ஒரு நபர் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவை. ஆனாலும் ஒரு சில சத்துக்கள் இன்றியமையாதவை. பெண்களை பொறுத்தவரை இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து ஆகிய இரண்டு கனிமச்சத்துக்களுமே மிக மிக அவசியம். ஏனென்றால் இந்த இரண்டு ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டால் பல பெண்கள் தீவிரமாக பாதிப்படைகின்றனர்.
பூப்படையும் பருவம், கர்ப்ப காலம், குழந்தை பிறந்த பிறகான ஆரோக்கியம், மெனோபாஸ் என்று பல்வேறு காலகட்டங்களில் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு சில சத்துக்கள் அவசியம். குறிப்பாக பிரசவம் முடிந்த பிறகு பெண்களுக்கு கேல்சியம் சத்து அதிகமாக தேவைப்படுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிரசவித்த பின்னர் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தை பிரசவித்த பின்பும் தொடரும். சுகப்பிரசவமாக இருந்தாலும் சரி, அறுவை சிகிச்சை செய்தாலும் சரி, உடலில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன் சுரப்பில் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குழந்தைக்கு பாலூட்டுவது, தூக்கமின்மை ஆகியவை உடல் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும்.
பிரசவித்த பின்பு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை சாப்பிடவில்லை என்றால், உடல் நலம் மேம்படுவது கேள்விக்குறி தான். வைட்டமின் டி, கொழுப்பு அமிலங்கள், செலினியம், இரும்பு மற்றும் கால்சியம் ஆகிய சத்துக் குறைபாடுகள் பிரசவித்த பெண்களுக்கு காணப்படும். தாய்ப்பால் தான் குழந்தைக்கான ஒரே உணவு என்பதால், தாய்க்கு மட்டுமல்லாமல் குழந்தைக்கும் கால்சியம் சத்து அதிகமாகத் தேவைப்படும்.
பாலூட்டும் தாய்மார்கள் நினைவில் கொள்ள வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்!
தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணின் எலும்பின் அடர்த்தி குறைகிறது
சரியான ஊட்டச்சத்து இல்லாமல் போனால், தீவிரமான சத்து குறைபாட்டால் பெண்களுக்கு பல்வேறு நோய்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் எலும்பு அடர்த்தி 3 முதல் 5 சதவிகிதம் வரை குறைவதாக firstcry நடத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. கைக்குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் வழியாகவே கால்சியம் சத்து கிடைப்பதால், தாய்க்கு கால்சியம் சத்து தேவைப்படுகிறது.
தாய்ப்பாலும் ஈஸ்ட்ரோஜன் குறைபாடும்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைவாக சுரக்கிறது. எலும்புகளின் பாதுகாப்புக்கு உதவும் ஹார்மோன்களில் ஈஸ்ட்ரோஜனும் ஒன்று. எனவே ஈஸ்ட்ரோஜன் பற்றாக்குறை, தாயின் உடலின் உள்ள எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும்.
பிரசவத்திற்கு பின் உள்ள காலங்களில் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.!
கால்சியம் சத்து நிறைந்த சைவ உணவுகள்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், குறைந்தது 1000 மில்லிகிராம் அளவாவது கால்சியம் உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. பொதுவாக சைவ உணவுகளில் அதிக கால்சியம் இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால், கால்சியம் சத்து நிறைந்த பல உணவுகள் உள்ளன. பால், தயிர், வெண்ணெய், பாலாடை, பன்னீர், உள்ளிட்ட உணவுகளில் கல்சியம் நிறைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Calcium, Post pregnancy diet