்றின் நலனை அது பாதிக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Blood Pressure

அடுத்த செய்தி