நம்முடைய பணியின் போது வழக்கமான இடைவெளியை நாம் எடுக்க தவறும் பட்சத்தில், மன அழுத்தம், நினைவாற்றல் இழப்பு, சோர்வு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விஞ்ஞான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அதற்கேற்றால் போல், தங்களுடைய பொருளாதார தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக ஓய்வின்றி வேலைக்கு ஓடி கொண்டிருக்கிறோம். இவ்வாறு பணிகளை மேற்கொள்ளும் சமயத்தில், உடல் நலக்குறைபாடு ஏற்படும் போது நம்முடைய வாழ்க்கை மீது தான் குற்றச்சாட்டுகளை நாம் முன்வைக்கிறோம்.. ஆனால் அது முற்றிலும் தவறு எனவும் இதனை நீங்கள் மாற்றி கொள்ளாவிடில் தேவையில்லாத உடல்நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.
மேலும் WHO இன் கூற்றுப்படி, வேலையில் ஓய்வின்றி உழைப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக பல நோய் அறிகுறிகள் நமக்கு ஏற்படுகிறது. இதன் காரணமாக நமக்கு நாள்பட்ட சோர்வு, பணிக்கு வராமல் இருப்பது, எரிச்சல் போன்றவை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. எனவே பணியின் போது வழக்கமான இடைவெளியோடு அதாவது விடுமுறை எடுத்து வேலை செய்து பாருங்கள். நிச்சயம் கீழ்வரும் நன்மைகளை நீங்கள் உங்களது வாழ்க்கையில் பெற முடியும் என கூறப்படுகிறது.
ஓய்வெடுத்துப் பணியாற்றுவதால் ஏற்படும் நன்மைகள்:
படைப்பாற்றல் அதிகரிப்பு (Boosts creativity):
உங்களது வேலையில் ஓய்வெடுக்காமல் நீங்கள் பணியாற்றும் போது, உங்களது ஆக்கப்பூர்வமானச் செயல்களை நீங்கள் செய்ய தவற நேரிடும். எனவே சிறிய இடைவெளி எடுத்து நீங்கள் பணியாற்றும் போது, புதிய யோசனைகள் மற்றும் உங்களது பணிகளை நீங்கள் திறம்பட செய்யலாம்.
இந்த 5 பாதிப்புகள் இருந்தால் இதயத்திற்கு ஆபத்து வரலாம்... எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்..!
மன அழுத்தம் குறைவு:
பணியின் போது ஓய்வெடுக்காமல் நீங்கள் பணியாற்றும் போது, எரிச்சலான உணர்வு உங்களுக்கு ஏற்படும். மேலும் உங்களது பணியில் ஆர்வம் காட்டாமல் ஏதோ ஒரு மன அழுத்தம் உங்களுக்கு ஏற்படும். எனவே பணியில் சில நேரங்கள் ஓய்வெடுத்து மன அழுத்தத்தை சரிசெய்வதோடு, உங்களது பணித்திறனை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.
மேம்பட்ட நினைவாற்றல் (Improved memory):
நாம் எந்த பணிகளை செய்தாலும் அதில் புதிய விஷயங்களை யோசித்து செய்வோம். குறிப்பாக ஒவ்வொரு நிமிடமும் புதிய புதிய தகவல்களை நாம் யோசிக்க நேரிடும். ஆனால் ஓய்வின்றி நீங்கள் பணியாற்றும் போது உங்களின் நினைவாற்றல் குறைகிறது. எந்தவிதமான புதிய விஷயங்களையும் உங்களால் மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்படும். எனவே சற்று ஓய்வெடுத்து நீங்கள் பணியாற்றுங்கள்.
மன அழுத்தம் முதல் உடல் பருமன் வரை : உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்..!
கவனத்தை அதிகரிக்க உதவுதல்:
யாராக இருந்தாலும் நீண்ட நேரம் உட்கார்ந்து திறமையாக வேலை செய்ய முடியாது. மேலும் உங்களது ஒட்டுமொத்த செயல்திறனும் முற்றிலும் பாதிக்கும். எனவே பணியின் போது சற்று ஓய்வெடுத்து பணியாற்றி உங்கள் பணியின் கவனத்தை அதிகரிக்க உதவுங்கள்.
அடுத்த முறை நீங்கள் தொடர்ந்து வேலை செய்வதால் சோர்வடையும் போது சற்று ஓய்வெடுத்து உங்களின் திறன்களை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. எனவே தேவையான இடைவெளியோடு உங்களது பணிகளை நீங்கள் மேற்கொண்டு உற்சாகத்துடன் பணிகளை மேற்கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.