Home /News /lifestyle /

கொரோனா தொற்றுக்கு பின் உங்கள் டூத்பிரஷை மாற்றுவது ஏன் மிகவும் முக்கியம்?

கொரோனா தொற்றுக்கு பின் உங்கள் டூத்பிரஷை மாற்றுவது ஏன் மிகவும் முக்கியம்?

brushing

brushing

COVID-19 | இம்முறை மக்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாகவும் கூட வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சமீபத்தில் கோவிட் 19 வைரஸிலிருந்து மீண்டவர்களும் கூட மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும் முக்கியம்.

மேலும் படிக்கவும் ...
மெல்ல மெல்ல கோவிட்-19 கேஸ்கள் மீண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளன. தினசரி தொற்று எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது, அவற்றில் அதிக எண்ணிக்கையிலான மறு தொற்று கேஸ்களும் உள்ளன.

கோவிட்-19 தொற்றுநோயின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது, ​​மறுபடியும் பாதிக்கப்படுவது மிகவும் பொதுவானதாக இல்லை, ஆனால் இம்முறை அப்படி அல்ல, தற்போது வைரஸ் தாக்குதல் சற்றே வித்தியாசமானதாக உள்ளது

அதாவது இம்முறை மக்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாகவும் கூட வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சமீபத்தில் கோவிட் 19 வைரஸிலிருந்து மீண்டவர்களும் கூட மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும் முக்கியம்.

அப்படியான ஒரு நடவடிக்கையில், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, தொற்று நோய் காலத்தில் நீங்கள் பயன்படுத்திய பல் துலக்கும் பிரஷை தூக்கி ஏறிய வேண்டும்.

Also Read : தினமும் காலை 6 -7 வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையெல்லாம் இருக்காதாம்

கோவிட்-19 வைரஸ் ஆனது பிளாஸ்டிக் பரப்புகளில் நீண்ட காலம் தங்கியிருக்கும், எனவே உங்கள் பழைய டூத் பிரஷை தொடர்ந்து பயன்படுத்தினால், வைரஸ் உங்களுக்குள் மீண்டும் நுழைந்து, மீண்டும் உங்களை பாதிப்படைய செய்யும் வாய்ப்புகள் அதிகமாகும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்கள் பழைய டூத் பிரஷை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில், அது உங்களை மீண்டும் தொற்று நோய் அபாயத்திற்குள் செல்ல வைப்பது மட்டுமல்லாமல், ஒரே குளியலறையைப் பகிர்ந்து கொள்ளும் உங்களின் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் கோவிட்-19 அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

Also Read : உங்கள் நகங்களை வைத்தே உடலில் உள்ள பிரச்சனைகளை கண்டுபிடித்து விடலாம்

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீங்கள் குணமடைந்த பிறகு மீண்டும் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, உங்களின் டூத் பிரஷை மட்டுமின்றி பழைய டங் கிளீனரையும் (நாக்கை சுத்தம் செய்யும் கருவி) அப்புறப்படுத்த வேண்டும்.

நினைவூட்டும் வண்ணம், கோவிட்-19 வைரஸ் நமது நோயெதிர்ப்பு சக்தியை உருக்குலைக்கும், அதன் விளைவுகள், நீங்கள் தொற்று நோயில் இருந்து குணமடைந்த பிறகும் நீண்ட காலம் உடலுக்குள் இருக்கும். குறிப்பாக வாயை தொடர்புடைய பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

கோவிட் 19ல் இருந்து மீட்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்பின் காரணமாக வாயில் வறட்சி அல்லது ஈறு சார்ந்த பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்கலாம். இது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது உடன் மற்ற சில பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

Also Read : உங்கள் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்..

இதுபோன்ற சூழ்நிலையில், சுகாதாரமான நல்ல பழக்க வழக்கங்கள் ஆனது கோவிட்-19 தொற்றின் மறுவருகையை அல்லது பிற பிரச்சனைகளின் அபாயத்தை நிச்சயம் குறைக்கும்.

குறிப்பிட்ட விடயத்தில் முன்னெச்சரிக்கையாக நீங்கள் செய்யக்கூடியது என்னவென்றால், வைரஸ் அல்லது பாக்டீரியாக்களின் உருவாக்கத்தை அழிக்க சந்தையில் வாங்க கிடைக்கும் சொல்யூஷன்களைக் கொண்டு உங்கள் வாயைத் தொடர்ந்து கழுவ வேண்டும்.

ஒருவேளை மவுத்வாஷ் கிடைக்கவில்லை என்றால், குறைந்த பட்சம் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தவும், இந்த செயல்முறையும் கிட்டத்தட்ட மவுத்வாஷ் செய்வது போன்றது தான்.

Also Read : இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே வைட்டமின் டி மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்துங்கள்..!

தற்போது வரை குறிப்பிட்ட வைரஸ் ஆனது எவ்வாறு வினைபுரிந்து நம் உடலைத் தாக்கும் என்பது துல்லியமாகத் தெரியாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமே அதை தவிர்க்க, நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள இருக்கும் ஒரே வழி ஆகும்.

வெளியே செல்லும் போது பாதுகாப்பாக இருங்கள், முக கவசத்தை அணியுங்கள், உங்கள் கைகளை தவறாமல் சுத்தப்படுத்துங்கள் மற்றும் உங்கள் வாய் சார்ந்த சுகாதாரத்தையும் சரிபார்க்கவும்.
Published by:Selvi M
First published:

Tags: Corona, Covid-19, Health

அடுத்த செய்தி